Thursday 19 December 2013 | By: Menaga Sathia

சாமை பிஸிபேளாபாத் / Saamai Bisi Bele Bath | Little Millet Bisi Bele Bath | Millet Recipe |Diabetic Recipe


சாமை - சிறுதானியங்களில் ஒன்று.

* இது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெற செய்கிறது.

*வயிறு தொடர்பான நோய்களை கட்டு படுத்தவும்,காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை போக்கவும் வல்லது.

தே.பொருட்கள்:

சாமை அரிசி  - 1/3  கப்
துவரம்பருப்பு - 1/4  கப்
நறுக்கிய காய்கறிகள் - 3/4 கப்
கெட்டி புளிகரைசல் - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி -1 சிறியது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

* நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்+கத்திரிக்காய் + கேரட்+பீன்ஸ்+சௌசௌ

தாளிக்க:
கடுகு - 1/2  டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

வறுத்து பொடிக்க

தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு+சீரகம்  -தலா 1/2 டீஸ்பூன்
பட்டை -1 சிறுதுண்டு
ஏலக்காய்- 2
கிராம்பு -2
அன்னாச்சிப்பூ -1
கொப்பரைத்துறுவல் -1 1/2 டேபிள்ஸ்பூன்
சாமை அரிசி

 
செய்முறை :

*சாமை அரிசி+துவரம்பருப்பு சேர்த்து கழுவி 1  கப் நீரில் ஊறவைக்கவும்.

*ஊறவைத்த அரிசி பருப்பை அதே நீரோடு குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாகவோ அல்லது விழுதாகவோ அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்+தக்காளி+காய்கள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி 1/2 கப் நீர் சேர்த்து வேகவிடவும்.

*பாதியளவு காய் வெந்ததும் புளிகரைசல்+உப்பு+பொடித்த பொடி சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

*இவற்றை வேகவைத்த அரிசி பருப்போடு சேர்த்து மேலும் 1 கப் நீர் சேர்த்து 1 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷ்ஷர் அடங்கியதும் தாளித்து சேர்த்து,கொத்தமல்லித்தழை+நெய் சேர்த்து கிளறி சிப்ஸ் அல்லது வறுவலோடு சேர்த்து பரிமாறவும்.


பி.கு

*இதில் சாமை அரிசிக்கு பதில் ப்ரவுன் ரைஸ் அல்லது கோதுமைரவை சேர்த்து செய்யலாம்.

*உப்பின் அளவை பார்த்து சேர்க்கவும்.

*ஆறியதும் சாதம் கெட்டியாகிவிடும்,கொஞ்சம் தளர்த்தியாக இருக்கும்போதே சூடாக பரிமாறவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பசியைக் கிளப்பி விட்டுவிட்ட சாமை பிஸிபேளாபாத் அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

great-secret-of-life said...

healthy bisibele bath.. must try

Unknown said...

super healthy meal :) nalla combinations

இளமதி said...

அருமையான குறிப்பு மேனகா!
செய்து பார்க்கத் தூண்டுகிறது உங்க படங்கள்.
மிக்க நன்றி பகிர்வுக்கு!

Yaathoramani.blogspot.com said...

படமும் சொல்லிச் சென்ற விதம்
நிச்சயம் செய்து பார்க்கவேண்டும் எனும்
ஆவலத் தூண்டிப்போகிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Unknown said...

wow millet bisi bele bhath looks so delicious and inviting :) drool worthy meal :)

ADHI VENKAT said...

சத்துள்ள குறிப்பு...

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான அருமையான் சமையல் பகிர்வு..பாராட்டுக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

இனிதான் உங்கள் சமையல்களை ருசி பார்க்கப் போகிறேன், வீட்டம்மா உங்கள் சமையல்களை நோட் எடுத்து கொண்டிருக்கிறாள்.

உஷா அன்பரசு said...

படத்தை பார்த்தால் சாப்பிட்டே ஆகனும் போல இருக்குதே... !

Asiya Omar said...

பார்க்கவே சூப்பர்,நல்ல குறிப்பு.

sangeetha senthil said...

arumai .... looking great

Vijiskitchencreations said...

Healthy recipe!

Vimitha Durai said...

Very healthy rice variety

Sangeetha Priya said...

so healthy and perfect filling meal dear, ore kalakals than ponga :-)

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு...

சாரதா சமையல் said...

பார்க்கவே சூப்பரா இருக்கு!!நானும் போன வாரம் பிசிபேளா பாத் பகிர்வு கொடுத்திருக்கிறேன்.நேரம் கிடைக்கும் போது பாருங்கள் மேனகா.

Hema said...

Nice healthy option, paarkavum supera irukku..

01 09 10