Monday 1 November 2010 | By: Menaga Sathia

கதம்ப சாதம் / Kathamba Rice

DK's Chef in you வெப்சைட்டில் பார்த்து செய்தது.
தே.பொருட்கள்:அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
புளிகரைசல் - 1 1/2 கப்
விருப்பமான காய்கறிகள் - 3 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை+கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:*அரிசியை 3 கப் நீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.2 பருப்புகளையும் வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் காய்களை போட்டு முழ்குமளவு நீர் விட்டு 15நிமிடம் வேகவைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் புளிகரைசல்+உப்பு+சாம்பார் பொடி+கறிவேப்பிலை+பாதி வேக்காடு வேகவைத்த காய்கறிகள் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.

*காய்கள் வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து வேகவைத்த சாதம்+கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறவும்.

*கடைசியாக நெய் சேர்க்கவும்.ஊறுகாய்,அப்பளமுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Sending this recipe to T&T Event by Priya started by Lakshmi.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

முயற்சி பண்ணிப் பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

very nice.

சாருஸ்ரீராஜ் said...

ஈசியா இருக்கே, டிரை பண்ணிடுவோம்

தினேஷ்குமார் said...

கதம்ப சாம்பார் சாதம் பிரமாதம் சகோ........

இப்படி செய்துபாருங்க இன்னும் நல்லாருக்கும்

து.பருப்பு + வெட்டியா காய்கறிகள் + மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு நல்சீரகம், பெருங்காயப்போடி, ஒரு ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெய் விட்டு பருப்பு + காய்கறிகள் நன்கு மத்தில் கடையும் அலவிர்க்கு வேக விடும் பின் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிவிட்டு காய்களையும் பருப்பையும் மிக்சி அல்லது மாத்தும் பருப்பு கடையும் சட்டி இருந்தால் ஒன்றும் பாதியாக கடையவும் பின் வடிகட்டிய தண்ணீருடன் சேர்த்து நெய் ஊற்றி தாளித்து சிறிது குழம்பு பொடி சேர்த்து கொதிவந்தவுடன் புளிகரைசலை ஊற்றி இரண்டு கொதிவந்தவுடன் இறக்கிவிடவும்.........

இப்போது ருசித்து பாருங்கள் சகோ சோற்றோடு சேர்த்து ........

Asiya Omar said...

கதம்ப சாதம் இரண்டு வகை பருப்பு சேர்த்து செய்திருப்பது வித்தியாசமாக இருக்கு.

Priya Suresh said...

Naanum ithey sadham panninen Menaga, superaa irrunthu irrukume..Thanks for sending to T&T..

koini said...

Menaga innaikku idhaidhaan seyyalaamnu naanum yosichuttu irukken.adheneram inga vanthu paartha first post irukku.so enakku easyaa poiduchu.Thanks.idhe medhodla seythudarenga.Thanks.superba easyaa irukku unga kurippu.

ஸாதிகா said...

கூடவே பருப்பு வடையும் சேர்த்துக்கொண்டால்..ஆஹா..

vanathy said...

super recipe, Menaga.

'பரிவை' சே.குமார் said...

கதம்ப சாம்பார் சாதம் பிரமாதம். முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.

Sarah Naveen said...

Simply delicious..yummy yumm!!

Thenammai Lakshmanan said...

எனக்கு ஒரு கப் கதம்ப சாதம் மேனகா..:))

தெய்வசுகந்தி said...

கூட்டாஞ்சோறு மாதிரி இருக்குது. சூப்பர்!!!

Krishnaveni said...

delicious rice, beautiful

Unknown said...

வாவ் சூப்பர்.. செய்துபார்க்கிறேன்

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சாரு அக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!! உங்கள் செய்முறை படியும் ஒருநாள் செய்து பார்க்கிறேன்...

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரியா!! ஆமாம்பா ரொம்ப நல்லாயிருந்தது..

நன்றி கொயினி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி வானதி!!

நன்றி சகோ!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!! உங்களுக்கு இல்லாமலா...1 கப் என்ன நிறையவே செய்து தருகிறேன்..

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி சிநேகிதி!!

Chitra said...

ம்ம்ம்.... சூப்பர்!!! காய்கறி சாதம் என்றும் நெல்லையில் சில பகுதிகளில் சொல்வார்கள். :-)

koini said...

seythutten menaga yesterday evening...romba easyaa mudinjuthu velai...tastum nanraaga irunthadhu.thanks.

ஹுஸைனம்மா said...

து.பருப்பு மட்டுமே போட்டு, சாம்பார் பொடிக்குப் பதிலாக அரைத்து விட்ட மசாலா போட்டுச் செய்திருக்கேன், இது ஈஸியாருக்கு. செய்துபாக்கணும்.

Jaleela Kamal said...

kathampa saatham nalla irukkku

01 09 10