Friday 4 March 2011 | By: Menaga Sathia

கார்லிக் ரோல்ஸ் / Garlic Rolls

சுகைனாவின் குறிப்பில் பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.நன்றி சுகைனா!!
தே.பொருட்கள்
ஆல் பர்பஸ் மாவு - 3 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
எள் - மேலே தூவ
பால் - 1/4 கப்

ஸ்டப் செய்ய
வெண்ணெய் - 50 கிராம்(அறை வெப்பநிலை)
உப்பு - 1 டீஸ்பூன்
துருவிய பூண்டுப்பல் - 3
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*1 கப் மிதமான வெந்நீரில் சர்க்கரை+ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.

*ஒரு பவுலில் ஈஸ்ட் கலவை+உப்பு+மாவு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.பின் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.
* பொங்கிய மாவை மிருதுவாக பிசையவும்.
*ஸ்டப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலக்கவும்.
 *மாவை இரண்டு பெரிய உருண்டையாக எடுக்கவும்.ஒரு உருண்டையை சதுரமாக உருட்டவும்.
 *அதன்மேல் ஸ்டப்பிங் சமமாக தடவி பாய் போல சுருட்டவும்.
 *முதலில் 2ஆக வெட்டி,பின் வெட்டியவைகளை மீண்டும் 2ஆக வெட்டவும்.இதேபோல் அடுத்த உருண்டையையும் செய்துக் கொள்ளவும்.

 *பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி வெட்டியவைகளை ஒன்றோடு ஒண்ரு ஒட்டுமாறு வைத்து அதன்மேல் பால்(அ)முட்டை தடவி எள் தூவி விடவும்.
*பின் மீண்டும் இந்த உருண்டைகளை 1/2 மணிநேரம் வைத்திருந்து 200°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

*ஸ்டப்பிங் மீதமானால் ப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைத்திருந்து உபயோக்கிக்கலாம்.

*ப்ரெட் டோஸ்ட் செய்யும் போது தடவி டோஸ்ட் செய்தால் அருமையாக இருக்கும்.

*இந்த ரோல் பேக் செய்யும் போது வீடே மணமாக இருக்கும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shanavi said...

my fav menaga.. kalakureenga..Manama iruku paarkum podhe

GEETHA ACHAL said...

Aha...Love the garlic rolls...Such a tempting click...

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி மேனகா.

Shama Nagarajan said...

yummy tasty rolls

Lifewithspices said...

Menaga,

garlic smell inga enakku theriyudhu..Kalakureenga as usual..

Chitra said...

WOW! You are a great baker too. :-)

Thenammai Lakshmanan said...

பேக்கிங் ஐட்டம் எல்லாம் வீட்டில் செய்தது இல்லை.. இருந்தாலும் செய்து பார்க்கும் ஆவலை தூண்டுது மேனகா..:)

Padhu Sankar said...

Looks so tempting .

Priya Suresh said...

Garlic rolls attagasama irruku Menaga,yumm!

ஸாதிகா said...

அழகிய முறையில் செய்து காட்டி இரூக்கீங்க மேனகா.

athira said...

பார்க்கவே சூப்பராக இருக்கு.

எல் கே said...

பார்க்க நல்லா இருக்கு

Cool Lassi(e) said...

Oh my, this is fabulous! look the stepwise procedure!

Gayathri Kumar said...

Delicious rolls..

Perspectivemedley said...

perfectly made garlic rolls!!.. nice explanatory pics :)

Asiya Omar said...

ஆஹா ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் அசத்தலான குறிப்பு.சுஹைனாவிற்கும் உங்களுக்கும் பகிர்வுக்கு நன்றி.

மாதேவி said...

அருமையாக இருக்கிறது மேனகா.

Menaga Sathia said...

நன்றி ஷானவி!!

நன்றி கீதா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

நன்றி கல்பனா!!

நன்றி சித்ரா!!

நன்றி தேனக்கா!!

நன்றி பது!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி அதிரா!!

நன்றி எல்கே!!

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி காயத்ரி!!

நன்றி தேவி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி மாதேவி!!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ஸ்னாக்ஸ் மேனகா.. அருமை.
இதில் பனீர் ஸ்டஃபிங்கும் நல்லாருக்கும்.

Unknown said...

Love these rolls YUm YUM!

01 09 10