Monday 14 May 2012 | By: Menaga Sathia

கம்பு இட்லி & கோவைக்காய் சட்னி/Pearl Millet(Bajra)Idly & Tindora(Ivy Gourd ) Chutney

கம்பு இட்லி

தே.பொருட்கள்

கம்பு - 1 1/2 கப்
இட்லி அரிசி/ புழுங்கலரிசி - 1/2 கப்
வெள்ளை முழு உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+கம்புஇவைகளை தனியாகவும்,உளுந்து,வெந்தயம் இவைகளை ஒன்றாகவும் ஊறவைக்கவும்.

*கம்பை மட்டும் குறைந்தது 8 மணிநேரம் அல்லது முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.

*அரிசி மற்றும் உளுந்தை 4 மணிநேரம் ஊறினால் போதும்.

*உளுந்து +கம்பு இவைகளை நைசகவும்,அரிசியை கொரகொரப்பாகவும் அரைத்து உப்பு சேர்த்து ஒன்றாக கரைத்து புளிக்கவிடவும்.

 *புளித்ததும் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.

பி.கு

*தோசையும் நன்கு முறுகலாக வரும்.

கோவைக்காய் சட்னி



தே.பொருட்கள்

நறுக்கிய கோவைக்காய் - 10/12 எண்ணிக்கை
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துண்டுகள் - 2
புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை
*மேற்கூறிய பொருட்களில் உப்பு+தேங்காய்+புதினா கொத்தமல்லி தவிர அனைத்தையும் சிறிது எண்ணெயில் வதக்கவும்.
*ஆறியதும் உப்பு+தேங்காய்+புதினா கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும்.

*விரும்பினால் தாளித்துக் கொள்ளவும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Kambu idli super softa irruku Menaga, wat a nutritious dish..Kovakkai chutney romba asathala irruku,seekarama senchu pakkanam.

Sangeetha Nambi said...

Kovakka chutney !!! nice... Good combo !

ஸாதிகா said...

கோடை காலத்துக்கேற்ற குளிர்சி தரும் கம்பு உணவுகள்..அசத்துங்கள் மேனகா.

Akila said...

Wow what a healthy n soft Idlis'

Hema said...

Idli,super softa irukku, and kovakkai chutney looks good, I am yet to try this..

சி.பி.செந்தில்குமார் said...

>>புளித்ததும் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.


மாவா ஊத்துனா இட்லியா வரும், ஓக்கே, அது எப்படி இட்லியா ஊத்துவது ? ஹி ஹி

'பரிவை' சே.குமார் said...

கம்பு இட்லி புதுமையா இருக்கே...

ராஜி said...

கம்புல இட்லியா?! புதுசா இருக்கே. ஆரோக்கியமாவும் இருக்குமே. பகிர்வுக்கு நன்றி தோழி

Prema said...

wow delicious combo,love to grab the idli and chutney now:)

Kanchana Radhakrishnan said...

கோடை காலத்துக்கேற்ற கம்பு உணவுகள்..

மாதேவி said...

அருமை.

இங்கு கம்பு எல்லாம் கிடைக்காது.

Sriya said...

romba soft aa iruku very yummy and inviting ... some awards are waiting for you ...please collect you awards

01 09 10