Friday 20 September 2013 | By: Menaga Sathia

பலாக்கொட்டை பொடிமாஸ்/Jackfruit Seeds Podimas


பலாக்கொட்டையை பிடிக்காதவர்களும் இந்த பொடிமாஸை விரும்புவார்கள்...

தே.பொருட்கள்

பலாக்கொட்டை - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*இஞ்சி+பூண்டு+சோம்பு இவற்றை ஒன்றும் பாதியுமாக நசுக்கிக் கொள்ளவும்.

*பலாக்கொட்டையின் மேல் தோலை எடுத்து 2ஆகா நறுக்கி உப்பு சேர்த்து நீரில் வேகவைத்து வெந்ததும் நீரை வடிக்கவும்.


*ஆறியதும் கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும் அல்லது விப்பர் மோடில் ஒன்றிரண்டாக சுற்றி எடுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து நசுக்கிய இஞ்சி பூண்டினை சேர்த்து வதக்கி வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த பலாக்கொட்டையை சேர்த்து 5நிமிடங்கள் கிளறவும்.

பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இற‌க்கவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்... பலாக்கொட்டை பொடிமாஸ் செய்முறைக்கு நன்றி சகோதரி...

Akila said...

It's new to me n love to try it...

Shama Nagarajan said...

interesting recipe

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள மேனகா,

வணக்கம்.

பலாக்கொட்டை பொடிமாஸ் அருமை. புதுமை. இனிமை.

வாழ்த்துகள், பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.

Priya Anandakumar said...

very very healthy and delicious podimas...

Lifewithspices said...

very nice n diff preperation..

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

great-secret-of-life said...

my fav.. looks so yummy

Prema said...

I love jackfruit seeds ....sure it must be tasty...

Priya Suresh said...

Yenkita palakottai illaye,irruntha ippove panniduven, podimass supera iruku.

Sangeetha Priya said...

wow superb podimas, it looks like kaara puttu...

Niloufer Riyaz said...

will try this recipe when I but them next time!! delicious!!

ஸாதிகா said...

பலாக்கொட்டையை நறுக்கி நாங்கள் ஒரு வகையில் கறி சமைப்போம் நீங்கள் பொடித்து பொடிமாஸ் செய்து காட்டி இருக்கீங்க.புது ரெஸிப்பி கிடைத்ததற்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் said...

செய்து பார்ப்போம்...
பகிர்வுக்கு நன்றி அக்கா.

Asiya Omar said...

பலாக்கொட்டை பொடிமாஸ் புதுசாக இருக்கு.

Unknown said...

பலாக்கொட்டையில் பொடிமாஸ் செய்முறை சுலபமாகத்தான் இருக்கிறது செய்து பார்த்துவிடவேண்டியதுதான். நன்றி

Hema said...

I love palakottai, this is a superb dish with it..

மாதேவி said...

இந்தமுறையில் நாங்களும் செய்வோம் சுவையாக இருக்கும்.

பராசக்தி said...

பலாக்கொட்டையை தோலுரித்து, வேக வைத்து பொடிப்பதை விட, Pressure cooker இல் பலாக்கொட்டையை முழுதாய் வேகவைத்து, அதன் பின்பு தோலுரித்து fork அல்லது potato masher மூலமாக மசித்துக் கொள்ளலாம்.

01 09 10