Thursday 21 July 2011 | By: Menaga Sathia

வெங்காய கோசு / Vengaya kosu

திருமதி.சோலை அவர்களின் குறிப்பில் பார்த்து செய்தது.இட்லி,தோசைக்கு செம காம்பினேஷன்!!
தே.பொருட்கள்
வெங்காயம் - 4 பெரியது
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1 சிறியது
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -6
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்(அ)முந்திரி - 6

தாளிக்க
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+உருளையை தோல் சீவி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+உருளை+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் தேங்காய் விழுது+3 கப் நீர் விட்டு 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
கடாயில் செய்வதாக இருந்தால் உருளை வெந்த பிறகுதான் தேங்காய் விழுதை சேர்க்கவேண்டும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

இன்னைக்கும் ஒரு புதிய அயிட்டமா நன்றி அக்கா.

ஸாதிகா said...

சப்பாத்தி,பரோட்டா வுக்கு மூட ஏற்ற சைட் டிஷ்.

சி.பி.செந்தில்குமார் said...

மொத ஓ சி சாப்பாடு?

சி.பி.செந்தில்குமார் said...

நைசாக அரைக்கவும்னு இருக்கே? ஏன் யாருக்கும் தெரியாம நைஸா அரைக்கனும்?பப்ளீக்காவே அரைக்கலாமே? சைவ ஆனியன் தானே?

'பரிவை' சே.குமார் said...

வார விடுமுறைக்கு ஒரு புதிய சமையல் அறிமுகம்....

Jayanthy Kumaran said...

this is just awesome menaga..
Tasty Appetite

Vimitha Durai said...

Nice side dish for chapathi/rotis...

ஆமினா said...

நல்ல குறிப்பு....

வாழ்த்துக்கள்

//யாருக்கும் தெரியாம நைஸா அரைக்கனும்?பப்ளீக்காவே அரைக்கலாமே?//
அதானே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர் டிஷ...

Unknown said...

v nice dear

Prabha said...

Liked ur Bowl!! Curry too... :) I'll also do like this,will taste superb with hot Idlies..and Crispy dosai.

Shanavi said...

Solliteengala, udane try panrein , pannivitttu solrein.

Mahi said...

சூப்பரா இருக்கு மேனகா!

திருமதி.சோலை அவர்களின் ப்ளாகைப் பார்க்க முடில..லிங்கை கொஞ்சம் சரி பண்ணுங்களேன். :)

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு சைடிஷ்..

பித்தனின் வாக்கு said...

nice.

Menaga Sathia said...

Thxs mahi,now i correct it!!

மாய உலகம் said...

வெங்காய கோசு.... எளிமையாக உள்ளது நானும் சமைக்கபோறேன்...ஆனா முதல்ல இங்க வர ப்திவர் யோரோ ஒருத்தர் தான் சாப்பிடனும் சம்மதமாக்கா.....

Malar Gandhi said...

Interesting side-dish, new kind of combination over there...looks good.

Trail back for my latest updates at new blog:
www.kitchenmantra.blogspot.com

Angel said...

இப்ப செய்து பார்த்திட்டு (சாப்பிட்டும் கூட )கமென்ட் போட ஓடி வந்தேன் .ரொம்ப டேஸ்டா இருக்கு மேனகா .நான் தோசாவுடன் சாப்பிட்டேன் .mouth watering recipe .thanks .

Mrs.Mano Saminathan said...

நல்ல குறிப்பை தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீர்கள் மேனகா! இட்லிக்கும் தோசைக்கும் நல்ல பொருத்தமாக இருக்கும்!

Menaga Sathia said...

@ஏஞ்சலின்
என்னுடைய குறிப்புகளை செய்து பார்த்து மறக்கமால் பின்னூட்டம் அளிப்பதில் சந்தோஷமா இருக்கு...மிக்க நன்றி ஏஞ்சலின்.இந்த குறிப்பை நான் பல தடவை செய்துவிட்டேன்.என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்...

Jaleela Kamal said...

கொத்சு அருமை

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு

Akila said...

simply superb....

Dish Name Starts with I
Learning-to-cook
Regards,
Akila

MOON_LIGHT said...

அக்கா தேங்காயுடன் அரைக்க கா.மிளகாய்க்கு பதில் ப.மிளகாய் பயன்படுத்தலாமா?

Menaga Sathia said...

@ரேவதி
பச்சை மிளகாய் சேர்த்து செய்ததில்லை..காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்தால் தான் கலரா இருக்கும்..

01 09 10