Friday 15 March 2013 | By: Menaga Sathia

என்னுடைய பொக்கிஷங்கள்..../My Treasures


ஆசியா அக்கா அவர்கள் அழைத்த தொடர்பதிவு இது...மிக்க நன்றி அக்கா!!

நானும்,அக்காவும் சின்ன பிள்ளையாக இருக்கும் போது அப்பா அக்காவுக்கு ஒரு சமையல் புத்தகம் வாங்கி தந்தார்.அதில்  அனைத்து வகையான தெந்னிந்திய உணவு வகைகளும் நன்றாக இருக்கும்...அப்போதெல்லாம் எனக்கு சமைக்கும் ஆர்வம் இருந்ததில்லை.

முதல்முதலில் நான் சமையல் செய்தது ரசம் தான்.அதில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் எல்லா பொருட்களும் அந்த ரசத்தில் இருக்கும்.வீட்ல இருக்கறவங்க எல்லாம் இது ரசமான்னு கேட்கற அளவில் இருக்கும்,ஆனால் அப்பா மட்டும் தான் ஆஹா ஒஹோன்னு புகழுவார்,ரொம்ப அருமையா இருக்கு,நீ ரசம்  தாளிக்கிற வாசனை நான் வேலை செய்யும் இடம் வரைக்கும்  வந்தது,அதுலயே நான் கண்டு பிடிச்சுட்டேன் நீ ரசம் சமையல் செய்றேன்னு,எனக்கு ஒரே சந்தோஷமா இருக்கும்.

ஒருநாள் அம்மா அப்பாவும் பேசும் போது நான் ஏதோச்சையாக கேட்க நேர்ந்தது,எதுக்கு பொய் சொல்றீங்கன்னுஅம்மா கேட்கும் போது,அதற்கு அப்பா பிள்ளை மனசு சோர்ந்து போய்டும்,நாம  தட்டிக் கொடுக்கலான்னா எப்படி?? அதுமட்டுமில்ல நாம பாராட்டும் போதுதான் இன்னும் ஆர்வம் அதிகமாகும் இல்லன்னா வராதுன்னு அம்மாகிட்ட சொன்னார்.

பாராட்டுதானே ஒருத்தங்களை தட்டிக்கொடுக்கும்..நான் சொல்றது சரிதானே..அதிலிருந்து  சமையலை முறைப்படி ஒழுங்கா செய்ய கத்துக்கிட்டேன்.அப்போ என்னை தட்டிக்கொடுத்த அப்பா இப்போ என் சமையலை ரசித்து சுவைக்கற அளவுக்கு அவர் இல்லை.அப்பா பாராட்டின வார்த்தைகள் இப்பவும் என்மனசுல இருக்கு.அதுவும் ஒரு பொக்கிஷம் தானே....

பிறகு  அக்காவுக்கு திருமணம் ஆனதும் பிரச்சனை வந்தது அப்பா வாங்கி கொடுத்த புத்தகத்திற்காக..அம்மா அந்த புத்தகம் அக்காவுக்குதானே அப்பா வாங்கித்தந்தாங்க,அதனால அக்காவே எடுத்துக்கட்டும்ன்னு கொடுத்துட்டாங்க.விடுவேனா அம்மாகிட்ட அழுது சண்டைப்போட்டு என் தொல்லை தாங்கமுடியாம அக்காகிட்ட சொல்லி அதே மாதிரி புத்தகத்தை வாங்கி கொடுக்க சொன்னாங்க.அக்கா வாங்கி கொடுத்த பிறகுதான் நிம்மதியா இருந்தது.அந்த புத்தகத்தில் அப்பா பெய்ரை எழுதி வைத்திருப்பேன்.

திருமணமாகிவிட்டதால் பெண்களுக்கு இனிஷியல் மாறிவிடும்.எனக்கு அப்பாவின் இனிஷியல் மாறிவிடுமோ என்று பயம் இருக்கும்.ஆனால் கடவுள் அருளால் எனக்கும் அக்காவும் இனிஷியல் மாறவில்லை.அதே எஸ் இனிஷியல் தான் ,அதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.இதுவும் ஒரு பொக்கிஷம் எனக்கு...

அண்ணா முதன்முதலில் பிரான்ஸிருந்து பரேத் வாங்கிதந்தாங்க..சமிபத்தில் தான் அந்த ப்ரேட் உடைந்துவிட்டது.15 வருடமாக பத்திரமா வைத்திருந்தேன்,என் பொண்ணு எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து உடைத்து விட்டாங்க...அக்காவும் நிறைய பொருட்கள் வாங்கி கொடுத்திருக்காங்க,சிலவற்றை பத்திரமாக வைத்திருக்கேன்...

அப்பாவுக்கு பிறகு அம்மா வாங்கி கொடுத்த வாட்ச்,இப்போ அந்த வாட்ச் வேலை செய்யவில்லையென்றாலும் பத்திரமா வைத்திருக்கேன்...


என் கணவர் முதன்முதலில் வாங்கி தந்த பரிசு சானல் மார்க் வாசனை திரவியம,.கைப்பை மற்றும் லிப் கலரில் லிப்ஷ்டிக்..எப்பவும் அதே வாசனை திரவியம்+லிப்ஷ்டிக் தான் வாங்க தருவார்.பிறகு என் விருப்பதிற்கே உறுத்தாத கலரில் லிப்ஷ்டிக் போடுன்னு சொல்லி விட்டுட்டார்...


அடுத்தது என் மகள் மற்றும் மகனின் ஸ்கேன் ரிப்போர்ட்..இப்போழுதும் பத்திரமா வைத்துருக்கேன்.வீட்டை சுத்தம் பண்ணும் போது எதுக்கு இந்த குப்பை கூளமெல்லாம் சேர்த்து வச்சிருக்க தூக்கி போடுன்னு சொல்லுவார்.ஆனால் இன்னுமும் தூக்கி போடாமல் பத்திரமா வச்சுருக்கேன்.


இது என்மகள் சாப்பிட ஆரம்பிக்கும் போது வாங்கிய சிறிய ஸ்பூன் மற்றும் முள்கரண்டி...இதையும் தூக்கி போடாமல் பத்திரமா வைத்திருக்கேன்.


இது என் பையன் ஆஸ்பிட்டலில் பிறந்திருக்கும் போது அவன் கையில் கட்டிய பேட்ஜ்..என் மகளுடையதும் பத்திரமா வைத்திருந்தேன் வீடு மாறியதில் தொலைந்துவிட்டது.

அப்புறம் புத்தகத்தில் எனக்கு பிடித்த குறிப்புகள் ,வாசகங்கள் இவற்றையெல்லாம் வெட்டி ஒரு பைல் நிறைய வைத்திருக்கேன்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.


20 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

பொக்கிஷமான அப்பாவின் பாராட்டுகள் இன்றும் உங்களை சமையல் கலையில் ஜொலிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பகிர்வு அருமை.

Mahi said...

Nice post Menaga! I like that spoon n fork! :)

Angel said...

அருமையான பொக்கிஷங்கள் மேனகா அனைத்துமே .
அப்பாவின் பாராட்டு உள்ளதிலேயே சிறந்த பொக்கிஷம்தான் ..
குழந்தைகள் பயன்படுத்திய பொருட்கள் .நமக்கு மட்டுமன்றி அவங்களுக்கும் பின்னாளில் பொக்கிஷம்தான்
அவங்க பெரியவங்கலானதும் அவங்களுக்கு இவற்றை நாமே கிப்டாக தரலாம் ..

Priya Anandakumar said...

Very nice article, romba nalla irunthathu. Gr8 dad...

Vijiskitchencreations said...

Nice &sweet pokidhangal

great-secret-of-life said...

nice post! good to hv dad like yours

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பொக்கிசங்கள் சகோதரி... வீட்டிலும் ரசித்தார்கள்... வாழ்த்துக்கள்...

Hema said...

Menaga, eno theriyala, padikkumpodhu, my eyes were filled with tears..

Priya Suresh said...

Ungaloda pokkisham ellam arumai Menaga, mukiyama echographie,yennodathum appadiye irruku..ELlame pokkisham,namba life namaku koduthathu..Azhagana post ithu.

Asiya Omar said...

மேனகா இந்த பொக்கிஷம் பகிர்வை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி.மிக அருமையான பகிர்வு.மிகவும் ரசித்து வாசித்தேன்,//அப்பாவின் வார்த்தைகள் உங்கள் நினைவில் இருப்பது கூட பெரிய பொக்கிஷம் தான்//
பகிர்ந்த அத்தனையும் அழகு.

Unknown said...

Lovely writeup!

இமா க்றிஸ் said...

அருமையான பகிர்வு மேனகா.

Mrs.Mano Saminathan said...

அப்பாவின் அன்பே சிறந்த பொக்கிஷமாக எழுதியிருப்பது படித்ததும் நெகிழ்வாக இருந்தது மேனகா! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

பூ விழி said...

அருமையான பொக்கிஷங்கள் நம் மனதை என்று புதுபிக்கும் நல்ல பதிவு

enrenrum16 said...

பொருட்கள் மட்டுமின்றி
பொன்னான எண்ணங்களையும் பொக்கிஷங்களாகப்
பாதுகாத்து வருவது
வியப்பாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

nice post menaga , nanum en rendu ponnungaloda filesa pokisama vachiuken eno atha thuki poda manase varathu illai ..

மாதேவி said...

அருமையான பொக்கிசங்கள்.

பகிர்ந்து எங்களுக்கும் அறியத் தந்ததற்கு நன்றி.

Priya ram said...

உங்களோட எல்லா பொக்கிஷமும் அருமை.... என்னோட அப்பா கூட நான் எது பண்ணாலும்,எப்படி பண்ணாலும் , ரொம்ப நல்லா இருக்குனு தான் சொல்லுவார்...இப்பவும் போன் பண்ணால், நீ அங்க பண்ணறது வாசனை- இங்க நம்ம ஊருக்கு வருதுனு சொல்லுவார்....

Jaleela Kamal said...

மகன் பிறந்த போது கையில் கட்டிய டேகை யும் பத்திரமாக வைத்து இருக்கீகக்

அப்பா கொடுத்தபரிசுகள் விலை முடிக்கமுடியாத பொக்கிஷம் இல்லையா

உங்கள் அனைத்து பொக்கிஷங்கள் பதிவு மிக அருமை.

vidhyanavin said...

Dear Menaga... The pokkishams u ve written is really Wowesome.... Even I ve this Crazy habits... Still have my Daughter's Umblical cord.. Scan report.. First Chocolate's wrapper given by my hubby.... I too miss my dad as you do... What similarities We both have... So nice to Rekindle our Nostalgic memories...
Keep going... Menaga...

01 09 10