Sunday 1 March 2009 | By: Menaga Sathia

பட்டுப்புடவை டிப்ஸ்



.பட்டுப்புடவையை அட்டைப்பெட்டியில் வைக்கக்கூடாது.மென்னையான துணிப்பையில் வைக்கவும்.


தரமான லிக்விட் சோப் கொண்டு துவைக்கவும்.நீண்ட நேரம் ஊறவைப்பதோ,அடித்துத் துவைப்பதோ கூடாது.



புதிதாக வாங்கும் பட்டுப்புடவையை 6மாதத்துக்குள் துவைத்து விடணும்.அதிலிருக்கும் கஞ்சி நீக்கப்படாமலிருந்தால் துணிக்குத்தான் பாதிப்பு.


அழுக்கோ,கறையோ உள்ள இடங்களை கைகளாலேயே மென்மையாகத் தேய்க்கவும்.


சுத்தமான நீரில் அலசவும்.2 தண்ணீரில் அலசுவது அவசியம்.



முறுக்கிப் பிழியாமல் இலேசாகக் கொசுவி உதறவும்.முறுக்கிப் பிழிந்தால் இழை இத்துப் போகும்.
நிழலில் காற்றாட காயவிடவும்.



பார்டர் கீழே வருவது போல காயவிடுவது உத்தமம்.
வாளியில் 2,3 புடவைகளை ஒரே சமயத்தில் நனைக்க கூடாது.ஏதாவது ஒரு புடவையின் சாயம் மற்றோரு புடவைகளில் கலர் ஒட்டிக் கொள்ளும்.அப்புறம் புடவை வேஸ்ட் ஆகிடும்.



பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு வெளியே போய் வந்தால்,முதல் வேலையாக காற்றாட ஆறபோட்டு,வியர்வை வாடை போனதும் அயர்ன் செய்து வைக்கவும்.



பட்டுப்புடவையை பயன்படுத்தாமலே வைத்திருந்தால் அதன் ஆயுசு கம்மியாகிடும்.அடிக்கடி கட்டி துவைத்து பராமரிக்கப்படும் புடவைதான் நீண்டகாலம் உழைக்கும்.



பட்டுப்புடவையை இரும்பு பீரோவில் வைக்க நேர்ந்தால் மெல்லிய பருத்தி துணியில் சுற்றி வைக்கவும்.



பட்டுப்புடவையை அடிக்கடி உபயோக்காவிட்டாலும் அவ்வப்போது எடுத்து பிரித்து மாற்றி மடிக்கவேண்டும்.



பட்டுப்புடவையை அயர்ன் செய்யும் போது புடவையைத் திருப்பி வைத்து மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும்.



ஒரு பக்கெட் நீரில் வேப்பிலைசாறு சில சொட்டுகள் போட்டு பட்டுப்புடவையை அலசினால் பூச்சி அரிக்காது.



பட்டுப்புடவையில் ஒரு வசம்பு வைத்தால் பூச்சி அரிக்காது.



பட்டுப்புடவையில் நேரடியாகப் படும்படி செண்டோ வாசனை திரவியமோ பயன்படுத்தக்கூடாது.இதனால் கறைப்படிந்து எளிதில் மங்கும்.



பட்டுப்புடவையை முதல்முறையாக அலசும்போது உடல் தனியாகவும்,பார்டர் தனியாகவும் அலச வேண்டும்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

பட்டு புடவை அலசும் பொழுது இவ்வளவு விஷயம் இருக்கா?
ரொம்ப நன்றி மேனகா நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கிங்க

Menaga Sathia said...

ஆமாம்பா.இதுல இன்னும் நிறைய இருக்கு.எனக்குத் தெரிந்ததை எழுதிருக்கேன்.நீங்களும் இந்த மாதிரி டிரை பண்ணிப் பாருங்க பாயிசா.

Jaleela Kamal said...

ஹை மேனகா சூப்பர் டிப்ஸ்

ஜலீலா

Menaga Sathia said...

ஜலிலாக்கா நீங்கள் படித்து கருத்து சொன்னதற்க்கு ரொம்ப நன்றியக்கா!!!

asiya omar said...

மேனகா,உங்கள் ப்ளாக்கிற்கு வந்தால் எதற்கு பாராட்டை தெரிவிக்க என்று தெரியலை,அத்தனையும் அருமை,எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது வருவேன்,சமையல் குறிப்புக்கள் INNOVATIVE ஆக இருக்கு.great work.well done.

Menaga Sathia said...

தங்களுடைய பாராட்டு எனக்கு சந்தோஷமா இருக்கு.படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஆசியாக்கா!!

01 09 10