Sunday 1 January 2017 | By: Menaga Sathia

உருளை அல்வா / Potato (Aloo ) Halwa | Sweet Recipe


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

பதிவுகள் எழுதி நீண்டநாட்களாகிவிட்டது.3 மாதமாக டிராப்ட் போஸ்ட் மட்டுமே போட்டேன்.

இனி உருளை அல்வாவின் செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

உருளை -3 நடுத்தர அளவு
சர்க்கரை- 1/2 கப் +2 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ -2 சிட்டிகை
பால்- 1/3 கப் +2 டேபிள்ஸ்பூன்
நெய்- 1/2 கப்

செய்முறை

*உருளையை கழுவி நன்கு வேகவைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.

*வேகவைத்த மசித்த உருளையை 1/2 கப் அளவில் எடுத்துக் கொள்ளவும்.

*2 டேபிஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும்.

*நான்ஸ்டிக் கடாயில் 1/2 கப் நெய் ஊற்றி மசித்த உருளையை  சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் பால் + ஊறவைத்த குங்குமப்பூ  சேர்த்து வேகவைத்த பின் சர்க்கரை சேர்க்கவும்.

*சர்க்கரை இளகி ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதத்தில் இறக்கவும்.

*சுவையான அல்வா தயார்...

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

அருமை. ஊற வைத்து அரைத்த பாதாமையும் சேர்ப்பேன்.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், மேனகா :)!

Menaga Sathia said...

மிக்க நன்றி அக்கா கூடுதல் டிப்ஸ்க்கு....தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

Anuprem said...

சூப்பர்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

மாதேவி said...

அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

01 09 10