Monday 19 October 2009 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு சுகியன்

தே.பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
வெல்லம்- 1/4 கப்
மைதா - 1/2 கப்
தோசை மாவு - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*பாசிப்பருப்பை மலர வேகவைத்து நீரை வடிகட்டி மசிக்கவும் அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

*தேங்காய்த்துறுவல்+மசித்த பாசிப்பாருப்பை வெறும் கடாயில் லேசாக வதக்கவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக்காய்ச்சி மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.

*வடிகட்டிய வெல்லத்தில் பிசுப்பிசுப்பு பதம் வந்ததும் தெங்காய்த்துருவல்+பசிப்பருப்பு+ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும்.

*அதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதா+உப்பு+தோசைமாவு சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*பிடித்து வைத்த உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.



பி.கு:

தோசை மாவு சேர்த்து கரைப்பதால் ரொம்ப மென்மையாக இருக்கும்.கடலைப்பருப்பில் செய்வதை விட பாசிப்பருப்பில் செய்தால் இன்னும் டேஸ்டாக இருக்கும்.தேங்காய்துறுவல்+பாசிப்பருப்பை நன்கு வதக்கினால் 2 நாள் வரை வைத்திருக்கலாம்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

suvaiyaana suvai said...

different recipe good

Admin said...

நல்ல சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Priya Suresh said...

Nalla twist from usual suhiyan..Looks great Menaga!Murukku parcel vanthute irruku ungaluku..:)

Unknown said...

wow.. really yummy & delicious..

M.S.R. கோபிநாத் said...

Mouth Watering Sweet..Keep Going.

பித்தனின் வாக்கு said...

இது மிகவும் சத்தான திண்பண்டம். முளைவிட்ட பயிராக இருந்தால் இன்னமும் அருமை. எங்கள் வழக்கில் இதனை சுய்யம் என்று சொல்வார்கள். உள் வைக்கும் பொருளுக்கு பூரணம் என்று பெயர். நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

நான் கடலை பருப்பில் தான் செய்வேன் . இது அடுத்த முறை செய்யும் போது செய்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒன்னு பாசிப்பருப்பு சுகியன்.

ரொம்ப நன்றி சகோதரி

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீ!!

ஆமாம்,ரொம்ப நன்றாகயிருக்கும்.நன்றி சந்ரு!!

நன்றி ப்ரியா!!ம்ம் உங்க பார்சலைதான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்ப்பா...

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி கோபிநாத்!!

Menaga Sathia said...

முளைவிட்ட பயிறுல் செய்ததில்லை.நீங்கள் சொல்வதுப் போல்நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி பித்தன்!!

Menaga Sathia said...

அடுத்த முறை பாசிப்பருப்பில் செய்து பாருங்க.அப்புறம் அடிக்கடி இதில்தான் செய்வீங்க.நன்றி சாரு!!

Menaga Sathia said...

நன்றி நவாஸ் ப்ரதர்!!

சிங்கக்குட்டி said...

எனக்கு இதனை நாள் இந்த பையனை அதாங்க சுகியனை பற்றி தெரியாது :-).
நல்ல பகிர்வுக்கு நன்றி மேனகா.

SUFFIX said...

செய்து பார்த்துடுறோமுங்க....Thanks.

Jaleela Kamal said...

மேனகா சுகியன் சூப்பர், நான் முழு பாசிபருப்பில் தான் செய்து இருக்கேன்.


ரொம்ப அருமை

Menaga Sathia said...

என்ன சிங்கக்குட்டி இந்த சுகியனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்க.இது பெரும்பாலும் தீபாவளி அன்னிக்கு செய்வாங்க ரொம்ப நல்லாயிருக்கும்.செய்து பாருங்க.நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

இந்த குறிப்பைதான் நீங்க கேட்டீங்கன்னு நினைக்கிறேன்.செய்து பாருங்கள்.நன்றி ஷஃபி ப்ரதர்!!

Menaga Sathia said...

முழுபாசிப்பருப்புன்னா தோல் பாசிபருப்பா?நன்றி ஜலிலாக்கா!!

Jaleela Kamal said...

ஆமாம் நான் சுண்டல் வகைகள் வாரம் ஒரு முறை செய்வேன், முழு பாசிபயறு, இனிப்பு வெல்லம் சுண்டல் கொஞ்சம் நிறை செய்து பாதியை அத பாதி அப்படியே எடுத்து பிரிட்ஜில் வைத்தால் நல்ல கெட்டியாகிவிடும், அப்ப அதை எடுத்து உருண்டை பிடித்து இது போல் சுகியன் செய்வேன்.

Menaga Sathia said...

நானும் இதுபோல் முயற்சிக்கிறேன்,நன்றி ஜலிலாக்கா!!

Malini's Signature said...

எங்க மாமி எப்பவும் கடலைபருப்புலே தான் செய்வாங்க.... எங்க வீட்லே எல்லாருக்கும் இந்த ஸ்வீட் பிடிக்கும் ஆனா எனக்கு தமிழ்லே சுகியன்ன்னு சொல்லுவாங்க இப்பதான் தெரியும் :-)...ஆனா இதுக்கு மேல் மாவு சரியா கோட் ஆகலைனா எண்னெயில் வெடிக்கும் அதனாலே செய்யவே வேண்டாம்முன்னு எங்க அம்மா பயபடுத்தி விட்டுடாங்க... இன்னைக்கு நானும் செய்தேன் நல்லா வந்தது...என்னவருக்கும் அவங்க அம்மா ஞாபகம் வந்துருச்சாம் ...நன்றி மேனகா. :-)

Menaga Sathia said...

மேல் மாவு சரியா கோட் ஆகலனா வெடிக்காதுப்பா,பூரணம் எண்ணெயில் கொட்டி தீய்ந்து விடும்.

அண்ணாவுக்கு அவங்க ஞாபகம் வந்துடுச்சா.என்ன பண்ண வெளிநாட்டில் இருந்தாலே இப்படிதான்.

நன்றாக வந்ததில் ரொம்ப சந்தோஷம்ப்பா.செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க நன்றி ஹர்ஷினி அம்மா!!

01 09 10