Monday, 12 May 2014 | By: Menaga Sathia

உடுப்பி ஹோட்டல் வெள்ளை சட்னி /Udupi Hotel White Chutney |Side Dish For Idli& Dosa |Restaurant Recipes


print this page PRINT IT



இந்த சட்னியின் ஸ்பெஷல் சுவைக்கு சிறிது புதினா இலையும்  தேங்காய் அரைபடுவதற்காக  சிறிதளவு பொட்டுக்கடலை சேர்க்கவேண்டும்.

தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் -1
புதினா -4 இலைகள்
பொட்டுக்கடலை -3/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -4 இலைகள்

செய்முறை

*கொடுக்கபட்டுள்ள பொருட்களை சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாகவும்,நைசாகவும்  அரைக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ள  பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

*மிக சுவையாக இருக்கும் இந்த சட்னி.

Technorati Tag :Chutney Recipes, Udupi Hotel White Chutney,White Chutney, Restaurant Recipes,Side Dish For Idli&Dosa, Karnataka Cuisine,
Friday, 9 May 2014 | By: Menaga Sathia

எவரெஸ்ட் சிக்கன் தந்தூரி மசாலா / Everest Chicken Tandoori Masala | Tandoori Masala Recipe| Friendship 5 Series - Homemade Powders # 5


எவரெஸ்ட்  பிராண்டின் காஷ்மிர் மிளகாய் தூள்,சாட் மசாலா மற்றும் ஆம்சூர் பொடி தான் வாங்குவேன்,ஒரு முறை தந்தூரி மசாலா  வாங்கி செய்து பார்த்ததில் பிடித்து விட,அதே போல் தான் இப்போழுது செய்வது.

இதில் சேர்க்கபடும் முக்கிய பொருளே கறுப்பு ஏலக்காயும்,ஜாதிக்காயும் தான்.

தே.பொருட்கள்

அன்னாசிப்பூ -1
பிரியாணி இலை -2
கிராம்பு - 4
பட்டை -1
கறுப்பு ஏலக்காய் -2
ஜாதிக்காய் -சிறிய துண்டு
கசகசா -1 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
சுக்கு - 1 சிறிய துண்டு
கடுகு -1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் -3
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்

செய்முறை

*கொடுக்கபட்ட பொருட்களில் தூள் வகைகள் +உப்பு தவிர மீதி அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைக்கவும்.

*முதலில் வறுத்த பொருட்களில் பூண்டை தவிர மற்ற அனைத்தையும்  பொடி செய்த பின் மற்ற தூள் வகைகள்+உப்பு+பூண்டுப்பல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


பி.கு

*இதில் வரமிளகாய்த்தூள்+தனியாத்தூள் பதிலாக காய்ந்த மிளகாய்+தனியா வறுத்து சேர்த்து அரைக்கலாம்.

*இந்த மசாலாவை அனைத்து வகை தந்தூரி ரெசிபியில் சேர்க்கலாம்.

சிக்கன் தந்தூரி செய்யும் முறை

*சிக்கன் தொடைபகுதியை அங்கங்கே கீறி எலுமிச்சை சாறு+உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்கவும்.

*பின் இஞ்சி பூண்டு விழுது+எவரெஸ்ட் தந்தூரி மசாலா + கெட்டி தயிர்+சிகப்பு கலர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து அவனில் பேக் செய்து எடுக்கவும்.

நான் செய்த தந்தூரி சிக்கன் , தந்தூரி சிக்கன் -2 குறிப்பினை பார்க்கவும்.



Technorati Tags:Chicken Tandoori Masala, Tandoori Chicken Masala,Everest Chicken Tandoori Masala, Everest Tandoori Chicken Masala, Homemade Tandoori Masala,Everest Tandoori Masala Powder, Tandoori Masala Powder,How To Make Tandoori Masala, Tandoori Masala Tags:Chicken Tandoori Masala, Tandoori Chicken Masala, Homemade Tandoori Masala, Tandoori Masala Powder, How to Make Tandoori Masala, Tandoori Masala,Everest Chicken Tandoori Masala, Everest Tandoori Chicken Masala, Everest Tandoori Masala Powder
Thursday, 8 May 2014 | By: Menaga Sathia

கறிவேப்பிலை பொடி /Curry Leaves Podi |Karuveppillai Podi|Curry Leaves Chutney Powder|Side Dish For Idli& Dosa|Friendship 5 Series -Homemade Powder #4


print this page PRINT  IT

பரிமாறும் அளவு - 4 நபர்கள்
தயாரிக்கும் நேரம் - 10 நிமிடங்கள்

தே.பொருட்கள்

கறிவேப்பிலை - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 6
உளுத்தம்பருப்பு - 1/3 கப்
கடலைப்பருப்பு -1/4 கப்
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கறிவேப்பிலையை கழுவி,ஈரம் போக நிழலில் உலர்த்தவும்.

*பின் அதனை 1 நிமிடம் மைக்ரோவேவில் சூடு படுத்தி எடுக்கவும்.

*இதனால் கறிவேப்பிலையின் நிறம் மாறாமல் இருக்கும்.

*மீதி அனைத்து பொருட்களையும் பெருங்காயத்தூள் தவிர வெறும் கடாயில் வறுத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் அனைத்து பொருட்களையும் உப்பு+பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

Technorati Tag :Podi Varieties, Curry Leaves Podi,Karuveppillai Podi, How To Make Curry Leaves Podi,Side Dish For Idli&Dosa, Homemade Powder,Homemade Curry Leaves powder, Homemade Karuveppillai Podi
Wednesday, 7 May 2014 | By: Menaga Sathia

கடலைப்பருப்பு பாயாசம் மிக்ஸ் / Chana Dal Payasam Mix | Instant Payasam Mix | Friendship 5 Series - Homade Powders # 3


கடலைப்பருப்பு பாயாசம் மிக்ஸ் இருந்தால் திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் 3 நிமிடங்களில் பாயாசம் செய்து அசத்தி விடலாம்.மிக சுவையானதும்  கூட..இந்த மிக்ஸில் நெய்யை சூடுபடுத்தி ஊற்றி லட்டுகளாகவும் பிடிக்கலாம்.

பரிமாறும் அளவு -  5-6 நபர்கள்
தயாரிக்கும் நேரம் - 10 நிமிடங்கள்

தே.பொருட்கள்

கடலைப்பருப்பு+முந்திரி - தலா 1/4 கப்
ஏலக்காய் -5
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*வெறும் கடாயில் கடலைப்பருப்பை போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

*அடுப்பை அணைத்துவிட்டு  முந்திரியை சூடான கடாயில் போட்டு வைக்கவும்.வறுக்க வேண்டாம்.
*முதலில் கடலைப்பருப்பினை மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்.

*பின் சர்க்கரை+ஏலக்காய்+முந்திரி சேர்த்து நைசாக பொடிக்கவும்.
பாயாசம் செய்யும் முறை

*கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் மிக்ஸினை போட்டு வறுத்து சுண்ட காய்ச்சிய  1 1/2 கப் பாலினை ஊற்றி  கைவிடாமல் கிளறி 5 நிமிடத்தில் இறக்கவும்.சுவையான பாயாசம் தயார்...


Technorati Tags :Payasam Recipes, Chanadal Payasam,Instant Mix Payasam, Kadalaiparuppu Mix Payasam, Instant Kadalaiparuppu Payasam,How To Make Instant Mix Payasam
Tag: Payasam Recipes, Chanadal Payasam, Instant Mix Payasam, How To Make Instant Mix Payasam
,Kadalaiparuppu mix payasam, Instant Kadalaiparuppu payasam
Tuesday, 6 May 2014 | By: Menaga Sathia

ராஜம் சுக்கு காபி பொடி / Rajam Sukku Kaapi Mix | Instant Sukku Malli Kaapi Mix | Friendship 5 Series - Homemade Powder # 2



ராஜம் பிராண்ட் அனைத்தும் மூலிகை சம்பந்தப்பட்ட தயாரிப்பு.இதில் சுக்கு காபி மிக்ஸ்+பருத்திப் பால் நன்றாக இருக்கும்.

பருத்தி பால் மிக்ஸில் அதிக இனிப்பு இருப்பதுப்போல் தோன்றியதால் அதை வாங்குவதில்லை.இந்த சுக்கு காபி மிக்ஸ் மட்டும் வாங்குவேன்.மிக சுவையாக இருக்கும்.

இதில் சுக்கு,தனியா,மஞ்சள்தூள்,வெந்தயம்,திப்பிலி,சித்தரத்தை,பனைவெல்லம்,மிளகு,அஸ்வகந்தா,நன்னாரி,அதிமதுரம்,ஜாதிக்காய் சேர்த்து செய்வார்கள்.நான் என்னிடம் இருந்த பொருட்களை மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.

சுக்கு காபியை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

*அதிகப்படியான பித்தம் குறையும்.
*உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
*ஜீரணத்தை தூண்டி ,பசியை அதிகரிக்கும்.
*மழைக்காலங்களில் ஏற்படும் சளி,காய்ச்சல் குணமாகும்.

தே.பொருட்கள்

சுக்கு - 25 கிராம்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய் -சிறியதுண்டு
கண்டதிப்பிலி - 2 குச்சிகள்
மிளகு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பனை வெல்லம் அல்லது வெல்லம் -சுவைக்கேற்ப

செய்முறை

*கொடுத்துள்ள பொருட்களில் பனை வெல்லம்+மஞ்சள்தூள் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

*ஆறியதும் மிக்ளியில் பொடிக்கவும்.பின் மஞ்சள்தூள்+பனைவெல்லம் சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
சுக்கு காபி செய்முறை

* 1 கப் நீரில் 2 டீஸ்பூன் சுக்கு காபி பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும்.

பி.கு

*இது கொஞ்சம்  காரமாக இருக்கும்,அதனால் சுவைக்கேற்ப வெல்லத்தை சேர்க்கவும்.

*விரும்பினால் இதில் சிறிதளவு பால் கலந்து பருகலாம்,ஆனால் இதை ப்ளையினாக குடிப்பது தான்  நன்றாக இருக்கும்.

Monday, 5 May 2014 | By: Menaga Sathia

MTR இன்ஸ்டண்ட் புளியோதரைப் பொடி /MTR Puliogare Mix | Instant Puliogare Powder | Friendship 5 Series - Homemade Powder # 1

print this page  PRINT IT

Friendship 5 Series  இவெண்டினை சவிதா & கீதா சேர்ந்து நடத்துறாங்க.ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் - வெள்ளி வரை தொடர்ந்து மாதம் ஒரு குறிப்பு என பகிர்ந்துக்கலாம்.இந்த மாதம் Homemade Powder Series.

MTR  இட்லிப் பொடி  குறிப்பினை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.இந்த பிராண்டின் புளிசாதம்  பொடியும் நன்றாக இருக்கும்.

இந்த  பொடியை நான் உடனே பயன்படுத்தி விட்டதால் இதில் எந்த Preservative சேர்க்கவில்லை. நீண்ட நாள் வைத்திருந்து பயன்படுத்த வேண்டுமெனில் இதில் Acetic Acid & Tartaric Acid சேர்க்கவேண்டும்.

பரிமாறும் அளவு -2 நபர்
தயாரிக்கும் நேரம் -15 நிமிடங்கள்


தே.பொருட்கள்

புளி - சிறிய எலுமிச்சை பழளவு
மிளகு+சீரகம் - தலா 3/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
வெள்ளை எள் -1 டீஸ்பூன்
தனியா -1 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வேர்கடலை -1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1 டீஸ்பூன்

செய்முறை

*முதலில் வெறும் கடாயில் தனியா+கடலைப்பருப்பு+மிளகு+சீரகம்+வெந்தயம்+எள்+காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

*தேவையான உப்பையும் வறுத்து எடுக்கவும்.

*பின் புளியை பொடியாக நறுக்கி ஈரம் போக வெறும் கடாயில் வறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலையை வறுத்து வைக்கவும்.

*அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயில்  கடுகு+உளுத்தம்பருப்பு+மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஆறவைக்கவும்.

*வறுத்த பொருட்கள் ஆறியதும் தனியா+கடலைப்பருப்பு+மிளகு+சீரகம்+எள்+வெந்தயம்+காய்ந்த மிளகாய்+தாளித்த பொருட்கள் இவற்றை சேர்த்து நைசாக பொடித்து தனியாக வைக்கவும்.
*பின் உப்பு+புளி சேர்த்து பொடிக்கவும்.
*இதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*பின் கடைசியாக வேர்கடலையை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுக்கவும்.

*இதில்   Acetic Acid & Tartaric Acid  சேர்ப்பதாக இருந்தால் அதையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
*ஆறியதும் காற்று புகாத டப்பாவில் 2 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பி.கு

* கலந்த சாத வகைகளுக்கு உப்பை வடிக்கும் போதே சேர்த்து விடுவேன்,அதனால் இந்த இன்ஸ்டண்ட் மிக்ஸ்ல் உப்பை குறைத்து சேர்த்துள்ளேன்.

புளிசாதம் செய்யும் முறை

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் -1 கப்
புளிசாத இன்ஸ்டண்ட் மிக்ஸ் -1/4 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி இன்ஸ்டண்ட் மிக்ஸினை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கி சாதத்தை சேர்த்து கிளறி 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் மசால் வடை,உருளை வறுவல் அல்லது புதினா துவையலுடன்  பரிமாறவும்.

Thursday, 1 May 2014 | By: Menaga Sathia

மசாலா பூரி சாட்/Masala Puri Chaat | Chaat Recipes

Recipe Source : Aayi's Recipe

நான் கொடுத்துள்ள அளவில் 2 நபர் சாப்பிடலாம்.

தே.பொருட்கள்

சாட் பூரி - 10
இனிப்பு +க்ரீன் சட்னி - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி/சேவ் - மேலே தூவ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்த்ழை - 2 டேபிள்ஸ்பூன்

க்ரேவி/ராக்தா செய்ய

மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த பச்சை பட்டாணி -1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

வெறும் கடாயில் வறுக்க

கிராம்பு -2
பட்டை - 1 சிறுதுண்டு
தனியா - 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
மிளகு -1/8 டீஸ்பூன்
ஜாதிக்காய் -மிகசிறிய அளவு
மராத்தி மொக்கு - 2

மராத்தி மொக்கு பதில் அன்னாச்சி மொக்கு -1 சேர்த்தேன்.

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*வறுக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் மிளகய்த்தூள்+தேங்காய்த்துறுவல்+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் அரைத்த விழுது +1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பச்சை பட்டாணியை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*க்ரேவி தண்ணியாக இல்லாமலும் கெட்டியாக இல்லாமலும் இருக்கவேண்டும்.

பரிமாறும்முறை

*ஒரு சிறியதட்டில் பூரியை நொறுக்கி போடவும்.
*அதன்மேல் சூடான க்ரேவியை ஊற்றவும்.
*அதன் மேல் வெங்காயம்+தக்காளி+கேரட் துறுவல்+சட்னிகள்+சேவ்+கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
பி.கு

*க்ரேவி பரிமாறும் போது சூடாக இருக்கவேண்டும். இதற்க்கு காய்ந்த பச்சை பட்டாணிதான் சிறந்தது.

 This is off to Priya's Vegan Thursday
01 09 10