Thursday 13 July 2017 | By: Menaga Sathia

கொத்தமல்லி தொக்கு / Kothamalli (Cilantro |Coriander Leaves ) Thokku |Adyar Grand Sweet Style

 கிராண்ட் ஸ்வீட் ஸ்டைல் தொக்கு மிகவும் பிரபலமானது.சுவையானதும் கூட..
கொத்தமல்லி  தொக்கு ஒருமுறை சுவைத்த போது ரொம்ப பிடித்தபோது செய்முறை இணையத்தில் கிடைக்கவில்லை.
திரும்ப தேடியபோது தோழியின் ப்ளாகில் ரெசிபி இருந்தது.செய்தும் பார்த்தாச்சு.நன்றி முல்லை !!

தே.பொருட்கள்
கொத்தமல்லி தழை -2 கட்டு
காய்ந்த மிளகாய் - 8
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -3/4 டீஸ்பூன்
இஞ்சி - 2 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
கடுகு -1/2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
நல்லெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*மல்லித்தழையில் உள்ள தடினமான தண்டுபகுதியை நீக்கவும்.

*கொத்தமல்லிதழையை மண்ணில்லாமல் அலசி,துணியில் ஈரம் போக உலர்த்தவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய்,வெந்தயம்,பெருங்காயத்தூள் வறுக்கவும்.

 *மீதமுள்ள எண்ணெயில் இஞ்சியை வறுத்தபின் கொத்தமல்லி தழையை சேர்த்து வதக்கவும்.புளியையும் சேர்த்து லேசாக வதக்கியபின் அடுப்பை அணைக்கவும்.

 *முதலில் மிக்ஸியில் மிளகாய்+வெந்தயம்+உப்பு+பெருங்காயப்பொடி சேர்த்து முதலில் பொடிக்கவும்.
 *அதன்பின் கொத்தமல்லிதழை,இஞ்சி,புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கொரகொரப்பாக அரைக்கவும்.அதில் தான் சுவையே இருக்கின்றது.
 *பின் மீதமுள்ள எண்ணெயில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுதினை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
 *நன்கு ஆறியதும் காற்றுபுகாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
பி.கு
*இதனை இட்லி,தோசை க்கு தொட்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

*தயிர் சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸ்ரீராம். said...


நல்ல குறிப்பு. குறித்துக் கொண்டேன். ஆனால் கொத்துமல்லித் தண்டில்தானே அதிக வாசனை என்பார்கள்?

Menaga Sathia said...

@ஸ்ரீ ராம்
ஆமாங்க,முற்றிய தண்டுகளை நீக்கிவிட்டு இளசான தண்டுகளை மட்டும் பயன்படுத்தவும்.

ராஜி said...

கொத்தமல்லி தொக்குக்கு நன்றிக்கா. தேங்காய், வெங்காயம்லாம் சேர்க்காததால சீக்கிரம் கெட்டுப்போகாதுன்னு நினைக்குறேன்

Menaga Sathia said...

@ராஜி
ஆமாங்க...தொக்கு ரெசிபில வெங்காயம்,தேங்காய் சேர்த்து இதுவரை செய்ததில்லை...

01 09 10