தே.பொருட்கள்
வேகவைத்த பாஸ்தா - 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் -2
சுகினி துண்டுகள் -1/2 கப்
ப்ரோக்கலி - 1/2 கப்
துருவிய சீஸ் -மேலே தூவ
உப்பு + ஆலிவ் எண்ணெய் = தேவைக்கு
வெள்ளை சாஸ் (White Sauce/ Bechamel Sauce)
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 2 1/2 கப்
உப்பு -தேவைக்கு
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய்பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும்.
*நீர் ஊற்றாமல் சிறுதீயிலே வைத்து காய்கள் 3/4 பாகம் வேகவைத்தால் போதும்.
*வெள்ளை சாஸ் செய்ய
பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு மைதாவை தூவி கருகாமல் வறுக்கவும்.
பின் உப்பு+பாலை ஊற்றி கட்டிவிழாமல் கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.
பின் மிளகுத்தூள்+ஜாதிக்காய்தூள் சேர்க்கவும்.
வேகவைத்த பாஸ்தா - 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் -2
சுகினி துண்டுகள் -1/2 கப்
ப்ரோக்கலி - 1/2 கப்
துருவிய சீஸ் -மேலே தூவ
உப்பு + ஆலிவ் எண்ணெய் = தேவைக்கு
வெள்ளை சாஸ் (White Sauce/ Bechamel Sauce)
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 2 1/2 கப்
உப்பு -தேவைக்கு
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய்பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும்.
*நீர் ஊற்றாமல் சிறுதீயிலே வைத்து காய்கள் 3/4 பாகம் வேகவைத்தால் போதும்.
*வெள்ளை சாஸ் செய்ய
பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு மைதாவை தூவி கருகாமல் வறுக்கவும்.
பின் உப்பு+பாலை ஊற்றி கட்டிவிழாமல் கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.
பின் மிளகுத்தூள்+ஜாதிக்காய்தூள் சேர்க்கவும்.
*வெள்ளை சாஸ் கலவையில் வேகவைத்த பாஸ்தா மற்றும் காய்கள் சேர்த்து கிளறவும்.
*பேக் செய்யும் டிரேயில் பாஸ்தா கலவையினை வைத்து அதன் மேல் துருவிய சீஸ் தூவி விடவும்.
*180 °C முற்சூடு செய்த அவனில் 10 -15 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை பேக் செய்து எடுக்கவும்.
பி.கு
வெள்ளை சாஸ் செய்ய ஜாதிக்காய்தூள் சேர்ப்பது மிக முக்கியம்.
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
yummy yummy...My fav!
really tempting me...
http://recipe-excavator.blogspot.com
delicious dear...you can link this yummy recipe here:http://easy2cookrecipes.blogspot.co.uk/2012/08/fast-food-event-pasta-for-month-of.html
வெள்ளை சாஸ் குறிப்பிற்கு நன்றி...
நல்ல குறிப்பு! இது எப்போதுமே நன்றாக இருக்கும். தெளிவாய் எழுதியிருக்கிறீர்கள்!!
I made this yesterday.. totally loved it
Yummy pasta, kids would love this..
படிக்கும் போதே செய்து சாப்பிடணும் போலத்தான் இருக்கு...
யாராவது செய்து தந்தால் சாப்பிடலாம்...
நல்ல தகவல்...ஆனால் நான் இதை செய்து பார்த்தது இல்லை..இன்று செய்து பார்த்துவிட்டு சொல்லறேன்....
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
எந்த ஜாதிக்காய்னு தெளிவாசொல்லலை
ஷிவானிக்கு எங்கள் மனம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
வொயிட் சாஸ், ஜாதிக்காய் சேர்க்காமல்தான் செய்வதுண்டு. இப்படியும் செய்துபார்க்கிறேன்.
Never ever added jadhikai to white sauce dear..Sounds really flavorful..Will definitely try :) And yummilicious recipe as always..So creamy and yum :)
Today's Recipe ~ Watermelon Rinds Kootu / Watermelon Rinds Sabzi
Step By Step Instructions For How To chop Watermelon Rinds
YUMMY PASTA :pppp
மேனகா குடம் புளி இலங்கை தமிழர் SHOP IL கொரக்க என்ற சொல்லி விற்பார்கள் பிரான்சில் கிடைக்கும்
இப்ப மா இஞ்சி தொக்கு போட்டேன் வந்து பாருங்க
Wow yummy yum!! Loved the preparation :)
நானும் ஜாதிக்காய் சேர்க்காமல் தான் செய்வேன்
இது மைக்ரோ வேவில் வைத்தால் நல்ல வருமா?
ஓவன் ரிப்பேர் ஆகையால் இப்போதைக்கு ஓவனில் செய்ய முடியாது..
@ஜலிலா அக்கா
உங்க மைக்ரோவேவ் convection mode இருந்தால் பேக் செய்யலாம்....
@பாலராஜன் கீதா
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நன்றி!!!
சகோ மேனகா ...
பாஸ்தா செய்முறையில் நீங்க ப்ரோக்கலி மற்றும் சுகினி துண்டுகள் என்று குறிப்பிடுவது என்னவென்றே தெரியல ..தயவு செய்து அவைகள் என்னவென்று தெரிவிக்கவும்
பாஸ்தா பலமுறை சாப்பிட்டுயிருக்கிறேன் ரொம்ப டேஸ்டியா இருக்கும் ...முதல்முறையா உங்க பதிவை பார்த்து என் அம்மணியிடம் செய்யசொல்லனும் .....மிக்க நன்றி சகோ
@ நாசர்
ப்ரோக்கலி மற்றும் சுகினி இவ்விரண்டும் காய்கள் தான்.
உங்களுக்காக ப்ரோக்கலி பற்றி
http://en.wikipedia.org/wiki/Broccoli
மற்றும் சுகினி
http://en.wikipedia.org/wiki/Zucchini
இவ்விரண்டும் இல்லாமல் உங்களுக்கு விருப்பமான காய்கள் சேர்த்தும் செய்யலாம்.மிக்க நன்றி!!
உடனே பதிலுக்கு மிக்க நன்றி சகோ ....
நான் பல முறை " கீமா பாஸ்தா " டேஸ்டு பண்ணியுள்ளதால் "வெஜ் பாஸ்தா' வில் என்ன இருக்கும் என்று தெரியாமல் கேட்டுட்டேன் ..
சரி அப்புறம் , சைனிஸ் ஸ்டைலில் மீன், நண்டு கறி செய்வது
எப்படி என்று பதிவு போடுவீங்களா ....!!!
@சகோ நாசர்
நண்டு அவ்வளவுவாக சமைப்பதில்லை.நிச்சயம் மீனில் போடுகிறேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!
Wow, so yummy Pasta Recipe. I tried it today!
Post a Comment