Tuesday, 20 March 2012 | By: Menaga Sathia

அரைத்துவிட்ட எலுமிச்சை ஊறுகாய்/Araituvitta Lemon Pickle


தே.பொருட்கள்

உப்பில் ஊறிய முழு எலுமிச்சை பழம் -1
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1குழிக்கரண்டி
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*மிக்ஸியில் எலுமிச்சை பழத்தை போட்டு விழுதாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மிளகாய்த்தூளை போடவும்.

*உடனே அரைத்த விழுதை சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும்போது இறக்கவும்.
Sunday, 18 March 2012 | By: Menaga Sathia

மட்டன் புலாவ் /Mutton Pulao

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
மட்டன் - 1/4 கிலோ
தயிர் - 125 கிராம்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெங்காயம் - 1 பெரியது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

பட்டை - சிறுதுண்டு
பிரியாணி இலை - 2
கிராம்பு,ஏலக்காய் - தலா 2

செய்முறை
*மட்டனை சுத்தம் செய்து தயிர்+கரம் மசாலா+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.

*வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும்.சிறிது வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*அரிசியை கழுவி 20நிமிடம் ஊறவைத்து நீரைவடிக்கவும்.

*குக்கரில் சிறிது நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி எடுக்கவும்.பின் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு+மஞ்சள்தூள்+வேகவைத்த கறி+புதினா+வறுத்த அரிசி+தேங்காய்ப்பால்+கறிவேகவைத்த நீர் 2 கப் சேர்க்கவும்.

*வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.பரிமாறும் போது வறுத்த வெங்காயத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்.
Thursday, 15 March 2012 | By: Menaga Sathia

ரோஸ் சிரப் கடல்பாசி /Rose Syrup Agar Agar

 கடல்பாசியை சைனாகிராஸ் என்றும் சொல்வார்கள்.இதில் அதிகளவு நார்ச்சத்து இருக்கு.மிகவும் குளிர்ச்சியானது.உடல் சூட்டை குறைக்கும்.ரோஸ் சிரப் சேர்த்து இந்த கடல்பாசியை முதல்முதலாக செய்தேன்.மிகவும் வாசனையுடன் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்
கடல்பாசி - 5 கிராம்
தண்ணீர் - 6 கப்
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்
பிஸ்தா,பாதாம் ப்ளேக்ஸ் - அலங்கரிக்க விரும்பினால்

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.

 *நன்கு கொதித்ததும் கடல்பாசியை சேர்க்கவும்.

*அது கரைந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்.சர்க்கரையும் கடற்பாசியும் நன்கு கரைந்ததும் வடிகட்டவும்.
 *ஒரு தட்டில்  ரோஸ் சிரப்பை ஊற்றி பரவலாக தடவவும்.

 *பின் வடிகட்டிய கடல்பாசியை ஊற்றி அதன்மேல் பாதாம்,பிஸ்தாக்களை தூவிவிடவும்.
*ப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து நன்கு செட்டானதும் கட் செய்து பரிமாறவும்.
Monday, 12 March 2012 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு/Brinjal Poricha Khuzhampu

தே.பொருட்கள்

கத்திரிக்காய் -1 பெரியது
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
தேங்காய் எண்ணெய் -1 டீஸ்பூன்

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி உப்பு+மஞ்சள்தூள்+சாம்பார் பொடி+தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்.

*பின் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

பி.கு
கத்திரிக்காய் பதில் முருங்கைக்காய்,பீர்க்கங்காய் சேர்த்து செய்யலாம்.
Thursday, 8 March 2012 | By: Menaga Sathia

செக்கர்போர்ட் கேக் /Checkerboard Cake

ரொம்ப நாளாக இந்த கேக் செய்யனும் ஆசை.இதுதான் என்னுடைய முத்ல் கேக் டெகரெஷனும் கூட.ஏதோ ஒரளவுக்கு செய்துருக்கேன்.இன்னும் போகபோக சரியாக வரும்னு நினைக்கிறேன்.

இந்த கேக் செய்வதற்குன்னு கேக் செட் கடைகளில் கிடைக்கிறது.என்னிடம் உள்ள வட்ட வடிவ 1 கேக் பானிலயே நான் 3 முறை பேக் செய்து எடுத்தேன். கொஞ்சம் வேலைப்பாடுதான் ஆனாலும் கட் செய்து பார்க்க அழகா இருக்கும்.

நான் 3 லேயரில் மட்டும் செய்தேன்.இன்னும் 4 லேயர்களில் செய்தால் இன்னும் அழகா இருக்கும்.இந்த சைட்டில் cookiemadness.net பார்த்து செய்தேன்.இந்த வீடியோவையும் பார்த்தால் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.

என்னிடம் சாக்லேட் இல்லாததால் கோகோ பவுடரிலேயே கேக்+ப்ராஸ்டிங் செய்தேன்.

தே.பொருட்கள்
மைதா - 2 1/4 கப்
சர்க்கரை -2 கப்
உப்பு -1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
வெண்ணெய் - 200 கிராம்
முட்டை -3
வெனிலா எசன்ஸ் -2 டீஸ்பூன்
கோகோ பவுடர் -1/2 கப்
பால் -1/2 கப்

ப்ராஸ்டிங் செய்ய
வெண்ணெய் - 250 கிராம்
சர்க்கரை - 4 கப் நைசாக பொடித்தது
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் -1 டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*முட்டை+வெண்ணெய் இவ்விரண்டும் அறை வெப்பநிலையில் இருக்கவேண்டும்.

*மைதா+உப்பு+பேக்கிங் பவுடர் 3 முறை சலிக்கவும்.

*முட்டை மஞ்சள் கரு+வெள்ளை தனியாக பிரித்தெடுத்தெடுத்து,வெள்ளை கருவை நன்கு நுரைவரும் வரை பீட் செய்து வைக்கவும்.

*வெண்ணெய்+சர்க்கரை+மஞ்சள் கரு சேர்த்து நன்கு பீட் செய்ததும் அதனுடன் வெள்ளை கரு+பால் செர்த்து கலக்கவும்.

*கொஞ்ச கொஞ்சமாக மைதா கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

*நன்கு கலகியதும் 2 சம பங்காக பிரித்து ஒன்றில் வெனிலா எசன்ஸும்,இன்னொன்றில் கோகோ பவுடரையும் கலந்து வைக்கவும்.

*கேக் செய்யும் பானில் வெண்ணெய் தடவி மைதாவை தூவி விடவும்.அதிகபடியான மாவை கீழே கொட்டவும்.அவனை 180 முற்சூடு 10நிமிடம் முற்சூடு செய்யவும்.

*2 பைப்பிங் பேக்கில் வெனிலா கலவை+கோகோ கலவையைநிரப்பவும்.

*முதலில் நடுவில் வெனிலா கலவையை 3முறை சுற்றியும்,அடுத்து சாக்லேட் கலவையை 4 முறை சுற்றியும்,அடுத்து வெனிலா கலவையை முழுவதுமாக சுற்றி எடுக்கவும்.

*இதனை 180°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*இந்த அதிகப்படியான வெனிலா கலவை உள்ள கேக்கை 2 முறை பேக் செய்து எடுத்தேன்.

 *அடுத்து சாக்லேட் கலவையைநடுவிலும் ஓரத்திலும் மேற்சொன்ன சுற்று அளவில் சுற்றி ,நடுவில் வெனிலா கலவையை சுற்றி எடுத்து பேக் செய்யவும்..

*நம் விருப்பத்திற்கேற்ப அதிகப்படியான சாக்லேட் கலவை 2 முறை+வெனிலா கலவை 1 ஒருமுறை என பேக் செய்யலாம்.
 ப்ராஸ்டிங் செய்ய

*வெண்ணெயும்,சர்க்கரையும் நன்கு நுரை வரும்வரை பீட் செய்யவும்.

*அதனுடன் எசன்ஸ்+பால்+கோகோ பவுடரை கலக்கவும்.

கேக் அடுக்கும் முறை

*முதலில் அதிகப்படியான வெனிலா கலவை உள்ள் கேக்கை வைத்து அதன்மேல் ப்ராஸ்டிங்கை தடவி அதன்மேல் அதிகப்படியான சாக்லேட் கேக்கை வைத்து ப்ராஸ்டிங்கை தடவி அதன்மேல் வெனிலா கேக் வைத்து மேற்புறத்திலும் ஓரங்களிலும் ப்ராஸ்டிங்கை தடவி விரும்பிய வடிவில் டெகரேட் செய்யவும்.
 *கேக் கட் செய்த பின் எடுத்தது...


பி.கு

*இதனை 4 லேயராக வேறு முறையில் செய்யவேண்டுமெனில் 2 ப்ளெயின் வெனிலா கேக்+2 ப்ளெயின் சாக்லேட் கேக் செய்யவும்.

*ஒவ்வொன்றையும் 3 வட்ட வடிவில் ஒரே அளவில் வெட்ட வேண்டும்.

*அதனை வெனிலா கேக் உள்ளே சாக்லேட் கேக்கின் நடுப்பகுதி+அதனுள்ளே சிறிய வடிவ வெனிலா கேக் என அடுக்கவும்.
இப்படியே ஆல்டர்னேட்டாக மாற்றி அடுக்கவும்.

*மேற்சொன்னவாறு  வெனிலா+சாக்லேட்கேக் என மாற்றி அடுக்கி ப்ராஸ்டிங் செய்து டெகரேஷன் செய்யவும்.
Monday, 5 March 2012 | By: Menaga Sathia

சுகினி பொரியல் /Zuchchini Poriyal

தே.பொருட்கள்

சுகினி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கடுகு,உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*சுகினியை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை போட்டு தாளித்து சுகினி+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு வேகவைக்கவும்.

*சுகினி வெந்ததும் வேர்க்கடலையை பொடித்து சேர்த்து இறக்கவும்.

பி.கு
*சுகினியை தோல் சீவி சமைக்ககூடாது.தோலில் தான் அதிக சத்துக்கள் இருக்கு.மேலும் தோல் சீவி சமைத்தால் காய் குழைந்து விடும்.

*வேகவைக்கும் போது சிறிதளவு நீர் சேர்த்தாலே போதும்.

*இதனுடன் குட்டி இறால் சேர்த்தும் சமைக்கலாம்.

Thursday, 1 March 2012 | By: Menaga Sathia

ஆப்பிள் அல்வா/Apple Halwa

தே.பொருட்கள்

துருவிய சிகப்பு ஆப்பிள் -2 கப்
சர்க்கரை -3/4  கப் / இனிப்பிற்கேற்ப
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
கேசரி கலர் -1 சிட்டிகை

செய்முறை

*கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.

*மேலும் சிறிது நெய் விட்டு ஆப்பிளை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

*நன்கு நீர் சுண்டி ஆப்பிள் வெந்ததும் சர்க்கரை+ஏலக்காய்த்தூள்+கேசரிகலர் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

*பின் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
01 09 10