Showing posts with label தையல் பகுதி. Show all posts
Showing posts with label தையல் பகுதி. Show all posts
Tuesday, 27 March 2012 | By: Menaga Sathia

3-4 வயது சிறுமிகளுக்கான ஸ்வெட்டர்/ Sweater With Cap for Girls (3-4 years old)


என் பொண்ணுக்காக நான் பின்னிய ஸ்வெட்டர்.எப்படி அளவெடுத்து தைப்பது என்று சொல்லியிருக்கேன்.

கீழ்வீட்டு பாட்டியிடம் கற்றுக்கொண்டேன்.அவர்கள் ப்ரெஞ்சில் சொல்லியதை ஆங்கிலத்தில் சொல்லியுள்ளேன்.என்ன இது தமிழ் பிளாக்கில் ஆங்கிலத்தில் இருக்குன்னு நினைப்பது புரிகிறது.இதனை தமிழில் அவ்வளவாக விரிவாக்கம் செய்ய தெரியவில்லை.அதான் விவரங்களை ஆங்கிலத்திலயே எழுதிவிட்டேன்.


அடிப்படை பின்னல் தெரி்ந்தவர்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.மெயிலில் அதிக தோழிகள் எப்படி பின்னுவதுன்னு கேட்டிருக்காங்க,அதை நான் சொல்வதைவிட வீடியோவாக பார்த்தால்தான் புரியும்.நிறைய மாடல்கள் யூடிபில் இருக்கு.

அளவெடுப்பது எப்படி??

உயரம் ......ஷோல்டர் டூ  இடுப்பு பகுதி

ஆர்ம்ஹோல் - உயரம் மைனஸ் ஆர்ம்ஹோல் அடிப்பகுதி

Needle N° - 3.5mm

Before
Mount 90 stitches to 15 cm in dimension 2/2, 26 cm to armhole, 1 time 3, 1 time 2, 1 time 1, to 33 cm straight neck to stop the remaining 20 stitches on everything.

Back
Mount 85 stitches to 15 cm in dimension 2/2, 26 cm to armhole, 1  time 3, 1 time 2, 1 time 1, 38 cm straight to a fair neck 1 time15 , 1 times 10, the rest to the shoulder (20 mesh)

The Sleeve



Mount 40 stitches, 15 cm in dimension 2/2 and then increase to 10 straight, that 'means clustering a 1 st time every 5 rows and 20 cm to armhole, 1 time 3, 1  time 2 , 17 times 1,
1 time 2 , 1 time 3 , remains a time.

Cap


Mount 142 stitches,2 cm in dimension 2/2 to 21 cm-height to work in 3 times and then make the sen mesh middle and take the last mesh side until the end of next stitch.
நான் முதன்முதலில் பின்னிய குல்லாவினை பார்க்க இங்கே கிளிக்கவும்.

அதனை எப்படி பின்னுவது என்று பார்க்கலாம்...

Mount 100 mesh, 21 cm 2 fair 5 stitches together. Across the row to right and then two stitches per row two stitches to knit together all the rows backwards. Take sewing needle and pick up the stitches and sew very well.
Sunday, 22 May 2011 | By: Menaga Sathia

ப்ளவுஸ் அளவெடுத்து தைப்பது எப்படி / How to measure & Cut Sari blouse...

ப்ளவுஸ் எப்படி அளவெடுப்பது என்று பார்க்கலாம்.

மார்பு சுற்றளவு
இடுப்பு சுற்றளவு
ஷோல்டர்
கையின் நீளம்
கை சுற்றளவு
ஆர்ம்ஹோல் பகுதி
முன் கழுத்து அளவு
பின் கழுத்து அளவு
ப்ளவுஸின் உயரம்.
                                                              

இவைகளை செ.மீ அளவில் அளவுகளைக் குறித்துக் கொண்டு பேப்பரில் வரைந்து வெட்டி அந்த அளவை துணியில் வைத்து வரைந்து வெட்டினால ரொம்ப ஈஸியாக இருக்கும்.ஆர்ம்ஹோல் பகுதியை மட்டும் வளைவுகளை கவனமாக வெட்ட வேண்டும்.


DART பகுதிகளை சரியாக தைத்தால் தான் ப்ளவுஸ் அழகாக  இருக்கும்.எப்போழுதும் துணியை வெட்டும் போது குறித்த அளவை விட 1இங்ச் கூடுதலாக வைத்து வெட்ட வேண்டும்.அப்போழுதுதான் தைக்கும் போது சரியாக இருக்கும்.


A- B = ப்ளவுஸ் உயரம்+2"

A -C =மார்பு சுற்றளவு/8 +2"

C - D = B - L = மார்பு சுற்றளவு / 4+1.5"

A- I =மார்பு சுற்றளவு /3+1/2"

A - E =  ஷோல்டர்/2+1/4"

E - M = 1/2" or 3/4"

A - F =மார்பு சுற்றளவு /12+0.5"

A - H= முன் கழுத்து அகலம் விரும்பிய அளவில்

K -I & N - J = 1" Or 1.5"


K - O = மார்பு சுற்றளவு /12

O - P = P - Q = 1.5"

R - S = R - T = 1" OR 1.5"

E - E' = A - C

E' - V = 1"

E' - W = 2"

பின் பக்க அளவு
B - U = இடுப்பு சுற்றளவு / 4 +1.5"
 
PATTI Part -

A- B = ( K - B) - 1/2"
B - C = இடுப்பு சுற்றளவு/4+1.5"
C- D = ( L - N) - 1"

C -E =0.5"
                                               

கைப்பகுதி
A- B =கையின் நீளம்+1.5"

A - L =மார்பு சுற்றளவு/12+0.5"

L-F=மார்பு சுற்றளவு/8 +2.5"( அ) 3"

B-C=கை சுற்றளவு /2 +1"

B-M=2" + மடித்து தைக்க

E-C=1/2"

G = A TOF நடுப்பகுதி

G-J = 1"

I = G TO F நடுப்பகுதி

I-K =0.5"

N-F = 1"

A-H =1"

(A-H-J-N) Back Syce - பின் பக்க வளைவு

(A-G-K-N-F) Front Syce -முன் பக்க வளைவு

அடுத்து வரும் பகுதியில் எப்படி வெட்டி தைப்பது என்று பார்க்கலாம்...

 நான் முந்தைய பதிவில் பின்னிய குல்லா படத்தின் பேட்டர்ன்..3 - 4 வயது குழ்ந்தைகளுக்கான அளவு...
+ ஊசியை வலதுபக்கமாக வைத்து பின்ன வேண்டும்.

- ஊசியை இடது பக்கமாக வைத்து பின்ன வேண்டும்.

* கடைசியாக முடிக்கும் போது ஊசியை வலதுபக்கமாக இரண்டிரண்டாக  சேர்த்து பின்ன வேண்டும்.அப்படியே இடதுபக்கமாக பின்னி சாதாரண ஊசியில் உல்லன்நூலை கோர்த்து  பெரிய ஊசியை எடுத்துவிட்டு சின்ன ஊசியில் கோர்த்து இணைக்க வேண்டும்.


Sunday, 8 May 2011 | By: Menaga Sathia

நான் முதன்முதலில் பின்னிய குல்லா..../ My First Big Needle Knitting

இப்பொழுதுதான் என் ப்ளாக்கில் சமையல் தவிர்த்து வேறு ஒரு பதிவு போடுகிறேன்.தொடர்பதிவு,சமையல் இவற்றை மட்டும்தான் என் ப்ளாக்கில் எழுதி வந்தேன்.முதன்முதலில் க்ராப்ட் ஒர்க் பற்றி எழுதுகிறேன்.
நான் வசிக்கும் கீழ் வீட்டு ப்ரெஞ்சுக்கார பாட்டியிடம் கற்றுக்கொண்டது.அவர்களும் ரொம்ப ஆர்வமா சொல்லிக் கொடுத்தாங்க.நான் பேசுற ப்ரெஞ்சை பாட்டி சூப்பரா புரிஞ்சிக்கிறாங்க.அதைவிட பாட்டிக்கு ஆங்கிலமும் தெரியாது.

இது நான் முதல் முதலில் என் பொண்ணுக்காக பின்னிய உல்லன் குல்லா.இதை பின்னி முடிக்க எனக்கு 10 நாள் ஆனது.பாட்டி 1 1/2  மணிநேரத்தில் முடித்துவிடுவாங்களாம்.ரொம்ப ஆச்சர்யமா இருக்குல்ல...


2நாளில் அடிப்படை பின்னல்கள் தெரிந்துக்கொண்டேன்.ஒவ்வொரு முறையும் தவறாக பின்னிய போது அதை பொறுமையோடு எபப்டி சரியா பின்னனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.அவங்களுக்கு ரொம்ப பொறுமை.

நான் இதுபோல் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது எனக்கு அந்த பொறுமை வருமான்னு தெரியல....
என்னுடைய ஆர்வத்தினால் பாட்டி எனக்கு ஒரு உல்லன் நூல்+ஊசி கொடுத்தாங்க.அதில்தான் பின்னுகிறேன்.

She is such a very Kind,Intelligent & Patience Woman.I Love Her Very Much...A Big Hug to that Grandma...
இதை பின்னுவதற்க்கு 2 ஊசிகள் வேணும்.படத்தில் ஒரு ஊசிதான் இருக்கு.இன்னொரு ஊசில் நான் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பதால் ஜோடியாக எடுக்கமுடியல.கற்றுக்கொண்ட பிறகு ரொம்ப‌ ஈஸியாக இருக்கு.
ஒரு உல்லன் பண்டல் வாங்கினால் பெரியவர்களுக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னலாம்.விலையும் 6 யூரோதான்.

முடிந்தால் பாட்டி பின்னும்போது வீடியோவாக எடுத்துப் போட முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!

தோழி சிநேகிதி,விமிதா கொடுத்த விருது.2வருக்கும் மிக்க நன்றி!!
01 09 10