Wednesday 16 September 2009 | By: Menaga Sathia

உருண்டை மோர் குழம்பு

தே.பொருட்கள்:

மோர் குழம்புக்கு

தயிர் - 125 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி +துவரம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தனியா - 1 டீஸ்பூன்

உருண்டைக்கு:

துவரம்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் -3
பூண்டுப்பல் -4
இஞ்சி - 1 சிறுதுண்டு
மிளகு -4


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பச்சரிசி+து.பருப்பு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.தனியாவை வெறும் கடாயில் வறுக்கவும்.

*ஊறியதும் இவற்றுடன் தேங்காய்+சீரகம்+ப.மிளகாய்+இஞ்சி+தனியா சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

*தயிரைக்கடைந்து உப்பு+மஞ்சள்தூள்+எலுமிச்சைசாறு+அரைத்து விழுது சேர்த்து நீர்க்க கரைக்கவும்.

*உருண்டைக்கு குடுத்துள்ள துவரம் பருப்புடன்+மிளகாய் சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*அதனுடன் உப்பு+மிளகு+பூண்டுப்பல்+இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய்விட்டு அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாக கிளறவும்.

*அதனை உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மோர் கலவையில் வெந்த உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.


பி.கு:
அசத்தலான சுவையில் இருக்கும் இந்த குழம்பு.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

வாவ் பருப்பு உருண்டை குழம்பு போல் மோர் உருண்டை குழம்பு ம்ம் அருமை பார்க்க நல்ல இருக்கு

Unknown said...

நானும் இதனை போல் செய்வேன்.. ரொம்ப ருசியான குழம்பு..

அன்புடன் மலிக்கா said...

அசத்துறீங்க மேனகா சூஊஊஊஊப்பர்பா

SUFFIX said...

தயிர் வடை தெரியும், மோர் உருண்டையா, சரி நடத்துங்க!!

GEETHA ACHAL said...

எனக்கும் தயிர்குழம்பில் வடையினை போட்டு செய்வது தான் தெரியும்...இது புதுவிதமாக இருக்கின்றதே...

கலக்குங்க மேனகா...சூப்பர்ப்...நல்ல இருக்கு...

Priya Suresh said...

Wow paruppu urundai more kuzhambu, supera iruke..Paruppu urundaila kurma, urundai kuzhambu, paruppu urundai rasathuku piragu ippo more kuzhambu..supera irruku Menaga, aama yeppo yenga veetuku varinga..Me waiting with savouries..:)

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

ஆமாம் பாயிஷா ரொம்ப ருசியாக இருக்கும்.இந்த குழம்புக்கு நான் அடிமை.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி மலிக்கா!!

ஆமாம் போர் உருண்டை ரொம்ப நல்லாயிருக்கும் ஷஃபி.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

ஒருமுறை செய்துப் பாருங்க கீதா அப்புறம் இந்த குழம்பிற்க்கு அடிமையாகிடுவிங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!

செய்துபாருங்கள் ப்ரியா ஒருமுறை நன்றாகயிருக்கும்.திடீர்ன்னு ஒருநாள் வருவேன்.முறுக்கு கண்டிப்பா செய்து குடுக்கணும்.நன்றி தங்கள் கருத்துக்கு.

Admin said...

nalla suvaiyaaka irukkum enru ninaikkinren. (valayulakil naan muthan muthalaaka taminkilishla idum pinnuddam tamil type panrathila sinnappirashsanai)

R.Gopi said...

மேனகா

எனக்கு ரொம்ப பிடிச்சதுல இதுவும் ஒண்ணு... பருப்பு உருண்டை குழம்பு போலதானே..

துபாய்ல எதுவும் கெடைக்காம இருக்கற நேரத்துல, இதை எல்லாம் பதிவுல போட்டு வெறுப்பேத்தறீங்க....

பரவாயில்ல... வீட்டுக்கு லீவுல போறப்போ, செய்ய சொல்ல வேண்டியதுதான்... ஜமாய்க்க வேண்டியதுதான்...

முடிஞ்சா, துபாய்க்கு கொஞ்சம் பார்சல் போடுங்க...

சாப்பிட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்... உங்கள் கை பக்குவத்தை...

Menaga Sathia said...

ஆமாம் சந்ரு நன்றாகயிருக்கும்.ஒருமுறை செய்துப் பாருங்கள்.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

பார்சல் அனுப்பினேனே வந்ததா கோபி எப்படியிருக்கு என் கைப்பக்குவம்.

துபாயில் என்ன கிடைக்கல உங்களுக்கு.இந்த பொருட்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கும் போது உங்களுக்கு ஏன் கிடைக்காது?

நன்றி தஙக்ள் கருத்துக்கு!!

நட்புடன் ஜமால் said...

முந்தா நாள் செய்தோம் உருண்டை செய்து போடவில்லை.

அடுத்து முறை முயலுகிறோம்.

Priya dharshini said...

romba arumaiyana kulambu..Many ppl forgot this...thanks for this post..will try soon..

சாருஸ்ரீராஜ் said...

மேனகா , நான் எப்பொழுதும் மோர் குழம்புனா வடை தட்டி தான் போடுவேன் , நேற்று , உருண்டை போட்டு செய்தேன் , ரொம்ப நல்லா இருந்தது, எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க.

Menaga Sathia said...

செய்து பாருங்கள் ப்ரியா.எனக்கு பிடித்த குழம்பில் இதுவும் ஒன்று.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

செய்துப் பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிக்க நன்றி சாரு.எல்லோருக்கும் பிடித்ததில் சந்தோஷம்.

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
பார்சல் அனுப்பினேனே வந்ததா கோபி எப்படியிருக்கு என் கைப்பக்குவம்.

துபாயில் என்ன கிடைக்கல உங்களுக்கு.இந்த பொருட்கள் அனைத்தும் எனக்கு கிடைக்கும் போது உங்களுக்கு ஏன் கிடைக்காது?

நன்றி தஙக்ள் கருத்துக்கு!!//

பார்ச‌ல் வந்த‌து... ந‌ன்றி... சூப்ப‌ர் டேஸ்ட்.. ஏவ்வ்வ்...

கரெக்ட்தான்...துபாயில் எல்லாம் கிடைக்கும்... ஆனால்..எங்க‌ளுக்கு இதை செய்து பார்க்க‌ கிச்ச‌ன் வ‌ச‌தி இல்லீங்கோ.... அத‌ சொன்னேன்... இல்லேன்னா, ஜ‌மாய்ச்சுடுவோம்ல‌...

அதனால...இப்போதைக்கு, நீங்க‌ள் அங்கிருந்து ச‌மைய‌ல் செய்து சாப்பிட‌... நான் இங்கிருந்து வெறும் ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மட்டுமே.......

susri said...

ithu sinna vayasula sappiddathu
en blog http://susricreations.blogspot.com

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுஸ்ரீ!!

01 09 10