Thursday 17 May 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத கேரட் கேக்(ப்ரெஷர் குக்கர் செய்முறையில்) /Eggless Carrot Cake (Pressure Cooker Method)

 அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்.முதல் முறையாக ப்ரெஷர் குக்கரில் செய்த கேக்...நான் ஸ்டிக் ப்ரெஷர் குக்கராக இருந்தால் நல்லது,அலுமினியத்தில் பயன்படுத்துவதாக இருந்தால் பேக்கிங் சோடாவை தூவி பயன்படுத்தினால் குக்கரின் உட்பாகம் கருக்காது.

கேக் செய்யும் குக்கரில் தண்ணீர் ஊற்றக்கூடாது.விசில் மற்றும் கேஸ்கட் போடகூடாது.கேக் பாத்திரத்தை நேரடியாகவும் வைக்ககூடாது.குக்கர் ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் கேக் பாத்திரத்தை வைக்கவும்.

குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கேக் செய்யும் போது சொதப்பிவிட்டது.பின் இந்த ரெசிபியை பார்த்து செய்ததில் சரியாக வந்ததிலிருந்து பெரும்பாலும் ஸ்டீம்ட் கேக்தான் செய்கிறேன்...
தே.பொருட்கள்

மைதா - 1 கப்
சர்க்கரை -3/4 கப்
கேரட் பெரியது - 1 துருவிக்கொள்ளவும்
பால் -1/2 கப்
வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் - தலா 1/2 டீஸ்பூன்

செய்முறை

* பாலில் வினிகரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*மைதா+ பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா சேர்த்து 2முறை சலிக்கவும்.

*10நிமிடத்திற்கு பிறகு பால் திரிந்து இருக்கும்,அதனை நன்கு கலக்கவும்.

*பின் சர்க்கரை+எண்ணெய் சேர்த்து ,சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
 *குக்கரை 5 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு செய்து ,பேக்கிங் சோடாவை தூவி விடவும்.

*பின் மைதா கலவை+எசன்ஸ்+துருவிய கேரட் அனைத்தையும் மிருதுவாக சர்க்கரை கலவையில் கலக்கவும்.

*கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி,மைதா மாவை தூவி விடவும்.பின் கேக் கலவையை ஊற்றவும்.

*குக்கரின் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் கேக் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.

*பின் குறைந்த தீயில் 25-30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.நடுவில் குத்தி பார்க்கும் போது வேகவில்லை எனில் மேலும் 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Romba azhaga nalla busu busunu cake super o super..Thanks for sharing those tips Menaga..

ஹுஸைனம்மா said...

சிலநாள் முன் ஒரு குக்கர்கேக் செய்முறை பார்த்தேன்:
http://savithaskitchen.blogspot.com/2012/05/blog-post.html?ext-ref=comm-sub-email

நீங்க சொல்லிருக்க முறையுமெளிதா இருக்கு. ஒரு சந்தேகம்: நீங்க கொடுத்திருக்கும் லிங்கில் சொல்லிருப்பதுபோல இன்னொரு காலி பாத்திரத்தை அடியில் வைத்தால், அந்தப் பாத்திரம் கருகி விடாதா?

சி.பி.செந்தில்குமார் said...

>>அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்.

என்னதான் நீங்க அந்நியோன்யமான தம்பதியாக இருந்தாலும் சமையலில் உங்களூக்கு உதவியாக இருக்கும் எங்கள் அண்ணனை அவன் இவன் என்று பேசுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஹி ஹி பை தேடிப்போய் வம்பு வளர்ப்போர் சங்கம்

சி.பி.செந்தில்குமார் said...

>>குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கேக் செய்யும் போது சொதப்பிவிட்டது

h ஹா ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ ஹே ஹே ஹை ஹை.. _ இந்த சிரிப்பை உங்களுக்கு வ்ழங்குபவர் மேனகாவின் கணவர்.. ஹா ஹா

Hema said...

Do you pour water inside the cooker, it's come out very well..

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு மேனகா. செய்து பார்க்கிறேன்.

காலி பாத்திரம் கருகி விடும் வாய்ப்பு உள்ளதா என நானும் அறிய விரும்புகிறேன்.

Akila said...

wow very yummy... romba nalla vanthu iruku...

Event: Dish Name Starts With L
Learning-to-cook
Regards,
Akila

மனோ சாமிநாதன் said...

கேக் ரொம்பவும் அழகாக நல்லா வந்திருக்கு மேனகா!

Unknown said...

Amma vum,naanga chinnadha irundhappo,ippadi dhan seyvaanga.memories are nostalgic.

ஸாதிகா said...

அருமையான கேக்.

Menaga Sathia said...

@ஹூசைனம்மா, ராமலஷ்மி அக்கா..

ஹூசைனம்மா நீங்கள் கொடுத்த லிங்கை நான் ஏற்கனவே பார்த்தேன்,மணல் போட்டு செய்திருந்தாங்க,ஆனா இங்க மணல் கிடைக்காதே.....இதன் படி செய்ததில் நன்றாக வந்தது.குக்கர் ஸ்டாண்ட் இல்லாமல் அலுமினியம் பாத்திரம் வைத்தும் அதன்மேல் கேக் கலவையை வைத்தும் ஒருமுறை செய்து பார்த்தேன்.காலி பாத்திரம் கருகவில்லை.தைரியமாக முயற்சித்து பாருங்கள்.நன்றாக வரும்.பாத்திரமும் கருகாது.....

Menaga Sathia said...

ஹேமா

குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை செய்தபோது நீராவியெல்லாம் கேக்கில் பட்டு கேக் கொழகொழவென ஆகிடுச்சு.நீங்கள் செய்திருந்தால் விளக்கமாக சொல்லுங்களேன்...அதன்படியும் செய்து பார்க்க விரும்புகிறேன்....

Menaga Sathia said...

சி.பி.செந்தில்குமார்

என் கேக் வீணாகிபோனதில் அவ்வளவு சந்தோஷமா உங்களுக்கு...

//என்னதான் நீங்க அந்நியோன்யமான தம்பதியாக இருந்தாலும் சமையலில் உங்களூக்கு உதவியாக இருக்கும் எங்கள் அண்ணனை அவன் இவன் என்று பேசுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஹி ஹி பை தேடிப்போய் வம்பு வளர்ப்போர் சங்கம்
// என்னை வம்புல மாட்டிவிடுறதுக்கு எப்போன்னு காத்துகிட்டு இருக்கீங்க போல.....

Unknown said...

I have tried pressure cooker cake 2 times with banana. Now the time has come to try with carrot. looks yumm.

ராமலக்ஷ்மி said...

விளக்கத்துக்கு நன்றி மேனகா. மைக்ரோவேவில் செய்தால் (கன்வெக்‌ஷன் மோடிலும்) கேக்கில் ஒருவித உலர்ந்த தன்மை வந்து விடுகிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் முறை நிச்சயம் பயனாகும். செய்து பார்த்து விட்டுத் தெரிவிக்கிறேன்:)!

Mahi said...

சூப்பரா இருக்கு கேக்! குக்கர் கேக்னு சொன்னாத்தான் தெரியும் போல! :)

hotpotcooking said...

cake nalla vanthu irukku, that too in pressure cook method. Very nice.

'பரிவை' சே.குமார் said...

கேக் அழகா இருக்கு...
வேறென்ன சொல்றது... படம் பார்த்து சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.

Packya said...

குக்கரில் எப்படி கேக் செய்றதுன்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன்..சரியான சமயத்தில் விரிவான விளக்கம்...கேக் அழகா வந்திருக்கு..

Lifewithspices said...

romba super..

Jayanthy Kumaran said...

looks perfect & very well done menaga.:)
Tasty Appetite

ம.தி.சுதா said...

///அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்ஃஃஃஃஃ

முதல் வரியைப் பார்தததும் ரொம்பவே குழம்பிட்டேன்..

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா இந்த ரெசிபியை விட செந்தில் குமாரின் கமெண்டை மிக ரசித்தேன் மேனகா..:)

Kanchana Radhakrishnan said...

நல்ல குறிப்பு செய்து பார்க்கிறேன்.

01 09 10