Wednesday 3 June 2009 | By: Menaga Sathia

உருளை+பட்டாணி வறுவல்

தே.பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
பச்சைப் பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது


நசுக்க வேண்டியவை:

இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 7
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:

*வெங்காயம்,தக்காளியை அரியவும்,உருளையை பெரியதுண்டுகளாக கட் செய்யவும்.

*நசுக்க வேண்டிய பொருட்களை நன்கு நசுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கி மிளகாய்த்தூளைப் போட்டு எண்ணெயிலேயே வதக்கவும்.

*தூள் வாசனை போனதும் உப்பு+உருளைக்கிழங்கு+பட்டாணியைப் போட்டு நன்கு வதக்கவும்.

*எண்ணெய் லேசாக பிரிந்து வரும் போது கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

பி.கு:ப்ரெஷ் பட்டாணி இல்லையெனில் காய்ந்த பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேக வைத்து செய்யலாம்.குக்கரில் வேக வைக்ககூடாது குழைந்து விடும்.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

கோவி.கண்ணன் said...

உங்கள் சமையல் குறிப்புகள் எளிமையாக அருமையாக இருக்கிறது. பாராட்டுகள் !

Menaga Sathia said...

//தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்// புரியல தமிழினி,எப்படினு விளக்கமா சொல்லுங்களேன்.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!!

Menaga Sathia said...

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன்!!.உங்க ப்ளாக் கதை சொல்ல வரோம் நல்லாயிருக்கு..

Menaga Sathia said...
This comment has been removed by the author.
Menaga Sathia said...

என் ப்ரெண்ட் ஒருத்தங்க எதையும் வேஸ்ட் பண்ணமாட்டாங்க.அவங்க இதை சாம்பார் செய்வாங்க,அவங்ககிட்ட கத்துக்கிட்டேன்,இந்த சாம்பார் டேஸ்ட் சௌ சௌ சாம்பார் போல இருக்கும்.
செய்து பாருங்க ரொம்ப நல்லாயிருக்கும் ஹர்ஷினி.

தர்பூசணி சாம்பார் குறிப்புல போஸ்ட் செய்யமுடியல அதான் இங்க போஸ்ட் செய்றேன்.

சாராம்மா said...

dear menaga
i preparaed this dish. it came out very well. thank you

regards
anita

Menaga Sathia said...

செய்துப் பார்த்து பின்னுட்டம் அனுப்பியதற்க்கு மிக்க நன்றி அனிதா!!

01 09 10