Saturday, 3 November 2012 | By: Menaga Sathia

Homemade Rice Flour


 தே.பொருட்கள்

பச்சரிசி - 1 கப்

செய்முறை

*அரிசியை கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*துணியில் ஈரம் போக நிழலில் உலர்த்தவும்.

 *கொஞ்ச கொஞ்சமாக அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*பொடித்த மாவை சல்லடையில் சலிக்கவும்.
*சல்லடையில் அரிசி ரவை இருக்கும்,அதனை முறுமுறை அரிசி அரைக்கும் போது சேர்த்து அரைக்கவும்.
 *மாவு நைசாக சலிப்பது மிக முக்கியம்...
 *சலித்த மாவை கடாயில் கொஞ்சமாக போட்டு வறுக்கவும்.
 *மாவு வறுபட்டதும் வாசனை வரும்,அதுவே சரியான பதம்...
 *வறுபட்ட மாவை மீண்டும் சலித்தெடுக்கவும்.
*மாவு நன்கு சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

*இந்த மாவை முறுக்கு,புட்டு,கொழுக்கட்டை,இடியாப்பம் என அனைத்திற்க்கும் பயன்படுத்தலாம்.

பி.கு

*1 கப் அரிசியில் = 2 கப் அரிசிமாவு வரும்.

*மாவை வறுக்காமல் துணியில் மூட்டைக் கட்டி ஆவியிலும் வேகவைத்து எடுக்கலாம்.வேக கிட்டதக்க 1 மணிநேரத்திற்க்கும் மேல் ஆகும்.அடிக்கடி மாவை கிளறிவிடணும்.மாவு வெந்துவிட்டதா என பார்க்க அடியில் இருக்கும் மாவை பிடித்து பார்த்தால் பொலபொலவென கொட்டவேண்டும்.அது சரியான பதம்.ஆறியதும் மீண்டும் மாவை சலித்து ஆறவைத்து பயன்படுத்தவும்.இது கொஞ்சம் கடினமான வேலை அதனால் நான் மாவை வறுத்து விடுவேன்....

*சல்லடையில் 3 கம்பிவலை இருக்கும்,மிக பொடியாக இருக்கும் வலைதான் மாவு சலிக்கும் வலை....

Thursday, 1 November 2012 | By: Menaga Sathia

ரவா லட்டு /Rava Laddoo


ரவா லட்டு செய்யும் போது  பால் பவுடர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று ஒரு புக்கில் படித்தேன்.அதன் படி செய்ததில் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்

ரவை  - 1 கப்
பால் பவுடர் - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 3
நெய் - 1/2 கப்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை
* ரவையை  லேசாக வெறும் கடாயில் வறுக்கவும்.

*சர்க்கரை+ஏலக்காய் இவ்விரண்டையும் நைசாக பொடிக்கவும்.ரவையையும் இவற்றையும் நைசாக பொடிக்கவும்.

*இவற்றுடன் பால் பவுடர்+வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.

*நெய்யை லேசாக சூடு செய்து ரவை கலவையில் ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.
Tuesday, 30 October 2012 | By: Menaga Sathia

காலிபிளவர் 65 சாதம் /Cauliflower 65 Rice

சிம்பிளான இந்த சாதத்தை என்னுடைய சுவைக்கேற்ப செய்துள்ளேன்.நன்றி கல்பனா!!

காலிபிளவர் 65 செய்ய

தே.பொருட்கள்

காலிபிளவர் - 1 நடுத்தரளவு
சோளமாவு+ அரிசி மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு புட் கலர் - 1 சிட்டிகை
வரமிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*காலிபிளவரை  சிறுபூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 1/2 வேக்காடு வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் மேற்கூறிய பொருட்களில் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சாதம் செய்ய

பாஸ்மதி - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி -  1 கைப்பிடி
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+ கீறிய பச்சை மிளகாய்+தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒனறாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் ஊறவைத்த அரிசி+உப்பு+ 3 கப் நீர் சேர்த்து  3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் புதினா கொத்தமல்லி+ காலிபிள்வர் 65 சேர்த்து சாதத்தை உடையாமல் கிளறவும்.

*ராய்த்தாவுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

Sunday, 28 October 2012 | By: Menaga Sathia

மட்டன் வறுவல் -2/Mutton Varuval - 2

தே.பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 20
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மிளகாயை 2ஆக கிள்ளி விதை நீக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை+காய்ந்த மிளகாய்  போட்டு தாளித்து வெங்காய்ம்+இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு+மஞ்சள்தூள்+கறி சேர்த்து வதக்கி தேவையான நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும்,கறியை நீர் சுண்டும் வரை வதக்கி பரிமாறவும்.
Wednesday, 24 October 2012 | By: Menaga Sathia

பால் பாயாசம்/Paal Payasam (Rice Kheer)

ஆஹா என்ன ருசி -இல் பார்த்து பலதடவை செய்துவிட்டேன்.மற்ற பாயாசங்களை விட இந்த பாயாசம் மிகவும் பிடித்துவிட்டது.விரும்பினால் முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.அது சேர்க்காமலே நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்

பாஸ்மதி - 1/4 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை = 4 - 5 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் நெய் விட்டு அரிசியை போட்டு லேசாக வறுத்து ஆறவைக்கவும்.
*ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
*பொடித்த அரிசி+பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.வெயிட் போட்டதும் சிறுதீயில் 1/2 மணிநேரம் வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் நன்றாக மசித்து சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
*சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

பி.கு


*பாயாசம் ஆறியதும் கெட்டியாகிவிடும்.சர்க்கரை அவரவர் இனிப்பிற்கேற்ப சேர்க்கவும்.
Monday, 22 October 2012 | By: Menaga Sathia

வல்லாரைக்கீரை சாலட்/Vallarai Keerai(Indian Penny Wort) Salad

அக்காவிடம் கற்றுக்கொண்ட குறிப்பு.இந்த சாலட் கசப்பு,புளிப்பு ,காரசுவையுடன் இருக்கும்.

இந்த கீரையில் நிறைய மருத்துவக்குணங்கள் இருக்கு.

*வெண்டைக்காய் போலவே இந்தக்கீரைக்கு ஞாபகசக்தியினை அதிகப்படுத்தும் தன்மை உண்டு.

*இந்த கீரை வயிற்றுப்புண்ணுக்கும்,தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கும்,நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும்,இரத்தசோகைக்கும்,சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிக நல்லது.

*இதில் அதிகளவு விட்டமின் B1(Thiamin) ,விட்டமின் B2 (Riboflavin),விட்டமின் B3 (Niacin) ,விட்டமின் B6(Pyridoxine),விட்டமின் K, கால்சியம்,மாக்னீசியம்,சோடியம் என நிறைய இருக்கு.

*இந்த கீரையின் சாறை பயன்படுத்தினால் முடிஉதிர்வை தடுக்கும்.இந்தக்கீரையின் சாறை எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெயைக் கலந்து சூடுபடுத்தி ஆறவைத்து தினமும் பயன்படுத்தவும்.

*கீரை சாறு எடுக்க - இலைகளை நேரடியாக அடுப்பில் வாட்டி சாறினை எடுக்கவும்.

தே.பொருட்கள்
பொடியாக அரிந்த வல்லாரைக்கீரை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய சிகப்பு வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு

சிகப்பு வெங்காயத்திற்கு பதில் நான் வெள்ளை வெங்காயம் சேர்த்து செய்துள்ளேன்.
Thursday, 18 October 2012 | By: Menaga Sathia

பனீர் கேபேஜ் ரோல்ஸ்/Paneer Cabbage Rolls

தே.பொருட்கள்

கோஸ் இலைகள் - 4

ஸ்டப்பிங் செய்ய

துருவிய பனீர் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்+தக்காளி - தலா 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+ இஞ்சிபூண்டு விழுது +தூள் வகைகள்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் பனீர் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.


*கோஸ்  இலைகளை முழுதாக எடுத்து கொதிக்கும் நீரில் 3-4 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*கோஸின் அடிப்பகுதியில் மொத்தமாக இருக்கும் தண்டினை மேலாக வெட்டி எடுத்தால் சுருட்டுவதற்க்கு எளிதாக இருக்கும்.

*இலையில் ஸ்டப்பிங்கை வைக்கவும்.
*மெதுவாக பாதிவரும் சுருட்டி ஒருபக்க முனைகளை உள்நோக்கி மடக்கி கடைசி வரை சுருட்டவும்.இலைகள் பிரியாது.ஒட்டிக்கொள்ளும்.

*அப்படி ஒட்டவில்லை என்றால் டூத்பிக்கினைக் கொண்டு குத்தி விடவும்.
*ரோலினை ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
*இதனை அவனில் வைத்தும் பேக் செய்து எடுக்கலாம்.200°C  ல் 10 -15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கலாம்.

*கோஸ் இலைகளை முழுதாக எடுக்க முழு கோஸின் அடிப்பகுதி வட்டமாக உள்ள தண்டினை மேலோடும்,சிறிது உள்நோக்கியும் வெட்டி எடுத்தால் இலைகளை பிரியாமல் முழுதாக எடுக்கலாம்.

*இந்த ரோலினை சில்லி கார்லிக் சாஸுடன் பரிமாற நன்றாக இருக்கும்.
01 09 10