Monday 16 September 2013 | By: Menaga Sathia

அடை ப்ரதமன் (பாயாசம்)/ Ada Pradhaman(Payasam) | Onam Sadya Recipes


சின்ன வயசுல அக்காவோட மலையாள தோழி மினி அக்காவின் வீட்டில் ஒணம் பண்டிகையின் போது ஒரு முறை அவங்க வீட்ல சாப்பிடிருக்கேன்.இலையில் நிறைய உணவு பரிமாறி இருந்தாங்க,அப்போ அதெல்லாம் என்னன்னு எனக்கு தெரியல ஒரே ஒரு பொருள் மட்டும் ரொம்ப பிடிச்சு இருந்தது.அது இந்த அடைபாயாசம் தான்.அதனுடைய சுவை,கலர் மட்டும் நல்ல ஞாபகம் இருக்கு.அம்மா அந்த பாயாசமெல்லாம் செய்ய மாட்டாங்க.மனசுல மட்டும் அந்த சுவை இன்னும் அப்படியே இருக்கு.

இந்த ப்ளாக் பக்கம் வந்தபிறகு திடீர்னு ஞாபகம்வந்து தேடியபோது ஜூலியின் ரெசிபி கிடைத்து செய்து பார்த்தபோது அதே சுவை கிடைத்தது.அந்த ஆண்ட்டிக்கு(மினி அக்காவின் அம்மா)மிக்க நன்றி!!

Recipe Source: Erivum Puliyum

தே.பொருட்கள்

அரிசி அடை  - 1/2 கப்
ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி -  தலா 1/4 டீஸ்பூன்
முதலாம் தேங்காய்ப்பால் - 1/4 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் -  1/2 கப்
துருவிய வெல்லம் -  1/2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி+திராட்சை = தேவைக்கு
தேங்காய்ப்பல்- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும் .

*கடாயில் நெய் விட்டு தேங்காய்ப்பல் +முந்திரி+திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் அடையை லேசாக வறுக்கவும்.


*வெல்ல நீர்+2ஆம் தேங்காய்ப்பால் சேர்த்து 20 நிமிடங்கள் வேகவிடவும்.இடையிடையே கலக்கிவிடவும்.


*அடை வெந்து திக்கானதும் முதல் பால் சேர்த்து கொதிவரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி+வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்.



*சுவையான அடை ப்ரதமன்/பாயாசம் ரெடி!!

*பாயாசம் ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதனால் கொஞ்சம் நீர்க்க இருக்கும் போதே இறக்கிவிடவும்.



13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

My fav payasam.. looks yummy..

Priya Anandakumar said...

very very delicious and authentic payasam Menaga...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூடான சுவையான அடைப்பிரதமன் பாயஸத்திற்கு நன்றிகள்.

பாராட்டுக்கள், மேனகா.

இனிய ஓணம் நல்வாழ்த்துகள்.

Mahi said...

அடைப் ப்ரதமன் எனக்கும் ரொம்பப் பிடிக்கும், சூப்பரா இருக்கு!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...

Asiya Omar said...

அடைப் பிரதமன் சூப்பர்.

Hema said...

Supera irukku, love this..

மனோ சாமிநாதன் said...

செய்முறை நன்றாக இருக்கிறது மேனகா! இங்கு அது மிகவும் பிரபலம்!

Prema said...

wow delicious payasam menaga,cant wait to try it...

Niloufer Riyaz said...

enakku romba piditha payasam! tasty!

Sangeetha M said...

this is my fav too...your payasam makes me drool :) perfect!

Unknown said...

looks absolutely delicious

Unknown said...

kurippa paakkave romba aasaya irukku.next time try panren.

01 09 10