Monday 9 April 2012 | By: Menaga Sathia

மீன் பிரியாணி /Fish Biryani

 பிரியாணியில், மீன் பிரியாணி மிகவும் சுவையானது.சமைப்பதற்க்கு நீண்ட நேரம் ஆனாலும்இதனை மிகவும் பொறுமையாக செய்தால் நன்றாக வரும்.அஸ்மா அவர்களின் குறிப்பை பார்த்து இந்த  பிரியாணியை செய்தேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி அஸ்மா!!

தே.பொருட்கள்


பாகம் - 1

மீன் துண்டுகள் -1/2 கிலோ
முட்டை -2
எலுமிச்சை சாரு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மிளகு,சீரகத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

பாகம் -2

பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 10
கேரட் - 1
இஞ்சி பூண்டு  விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 கைப்பிடி
பால் ,தயிர் - தலா 1 கப்
எலுமிச்சைபழம் - 1
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லிதழை - 1 கட்டு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
பட்டை -1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -2

செய்முறை

*மீனை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது+எலுமிச்சை சாறு+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+மிளகுசீரகத்தூள்+உப்பு சேர்த்து கலந்து 1 மனிநேரம் ஊறவிடவும்.


*பின் எண்ணெய் விட்டு 2 பக்கமும் உடையாமல்  முறுகலாக பொரித்தெடுக்கவும்.

 *முட்டை+கடலைமாவு+சிறிது உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.


*வேறொரு கடாயில் பொரித்த மீன் துண்டுகளை முட்டை கலவையில் நன்கு நனைத்து 2 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.மீதமுள்ள முட்டை கலவையை மீனிலேயே ஊற்றி பொரித்தெடுக்கவும்.


*இப்பொழுது பிரியாணிக்கான மீன் ரெடி!!
 *வெங்காயத்தை நீளவாக்கிலும்,பச்சை மிளகாயை கீறியும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.தேங்காய் துறுவலை நன்கு மைய அரைக்கவும்.கேரட்டில் பாதியை நறுக்கியும்,மீதியை துருவியும் வைக்கவும்.


*புதினா,கொத்தமல்லியை நறுக்கவும்.நறுக்கிய  வெங்காயத்தில் பாதியும்,கொத்தமல்லியில் பாதியும் எண்ணெயில் பொன்முறுவலாக பொரித்தெடுக்கவும்.எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுக்கவும்.


*அரிசியை 1/2 மணிநேரம் , 1 கப் பால்+ 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தக்காளி+நறுக்கிய,துருவிய கேரட்+தக்காளி என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


*வதங்கிய பின் அரைத்த தேங்காய்+உப்பு+தயிர்+தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.


*அனைத்தும் நன்கு சேர்ந்தாற்போல் வரும் போது  எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 கோப்பை அளவு குருமாவை தனியாக எடுத்து வைக்கவும்.


*மீதியுள்ள குருமாவில் அரிசியில் ஊறவைத்த பால்+தன்ணீரை சேர்த்து ஊற்றி நன்கு கலக்கி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


*குருமா கொதிவரும் போது அரிசியை போட்டு  வேகவிடவும்.


*தண்ணீர் நன்கு வற்றி அரிசி 3/4 பதமாக  வெந்து வரும் போது பாதி அரிசியை எடுத்து தனியாக வைக்கவும்.


*மீதி சாதத்தில் பொரித்த மீன் துண்டுகள்+தனியாக எடுத்துவைத்த குருமா+பொரித்த வெங்காய மல்லித்தழை தூவி விடவும்.


*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை+நெய் ஊற்றி விடவும்.


                                          
*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை+நெய் ஊற்றி விடவும்.

*190°C  டிகிரிக்கு அவனை முற்சூடு செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

*பரிமாறும் போது சாதம்+மீனை உடையாமல் கிளறி எடுத்து பரிமாறவும்.

பி.கு
*நான் பயன்படுத்தியிருப்பது வஞ்சீர மீன்.மீனை 2 முறை பொரிப்பதால் உடையாமல் இருக்கும்.

*இதற்க்கு அதிகம் முட்கள் இல்லாத மீனைதான் பயன்படுத்த வேண்டும்.வஞ்சீரம்மீன் (நெய் மீன்/அருக்குலா மீன்),கொடுவா மீன்,கடல் சால்மன் மீன்,காக்கை மீன்,விலை  மீன்,பெரிய தேங்காய் பாரை மீன் இவற்றை பயன்படுத்தலாம்.

*கேரட் சேர்ப்பதால் பிரியாணி சுவையாகவும்,கலராகவும்  இருக்கும்.


8 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

ம்ம்.யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி..

Akila said...

Pakkave arumaya iruku... Never tried thus fish Briyani... Will try it soon

Priya Suresh said...

Sunday special'aa..Briyani pakkura pothey pasikuthu..SUPER..

Asiya Omar said...

அருமையாக செய்திருக்கீங்க மேனகா.மீன மணம் அவ்வளவாக இந்த செய்முறையில் தெரியாது என்று நினைக்கிறேன்.

Packya said...

மீன் பிரியாணி அசத்தலா இருக்கு. உங்களுடைய குறிப்பை பார்த்ததும் செய்ய வேண்டும் போல தோணுது. மீன் வாங்கியவுடன் பிரியாணி தான் செய்ய போறேன்.

அஸ்மா said...

//சுவையான குறிப்புக்கு நன்றி அஸ்மா//

அன்று நீங்கள் டெலிஃபோனில் சொன்ன அன்றிலிருந்து எப்போது போடுவீர்கள் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன் மேனகா :-) செய்துப் பார்த்து நன்றியுடன் பகிர்ந்தமைக்கு நன்றிபா :)

Vimitha Durai said...

Meen biryani Enakku romba pudikkum... Arumaiyaana dish

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நன்றிங்க !

01 09 10