Tuesday 1 March 2016 | By: Menaga Sathia

மங்களூர் போண்டா / Mangalore Bonda | Goli Baje | Snacks Recipe

print this page PRINT IT 
மாலை நேரத்தில் எளிதாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் இது.

மைசூர் போண்டா உளுத்தபருப்பிலும்,மங்களூர் போண்டா மைதாமாவிலும் செய்யபடுகிறது.ஆரம்பத்தில் எனக்கு இந்த போண்டாவின் பெயர் குழப்பம் அதிகமாகவே இருந்தது.


தே.பொருட்கள்
மைதா -1/2 கப்
கடலைமாவு- 1/8 கப்
அரிசிமாவு- 1 டீஸ்பூன்
புளித்த தயிர்- 1/2 கப்
உப்பு -தேவைக்கு
பேக்கிங் சோடா- 1 சிட்டிகை
கறிவேப்பிலை- 1 கொத்து பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய்- 1 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டீஸ்பூன்
பொருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய்- பொரிக்க‌

செய்முறை
*பாத்திரத்தில் மைதா+அரிசிமாவு+கடலைமாவு+உப்பு மற்றும் புளித்த தயிர் சேர்த்து மாவினை கலந்து குறைந்தது 3 மணிநேரம் ஊறவைக்கவும்.


*பின் பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

*சூடான எண்ணெயில் போண்டாகளாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பி.கு
*மங்களூர் போண்டா செய்வதற்கு குறைந்தது மாவினை 3 மணிநேரங்கள் ஊறவைக்க வேண்டும்.அப்போழுதுதான் போண்டா மிருதுவாக இருக்கும்.

*மாவினை பதமாக கரைக்கவும்,கெட்டியாக மாவு இருந்தால் போண்டா கடினமாகவும்,மாவு நீர்க்க இருந்தால் போண்டா எண்ணெய் குடித்தாற் போலவும் இருக்கும்.

*பேக்கிங் சோடாவை எப்போழுதும் போண்டா சுடும் போது மட்டுமே சேர்க்கவும் இல்லையெனில் மாவு நீர்த்துவிடும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

mullaimadavan said...

Antha bonda ennaku! looks super delicious!

MANO நாஞ்சில் மனோ said...

பெருமூச்சு சத்தம் கேக்குதா ? நமக்கு திங்க குடுத்து வச்சது அம்புட்டுத்தேன், இங்கே பாலைவனத்துல வந்து மாட்டியாச்சு.

'பரிவை' சே.குமார் said...

அன்பின் சகோதரி...

இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html

01 09 10