Tuesday 2 June 2009 | By: Menaga Sathia

சிக்கன் பிரியாணி/Chicken Biryani

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 4

செய்முறை:

*சிக்கனை சுத்தம் செய்து பாதி தயிர்,பிரியாணி மசாலா பொடி,கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஊறவிடவும்.

*வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*புதினா,கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும்.

*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்

*தேங்காயை துருவி அதனுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா,கொத்தமல்லி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+தயிர்+சிக்கன் இவைகளைப் போட்டு வதக்கவும்.

*. 1 கப் அரிசிக்கு =1 1/2 கப் தண்ணீர் அளவு,ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் அளவு.

*சிக்கன் பாதி வதங்கியதும் 3 கப் தேங்காய்ப்பால்+3 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு+அரிசி(தண்ணீயை வடிக்கட்டவும்)+ உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.

*குக்கரை மூடி,ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறி பரிமாறவும்.



20 பேர் ருசி பார்த்தவர்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

நாக்குல நீர் சுரக்கிறது.......

இன்னைக்கு பிரியாணி செஞ்சு பாத்துட வேண்டியதுதான்

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வசந்த்!!

GEETHA ACHAL said...

சூப்பர் பிரியாணி....

Menaga Sathia said...

நன்றி கீதா!!

puduvaisiva said...

வணக்கம் தோழி

பல நாட்கள் ஓட்டலில் அசைவம் சாப்பிட்டு உண்மையான சுவையை நாக்கு மறந்து போய் இருக்கும் வேலையில் உங்களின் இந்த பதிவின் மூலம் சிக்கன் பிரியாணியை செய்து பார்க்க ஆசைப்படுகிறேன்.

Menaga Sathia said...

வணக்கம் சகோதரரே!!சிக்கன் பிரியாணியை செய்து சுவைத்து பாருங்கள்,நன்றாக வரும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

NISWAN DHARUSSALAM said...

சூப்பர் பிரியாணி....

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நிஸ்வான்!!

ராகவன், USA said...

சூப்பர் ரெசிப்பி!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ராகவன்!!

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. மனைவியிடம் செய்து தர சொல்லி இருக்கிறேன்... வாழ்த்துக்கள்

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனு.மணம் தூக்குது.

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனு.மணம் தூக்குது.

Chef.Palani Murugan, said...

பிரியாணிக்கு வாழ்த்துக்க‌ள்

Menaga Sathia said...

நன்றி கலைச்செல்வி!!

நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி ஆசியாக்கா!!

நன்றி செஃப்!!

SHAN said...

super briyani!, today we prepared for Ramadan, really very sperb!

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் சந்தோஷம்+மிக்க நன்றி ஷான்.இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

Sangeetha M said...

i tried this biryani few days back...really super o super biryani, so good n we all liked it so much...thank you so much Menaga for sharing..

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க நன்றி சங்கீதா!!

solaiappan said...

Very good
Mouth Watering

01 09 10