Wednesday, 13 May 2009 | By: Menaga Sathia

ஜவ்வரிசி கஞ்சி வத்தல் / Sago Kanchi Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 4 கப்
உப்பு - தேவைக்கு

அரைக்க:

சீரகம் - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 7

செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தன்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*கொதித்ததும் அரைத்த விழுது+உப்பு+ஜவ்வரிசி சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை ஒரு ஸ்பூனால் கொஞ்ச கொஞ்சமா ஊற்றி எடுக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
4. பாதி தண்ணீர்+ பாதி தக்காளி சாறு சேர்த்து செய்தால் தக்காளி ஜவ்வரிசி வத்தலாகும். இன்னும் நல்லாயிருக்கும்.
Monday, 11 May 2009 | By: Menaga Sathia

மீன் பகோடா

தே.பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிது
வெங்காயம் -1
முட்டை - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை:

*வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் மீன்+உப்பு+மாவு வகைகள்+மிளகாய்த்தூள்+முட்டை+சோம்புத்தூள்+நறுக்கிய வெங்காயம்+கொத்தமல்லித்தழை+பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாக பகோடா பதத்திற்க்கு பிசையவும்

*கையில் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் பொலபொலனு இருக்கனும்.

*கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை பகோடாவாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


Saturday, 9 May 2009 | By: Menaga Sathia

கோஸ் வெங்காயத்தாள் பொரியல்

தே.பொருட்கள்:

கோஸ் - 1/4 கிலோ
வெங்காயத்தாள் - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
பாசிப்பாருப்பு - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
செய்முறை:

*கோஸ்+வெங்காயத்தாள்+பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய காய்களைப் போட்டு உப்பு+மஞ்சள்தூள்+பாசிப்பருப்பு போட்டு காய் வேகுமளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

பி.கு:
இதே மாதிரி வெங்காயத்தாளை கேரட் பொரியலிலும் சேர்த்து செய்யலாம்.
Wednesday, 6 May 2009 | By: Menaga Sathia

கருவாட்டுக் குழம்பு / Dry Fish khuzhampu


தே.பொருட்கள்:

கருவாடு - சிறிது
மொச்சைக் கொட்டை - 1/2 கப்
முருங்கைகாய் - 1
வாழைக்காய் - 1
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
கறிவேப்பில்லை - சிறிது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:

*மொச்சையை முதல்நாள் இரவே வெறும் கடாயில் லேசாக வறுத்து ஊறவைக்கவும்.

*மறுநாள் மொச்சையை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.

*பருப்பை தனியாக வைத்து,அதே நீரில் புளியை ஊறவைத்து 1 கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*கருவாட்டை சுத்தம் செய்யவும்.வெங்காயம்+சீரகம்+கறிவேப்பிலையை நசுக்கவும்.காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தை போட்டு தாளிக்கவும்.
*பின் நசுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது காய்+கருவாடு+மொச்சை போட்டு இன்னும் நன்கு கொதிக்கவிட்டு,காய் வெந்ததும் இறக்கவும்.

பி.கு:விரும்பினால் குழம்பு கொதிக்கும் போது பல்லாக நறுக்கிய தேங்காயை குழம்பு கொதிக்கும் போடலாம்.இன்னும் சுவையா இருக்கும்.
Monday, 4 May 2009 | By: Menaga Sathia

இறால் உருண்டைக் குழம்பு /Eral(Prawn) Urundai Kuzhambu


தே.பொருட்கள்:

உருண்டைக்கு:

குட்டி இறால் - 100 கிராம்
பொட்டுக்கட்லை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
தேங்காய் - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


க்ரேவிக்கு:

வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1டீஸ்பூன்

செய்முறை:


* இறாலை சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி,வதக்கி ஆறவிடவும்.

* இறால் மற்றும் தேங்காயை அரைக்கவும்.


*அரைத்த இறால்,தேங்காய் விழுது+பொட்டுக்கடலைமாவு+உப்பு+சோம்புத்தூள்+முட்டை+வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கெட்டியாக கலக்கவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலைமாவு சேர்க்கலாம்.

*பிசைந்தவைகளை உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.



*க்ரேவிக்கு வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.


*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பால்,உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.


*நன்கு கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு,எலுமிச்சை சாறு சேர்த்து 2 ந்மிடம் கொதித்தபின் இறக்கவும்.






Saturday, 2 May 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் பொரியல்


தே.பொருட்கள்:

பீன்ஸ் - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தப்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் பீன்ஸ்+ உப்பு+11/2 கப் தண்ணீர்+பாசிப்பருப்பு செர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

போண்டா


தே.பொருட்கள்:

முழு வெ.உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
தேங்காய்ப் பல் - 1/4 கப்

செய்முறை:

*உளுந்தை 1/2 மணிநேரம் ஊறவைத்து,லேசாக ஐஸ்வாட்டர் தெளித்து பொங்க பொங்க அரைக்கவும்.

*அதில் உப்பு+மிளகு+தேங்காய்ப்பல் செர்த்து நன்கு கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மாவை
உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

*சட்னி,சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.
01 09 10