Wednesday 14 December 2011 | By: Menaga Sathia

ஸ்டப்ட் எண்ணெய் கத்திரிக்காய் /Stuffed Ennai Kathirikkai

ஆசியா அக்காவின் குறிப்பை பார்த்து ஒரு சில மாற்றங்களுடன் செய்தது.
தே.பொருட்கள்
சின்ன கத்திரிக்காய் - 6
வெங்காயம்,தக்காளி - தலா 1/2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் குறைவாக
புளிவிழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
வெல்லம் - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

வறுத்து அரைக்க

காய்ந்த மிளகாய் - 3
தனியா - 1/2 டீஸ்பூன்
மிளகு,வெந்தயம்,கடுகு - தலா 1/4 டீஸ்பூன் கொஞ்சம் குறைவாக
சோம்பு,சீரகம்,எள் - தலா 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டீஸ்பூன்

செய்முறை

*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைக்கவும்.

*பின் வெங்காயம்,தக்காளியையும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கத்திரிக்காயை 4ஆக கீறி வறுத்தரைத்த பொருளை ஸ்டப் செய்யவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும். 

*பின் கரம் மசாலா+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி ஸ்டப் செய்த கத்திரிக்காயை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*கத்திரிக்காய் ஒரளவுக்கு நிறம் மாறி வரும் போது அரைத்த வெங்கய தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.


*புளி விழுதை சிறிது நீரில் கரைக்கவும்.இதனுடன் வறுத்தரைத்த மசாலா மீதமிருந்தால் கரைக்கவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்து வரும் போது புளிகரைசல்+உப்பு சேர்க்கவும்.

**நன்கு வெந்து கிரேவியாக வரும்போது வெல்லம்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*குக்கரில் செய்தால் நிறைய எண்ணெய் சேர்த்து செய்யவேண்டும்,அப்போழுதுதான் அடிபிடிக்காமல் வேகும்.

*குறைவான எண்ணெயிலேயே கடாயில் சிறுதீயில் அடிக்கடி கிளறிவிட்டு செய்யலாம்.

*புலாவ்,பிரியாணி,கலவை சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.

*இதனுடன் கத்திரிக்காய் வெந்த பிறகு சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து செய்தால் க்ரெவியாக பரிமாறலாம்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

கத்தரிக்காய் வாசனை தூக்குது....

K.s.s.Rajh said...

அருமையான சுவை

MANO நாஞ்சில் மனோ said...

கத்தரிக்கா'ன்னா எனக்கு உசிரு, ம்ம்ம் படமே அதன் ருசியை உணர்த்துகிறது...!!!

சி.பி.செந்தில்குமார் said...

ஆசிய அக்கா, தேசிய தங்கை அவ்வ்வ்வ்வ்

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக இருக்கு மேனகா.

Asiya Omar said...

சூப்பர்,மேனகா.உன்னோட பிரியாணி ரெசிபீஸ் விதம் விதமாக இருக்கு.செய்யணும்.

Raks said...

Super a irukku! Nice recipe :)

Unknown said...

I have kathirikka only if it is completely mashed. But this stuffed version is exceptional. Love it.

Unknown said...

My favorite way to have kathirikkai!

Sangeetha M said...

very nice recipe...masala stuffed brinjal looks inviting!!

Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway

Priya Sreeram said...

good one; my family fav

01 09 10