இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.அதற்காக ஸ்பெஷலா செய்யனும்னு நினைத்த போது கை முறுக்கு செய்ய ஆசை வந்துடுச்சு.முதன்முதலாக முயற்சி செய்தது.பல யூடியூப் வீடியோகளை பார்த்து முயற்சி செய்தது.ஷேப் சரியாக வரவில்லை ஆனாலும் இனி அடிக்கடி செய்யும்போது சரியா வந்துடும்னு நினைக்கிறேன்...
முதல் முறையாக செய்ததால் 1/2 கப் அரிசியில் மட்டும் செய்து பார்த்தேன்.
தே.பொருட்கள்
பச்சரிசி -1/2 கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
*அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*துணியில் ஈரம் போக உலர்த்தி,மிக்ஸியில் மாவாக நைசாக அரைக்கவும்.
*அதனுடன் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக தேவையான நீர் சேர்த்து பிசையவும்.
*சிறு உருண்டை அளவில் மாவை எடுத்து பேப்பரில், பாட்டில் மேல்மூடி வைத்து மாவை முறுக்கி வட்டமாக சுற்றி விடவும்.
*சிறிது நேரம் உலரவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முதல் முறையாக செய்ததால் 1/2 கப் அரிசியில் மட்டும் செய்து பார்த்தேன்.
தே.பொருட்கள்
பச்சரிசி -1/2 கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
*அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*துணியில் ஈரம் போக உலர்த்தி,மிக்ஸியில் மாவாக நைசாக அரைக்கவும்.
*அதனுடன் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக தேவையான நீர் சேர்த்து பிசையவும்.
*சிறு உருண்டை அளவில் மாவை எடுத்து பேப்பரில், பாட்டில் மேல்மூடி வைத்து மாவை முறுக்கி வட்டமாக சுற்றி விடவும்.
*சிறிது நேரம் உலரவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பி.கு
*இந்த முறுக்கிற்கு அரிசிமாவை ஈரபதமாகதான் பயன்படுத்த வேண்டும்.மாவை வறுக்ககூடாது.
*1/2 கப் அரிசியில் 1 கப் அளவிற்க்கு அரிசிமாவு வரும்.
*நெய் பயன்படுத்தினால் முறுக்கு சிவந்துவிடும்,அதனால் முறுக்கிற்கு எப்போழுதும் வெண்ணெயை பயன்படுத்தவும்.
*தேங்காய் எண்ணெய் சிறிது சேர்ப்பதால் நன்கு வாசனையுடன் இருக்கும்.
*மாவை சுற்றும்போது கையில் எண்ணெய் தடவி சுற்றினால் ஈசியாக சுற்ற வரும்.
*நான் ரெடிமேட் உளுத்தமாவு பயன்படுத்தியிருக்கிறேன்.உளுத்தமாவு இல்லையெனில் உளுந்தை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுத்து நைசாக பொடிக்கவும்.
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow supera vanthu iruku murukku
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !
முறுக்கு சூப்பரா இருக்கு மேனகா! முதல் முயற்சிலயே இவ்வளவு அழகா சுத்தியிருக்கீங்க! பாராட்டுக்கள்! :)
super yummy !!!>Join us in our Fast food event - Noodles.
krishnar vandhuttara? super murukku pongo.
முறுக்கு நல்லா இருக்கு....ஆனால் இது எந்த ஊர் முறுக்குன்னும் சொல்லுங்க...?
கரெக்ட் உங்க வீட்டில் ஒரு சின்ன கிருஷ்னன் இருக்காங்க. அவசியம் சீடையும், முறுக்கும் செய்யனும்.
என்னோட பேவரிட் + எங்க வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது. என் அப்பா ரொம்ப நன்றாக இதை செய்வார். இந்த முறுக்கை பார்த்ததும் என் அப்பாவின் நினைவு வந்து விட்டது.ரொம்ப அழ்கா சுற்றியிருக்கிங்க. அடுத்தது ஸ்னாக் & ஸிவிட்க்கு வெயிட்டிங்.
wow, super..rombha nalla try pani irukeenga...
Very clear explanation...Love to try this...Thanks for sharing:)
எத்தனை தடவை வீட்டில் செய்தாலும் முறுக்கு, முறுக்கு வடிவம் வருவதில்லை... காராசேவ் ஆகி விடும்... நீங்கள் சொன்னது போல் செய்து பார்ப்போம்... (வீட்டில் குறித்து வைத்துக் கொண்டார்கள்..)
நன்றி… தொடர வாழ்த்துக்கள்...
Traditional snacker...
http://recipe-excavator.blogspot.com
very tasty& perfect murukku..
http://www.indiantastyfoodrecipes.com/
நானா இருந்தா இந்த பதிவுக்கு டைட்டில் காங்கிரஸ் முறுக்குன்னு வெச்சிருப்பேன்
>>>> அதனுடன் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக தேவையான நீர் சேர்த்து பிசையவும்.
நீங்களாக நீங்கலாகன்னு போட்டுட்டீங்களா? ( எக்செப்ட்)
muமுதல் முறையே சூப்பர் ரா sசெய்து இருக்கீங்க..... கை murமுறுக்கு superசூப்பர்....
wow romba nalla vanthu irukey
It has come out so nice, I have to try my hand (literally) in this kaimurukku..
Adada super suthi irrukinga Menaga, unga chinna kannanku yennoda anpu muthangal.. Krishna jayanthi vazhuthukal.
Hi Menaga ,
I'm Punitha of
www.southindiafoodrecipes.blogspot.in
New to your lovely space:)
Kai murukku looks perfect!!
At your free time do visit my blog Dear:)
//ரொம்பவே ஸ்பெஷல்//
இல்லையா பின்னே:)? கிருஷ்ணர் தவழ்ந்து வீட்டுக்கே வந்து விட்டாரே!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
குறிப்புக்கு நன்றி மேனகா!
.
முறுக்கு சூப்பரா இருக்கு
முறுக்கு அருமை.
குட்டி கிருஷ்ணருக்கு செய்த கை முறுக்கு சூப்பர் .
எனக்கும் ரோம்பவேபிடித்த நொறுக்ஸ் இது ..செய்திட்டு சொல்றேன்
Wow lovely. I am ur new follower. Do visit my site when you get time.
http://lavanyasrecipes.blogspot.in/
முறுக்கு அருமையாக வந்திருக்கே!
Wow perfect murukku,love it...
கை முறுக்கு எனக்கு ரொம்ப பிடிச்சது.
அழகாக இருக்கு
wow prefectly made murukku and looks so crunchy dear :)
Post a Comment