Tuesday 2 April 2013 | By: Menaga Sathia

திருநெல்வேலி கோதுமை அல்வா(சுலப‌ செய்முறை)/Tirunelveli Wheat Halwa(Easy Method)



இன்றோடு  நான் வலைப்பூவில் எழுத தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைகின்றது..

கோதுமை பாலை கடாயில் விட்டு நீண்ட நேரம் கிண்டுவதைவிட குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுலபம் என முன்பு ஒரு வலைப்பூவில் கமெண்டில் எப்போதோ படித்ததாக ஞாபகம்.அதன்படி செய்ததில் வேலை சுலபமாக முடிந்துவிட்டது.

தே.பொருட்கள்

முழு கோதுமை - 1/2 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
கேசரி கலர் - சிறிதளவு
நெய்  - 3/4 கப்-  1 கப்
ஏலக்காய்த்தூள் -  1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி -  தேவைக்கு

செய்முறை

*கோதுமையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் கிரைண்டரில் அரைத்து 3 முறை பால் எடுக்கவும்.

*அரைத்த பாலை 2 மணிநேரம் அப்படியே வைத்திருந்தால் கெட்டிபால் அடியில் தங்கி நீர் மேலோடு தங்கியிருக்கும்.அந்த நீரை மேலோடு  ஊற்றிவிடவும்.

*குக்கரில் வைக்கும் அளவில் ஒரு பாத்திரத்தில் கோதுமைபால்+சர்க்கரை+கேசரி கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

*குக்கரில் தேவையான நீர் ஊற்றி அதனுள் இந்த மாவு பாத்திரத்திஅ வைத்து மூடி போட்டு 3 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரின் உள்ளே இருக்கும் பாத்திரத்தை எடுத்து 1/2 கப் நீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல்  கரைக்கவும் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் சிறிது நெய் ஊற்றி வெந்த மாவை ஊற்றி சிறு தீயில் கிளறவும்.இடையிடையே நெய் ஊற்றவும்.

*மாவு நன்கு வெந்து கெட்டியாகி நெய் விட ஆரம்பிக்கும் நேரத்தில் ஏலக்காய்த்தூள்+முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

*விரும்பினால் தட்டில் சமப்படுத்தி துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

பி.கு

பாலை குக்கரில் வேகவைக்காமல் சர்க்கரை பாகு 1 கம்பி பதம் வைத்து மாவை ஊற்றி இடைவிடாமல் கிளறியும் செய்யலாம்.இந்த முறையில் இடைவிடாமல்  கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.இதைவிட மேலே நான் சொன்ன செய்முறை ரொம்ப ஈசியானது.

Sending To Gayathri's WTML Event @My homemantra

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

ஆஹா, அந்த பவுலை அப்படியே இங்கே பார்ஸல் பண்ணிருங்க மேனகா! :)

வாழ்த்துக்கள், இன்னும் பலவருடங்கள் வலைப்பூவில் வலம்வர! :)

hotpotcooking said...

Congrats!!!! For your blog anniversary. Delicious halwa, romba easy aga irukuthu pressure cooker method

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைப்பதிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவ்டைந்துள்ளதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

அதற்காகவே எங்கள் எல்லோருக்கும் அல்வா கொடுத்துள்ளது தனிச்சிறப்பு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் காட்டியுள்ள அல்வா படமும் செய்முறைகளும் சுடச்சுட மிகவும் அருமையாக உள்ளன.

பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... சூப்பர்... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

ஐந்தாம் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் பல...

Akila said...

It's really superb... Just love this version... Bookmarked.. Step by step potu iruntha Innum nalla purinchu irukum.. Any how I try this soon..
Event: Dish name starts with R till April 15th and a giveaway

Lavanya said...

Halwa looks super tasty
Latest Post - Pista Kulfi Dessert

Sangeetha Priya said...

delicious halwa, congrats on ur blog anniversary...

meena said...

super aa iruku,nice glaze ,tempting clicks,easy method..

Priya Anandakumar said...

Super, kalakkiteenga... Congrats on the 4th anniversary of your blog. And also nice yummy and mouth watering Halwa for ur birthday. orey kallula rendu maanga.
ennaku romba pidikkum endha halwa. super, konja anupunga..

Priya Suresh said...

Happy blog anniversary Menaga, veetula ore kondattam than pola irruke, pirantha naal & blog anniversary, enjoy enjoy..

Halwa appadiya va va nu kupiduthu..Unga method super ponga.

RajalakshmiParamasivam said...

உங்கள் தளத்திற்கு முதல் முறை வருகிறேன். ஆஹா.....சுடசுட நே மிதக்கும் அல்வா.....
முடிந்தால் எடுத்து சாப்பிட்டு விடுவேன் போலிருக்குதே.......

dsfs said...

Super ka..

Prema said...

Happy Birthday Menaga,delicious halwa to celebrate blog Anniversary:) Congrats!!!

great-secret-of-life said...

congrats! Halwa looks so yummy

ராமலக்ஷ்மி said...

நான்காம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் மேனகா!

எளிய வழியில் எங்கள் ஊர் அல்வாவுக்கு செய்முறை:)! அருமை.

divya said...

look really tempting , i'm drooling

Unknown said...

My mom used to make exactly this way

http://www.followfoodiee.com/

Hema said...

Congrats Menaga, my favorite halwa, have to try this out..

ஸாதிகா said...

அல்வான்னா பெரிய வேலைன்னு நினைத்தேன்.இத்தனை சுலபமாக சொல்லித்தந்து விட்டீர்களே!

Mahi said...

மேனகா, இங்லிஷ் ப்ளாகில் word verification இப்பதான் ஆக்டிவேட் பண்ணினேன், காரணம்...நிறைய்ய்ய்ய spam கமென்ட்ஸ் வந்ததுதான். வர்ட் வெரிஃபிகேஷன் போட்டதும் அப்படியான கமென்ட்ஸ் கம்மியாகிருக்குப்பா! அதான் கொஞ்சநாளைக்கு இருக்கட்டும்னு விட்டிருக்கேன். :) அப்புறமா எடுத்துடுவேன், டோன்ட்வொரி! ;) :)

Mahi said...

thanks Menaga..I did change the settings now! :)

Unknown said...

Pakkave romba azhaga irukku Menaga.Try pannren.

Asiya Omar said...

வலைப்பூ தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல ஆண்டுகள் வலம் வந்து அசத்துங்க.
அல்வா சூப்பரோ சூப்பர்.பகிரும் படங்கள் மிக அருமை.

Jaleela Kamal said...

வாழ்த்துகக்ள் மேனகா இந்த பதிவு போட்டதும் முதலில் பார்த்தேன் ஆனால் இங்கு என்னால் கமெண்ட் போடமுடியல, மெயில் அனுப்பி இருந்தேன் பார்த்தீங்களா?


வாழ்த்துக்கள். உஙக்ள் அனைத்து குறிப்புகளும் அருமை,
நாவூறும் திருநெல்வேலி ஹல்வா அதை விட மிக அருமை


Jaleela Kamal said...

பிரஷர் குக்கர் முறை டிப்ஸ் க்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

Have to use "samba wheat"...

Menaga Sathia said...

@ Amutha Krishna akka

yes,for this halwa we need samba wheat only!!

சாந்தி மாரியப்பன் said...

சுலபமான வழிமுறைக்கு நன்னீஸ் மேனகா.

Unknown said...

என் இனிய வாழ்த்துக்கள்

Priya said...

ennaku epoluthe alva sapita asai.inge mulu gothumai nan kandathillai ,kandpagaga seithu parkavendiya kuripu.

01 09 10