Monday, 9 November 2015 | By: Menaga Sathia

மைதா பிஸ்கட் / ஸ்வீட் டைமண்ட் கட்ஸ் | Maida Biscuits / Sweet Diamond Cuts | Diwali Recipes

மைதா பிஸ்கட் பலமுறை செய்தும் எனக்கு சரியாக வந்ததில்லை.நான் மாவிலேயே பொடித்த சர்க்கரை சேர்த்து செய்வேன்.

நேரம் ஆக சர்க்கரை நீர்த்து  உருட்டவே வராது.என்னுடைய வடநாட்டு தோழி சொன்னபடி செய்ததில் மிக நன்றாக வந்தது.

இதில் 2 வகை உள்ளது,ஒன்று பொரித்தெடுத்த பின் சர்க்கரை பாகில் போட்டு எடுப்பது மற்றொன்று மாவிலேயே சர்க்கரை சேர்த்து செய்வது.

நான் 2வது வகை குறிப்பினை செய்துள்ளேன்.

மைதா பிஸ்கட் குறிப்பினை கெஸ்ட் போஸ்டாக இண்டஸ் லேடீஸ் வெப்சைடில் பகிர்ந்துள்ளேன்.குறிப்பினை ங்கே பார்க்கவும்.


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
Saturday, 7 November 2015 | By: Menaga Sathia

மகிழம்பூ /இனிப்பு முறுக்கு | Maghizhampoo Murukku / Sweet Murukku | Diwali Recipes


print this page PRINT IT
அம்மா எப்போழுதும் ஒரே முறுக்கு மாவில் முள்ளு முறுக்கு மற்றும் தேன் குழல் செய்வாங்க.மாமியார் வீட்டில்  இந்த முறுக்கு செய்யும் போது எனக்கு புதுசாக இருந்தது.அவரின் இந்த முறுக்குக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.எல்லோரும் இந்த முறுக்கினை தான் அதிகம் கேட்பாங்க.இதை மட்டும் அதிகமாக செய்வாங்க.

முறுக்கு மாவில் தேங்காய்ப்பால் +பயத்தமாவு சேர்த்து கடைசியில் முறுக்கு சுட்டதும் பொடித்த கல்கண்டில் போட்டு பிரட்டி எடுப்பாங்க.முறுக்கு வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

அவரிடம் குறிப்பினை கேட்டுகும் இந்த செய்முறை சொன்னதும் எனக்கு சர்க்கரையில் போட்டு எடுப்பது பிடிக்கலைன்னு சொன்னதும் மாவிலையே பொடித்த கல்கண்டை சேர்க்கலாம்னு சொன்னாங்க.

அப்படி சேர்க்கும் போது சில டிப்ஸ்களும் தந்தாங்க,அதனால் தான் அவர் பொடித்த கல்கண்டினை மாவில் சேர்க்காமல் கடைசியில் பிரட்டி எடுப்பதாக சொன்னாங்க.

தே.பொருட்கள்

அரிசிமாவு ‍ -2 கப்
பாசிப்பருப்பு மாவு- 1/4 கப்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு- 1/8 டீஸ்பூன்
கல்கண்டு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
எள்- 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால்- 1/3 கப்
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை

*கல்கண்டினை பொடித்து தேங்காப்பாலில் கலந்து லேசாக சூடு செய்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் தவிர மீதி பொருட்களை கலந்து சூடு செய்த தேங்காய்ப்பால்+கல்கண்டு கலவையை சேர்த்து பிசையவும்.


*பின் தேவைக்கு நீர் தெளித்து மிருதுவான பதத்தில் மாவினை பிசைந்து வைக்கவும்.

*ஒற்றை ஸ்டார் அச்சியில் மாவினை போட்டு பிழிந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


*ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

பி.கு

*எப்பொழுதும் பிசைந்த முறுக்கு மாவினை மூடி வைக்கவும்.

*தேங்காய்பால்+கல்கண்டு அதிக அளவு சேர்த்தால் முறுக்கு சிவந்துவிடும்.

*இதையே கல்கண்டு சேர்க்காமல் உப்பின் அளவை அதிகபடுத்தில் செய்யலாம்.

*நான் ரெடிமேட் பயத்தமாவு பயன்படுத்தியிருக்கேன்,இல்லையெனில் 1/2 கப் பயத்தம்பருப்பினை லேசாக வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடித்து,சலித்தபின் பயன்படுத்தவும்.

*இந்த முறுக்கில் சர்க்கரைக்கு பதில் கல்கண்டினையே சேர்க்கவும் ஏனெனில் முறுக்கு சிவந்துவிடுவதற்க்கும் வாய்ப்பு உண்டு.அதனால் தான் மாமியார் மாவில் கலகண்டு பொடியை கலக்காமல் கடைசியில் பிரட்டி விடுவதாக சொன்னார்.
Thursday, 5 November 2015 | By: Menaga Sathia

7 கப் கேக்/பர்பி | 7 Cup Cake | 7 Cup Burfi | Easy Diwali Sweet Recipe

print this page PRINT IT
இந்த பர்பி செய்வதற்கு மிக சுலபம்.இதன் மொத்த கப் அளவுகளையும் கூட்டினால் 7 வரும்,அதனால் தான் இதற்கு இந்த பெயர்.

இதில் நாம் அளவுகளை நமக்கு தகுந்தாற்போல் போட்டுக்கொள்ளலாம்,ஆனால் மொத்தம் 7 கப் வருமளவு இருக்க வேண்டும்.

நெய் அளவினை குறைக்கவேண்டாம்,குறைத்தால் பர்பியின் Texture  மாறுபடும்.

சமைக்கும் நேரம் ‍‍: 20 நிமிடங்கள்
தயாரிக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 3 நபர்கள்

தே.பொருட்கள்

கடலைமாவு- 1 கப்
துருவிய கேரட்- 1 கப்
பால் -1 கப்
சர்க்கரை -1 கப்
தேங்காய்த்துறுவல்- 1 கப்
நெய் -2 கப்

செய்முறை

*கடாயில் நெய் சிறிது ஊற்றி கேரட் துறுவலை 5 நிமிடங்கள் வதக்கி ஆறவைக்கவும்.

*அதனுடன் கொடுத்துள்ள அனைத்து பொருட்களும் ஒன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.

*இப்போழுது கடாயினை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.


*பர்பி வெந்து ஒரங்களில் ஒட்டாமல் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.


*இளஞ்சூடாக இருக்கும் போது துண்டுகள் போட்டு பரிமாறவும்.

*இந்த பர்பி நொடியில் காலியாகிவிடும்.

பி.கு

*இதில் பால் சேர்த்து இருப்பதால் 2 நாட்களுக்குள் பயபடுத்தவும்.

*இதில் கேரட் துறுவலுக்கு பதில் அதே அளவு தேங்காய்துறுவலை அதிகபடுத்தி செய்யலாம்.

*நெய்யின் அளவினை குறைக்க வேண்டாம்.

*நான் கொடுத்துள்ள அளவில் பாதியளவே போட்டு செய்துள்ளேன்,

Tuesday, 3 November 2015 | By: Menaga Sathia

கோதுமை மாவு லட்டு / WHEAT FLOUR (ATTA ) LADOO | DIWALI RECIPES

print this page PRINT IT
இந்த லட்டை எளியதாக 15  நிமிடங்களில் செய்து விடலாம்.இந்த அளவில் 10 உருண்டைகள் வரும்.

தே.பொருட்கள்

கோதுமைமாவு -1 கப்
சர்க்கரை -1/2 கப்
ஏலக்காய் -2
நெய் -1/4 கப்
நெய்யில் வறுத்த முந்திரி- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கோதுமை மாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.


*சர்க்கரையுடன் ஏலக்காய் விதை மட்டும் சேர்த்து நைசாக பொடிக்கவும்.

*கோதுமை மாவு+பொடித்த சர்க்கரை+வறுத்த முந்திரி சேர்த்து கலந்து,நெய்யை நன்கு சூடு செய்து மாவில் கலக்கவும்.


*சூடாக இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

பி.கு

*ஏலக்காயின் தோலை தூக்கி எரியாமல் டீத்தூளில் கலந்து வைக்கலாம் அல்லது குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து குடித்தால் தீர்த்தம் குடிப்பது போலவே இருக்கும்.

*இங்கு நான் பயன்படுத்தியிருப்பது ப்ரவுன் சர்க்கரை.

*1/4 கப் நெய்யே போதுமானது,விரும்பினால் 2 டேபிள்ஸ்பூன் இன்னும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
Sunday, 1 November 2015 | By: Menaga Sathia

தக்காளிக்காய் கூட்டு/GREEN TOMATO(PACHA THAKKALI) KOOTU | KOOTU RECIPES

தே.பொருட்கள்

பாசிபருப்பு- 1/4 கப்
தக்காளிக்காய் -3 பெரியது
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு

அரைக்க‌

தேங்காய்த்துறுவல்- 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -2
சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க 
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு- தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*குக்கரில் பாசிபருப்பு+மஞ்சள்தூள்+நறுக்கிய தக்காளி +தேவையான நீர் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.

*பின் வெந்ததும் நன்கு மசித்து அரைத்து தேங்காய் விழுது +உப்பு+1/4 கப் நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
Thursday, 29 October 2015 | By: Menaga Sathia

அவல் மிக்ஸர் / AVAL (POHA) MIXTURE | DIWALI RECIPES



print this page PRINT IT
  தே.பொருட்கள்

அவல் -2 கப்
ஒமப்பொடி -1 கப்
வேர்கடலை -1/3 கப்
பொட்டுக்கடலை -1/3 கப்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு- 1/4 கப்
எண்ணெய் -பொரிக்க‌
கறிவேப்பிலை -3 கொத்து

செய்முறை

*எண்ணெய் காயவைத்து அவல்+வேர்கடலை+பொடூக்கடலை+கரிவேப்பிலை+முந்திரி இவற்றை தனிதனியாக வறுத்து கிச்சன் பேப்பரில் எண்ணெய் வடியவிடவும்.

*பாத்திரத்தில் வறுத்த வேர்கடலை+பொட்டுக்கடலை+கறிவேப்பிலை+முந்திரி+மிளகாய்த்தூள்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.

*பின் வறுத்த அவல்+ஒமப்பொடி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்






Saturday, 24 October 2015 | By: Menaga Sathia

காஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BURFI) | DIWALI RECIPES



print this page PRINT IT
காஜு கத்லி முதல் முறையாக செய்யும் போது பாகுபதம் தவரி சொதப்பிவிட்டது,மேலும் முந்திரியை சரியாக பொடிக்காமல் செய்ததாலும் சரியாகவரவில்லை.

பின் இரண்டவது முறை செய்யும் போது முந்திரியை பொடித்து சலித்து,சரியான பாகு பதம் எடுத்து செய்ததில் சரியாக வந்தது.

தே.பொருட்கள்

முந்திரி -1/2 கப்
சர்க்கரை -1/2 கப்
நீர்- 1/4 கப்
நெய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*முந்திரியை மிக்ஸியில் நிறுத்தி நிறுத்தி நைசாக பொடிக்கவும்.தொடர்ந்து  பொடித்தால் எண்ணெய் விடும்.

*பொடித்த முந்திரியை ரவை சலிக்கும் சல்லடையில் சலிக்கவும் அல்லது நைசாக பொடித்திருந்தால் சலிக்க தேவையில்லை.

*நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+நீர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

*1 கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரியை தூவி சிறுதீயில் கலக்கவும்.

*சிறிது நேரத்தில் அனைத்தும் சேர்ந்தார் போல் வரும் போது இறக்கவும் அல்லது சிறிது மாவினை எடுத்து உருட்டி பார்த்தால் உருட்டும் பதத்தில் வந்தால் அதுவே சரியான பதம்.

*நெய் தடவிய தட்டு அல்லது பலகையில் கொட்டி,கை பொறுக்கும் சூட்டில் மாவினை பிசையவும்.

*குட்டியான பதத்தில் மிருதுவான‌  உருண்டையாக வரும்.

*இப்போழுது பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது உருண்டையை அதன் மீது இன்னொரு பட்டர் பேப்பர் வைத்து 1/4 அளவு தடிமனாக உருட்டவும்.

*மேலிருக்கும் பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு டைமண்ட் வடிவில் கட் செய்யவும்.

*சுவையான காஜூ கத்லி தயார்

பி.கு

*1 கம்பி பதம் என்பது சர்க்கரை பாகினை இரண்டு விரல்களுக்கு இடையை தொட்டு பார்த்தால் 1 இழை போல வரும்.

*முந்திரியை ப்ரிட்ஜில் வைத்திருந்தால் அறை வெப்பநிலையில் வந்த பிறகு பொடிக்கவும்,மேலும் மிக்ஸியின் ஜாரும் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

*முந்திரியை பொடித்து சலித்துக் கொள்வது நல்லது.

*உருட்டும் போது சதுர வடிவில் உருட்டு துண்டுகள் போட்டால் அதிகம் வீணாகமல் இருக்கும்.

*இளஞ்சூடாக இருக்கும் போது உருட்டி துண்டுகள் போடவும்,ஆறினால் துண்டுகள் போட கஷ்டமாக இருக்கும்.

*பிசையும் போது  டிரையாக இருந்தால் சிறிது பால் தெளித்து மாவினை பிசையும்,அப்படி பிழையும் போது சீக்கிரமே பயன்படுத்திவிடவும்.

*பால் சேர்க்காமல் செய்தால் 1 வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*முந்திரியை பால் விட்டு அரைத்து செய்யும் போது பர்பிChewy ஆக‌ இருக்கும்.




01 09 10