Tuesday 8 September 2009 | By: Menaga Sathia

சிக்கன் மிளகு குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 சிறியது
பூண்டுப்பல் - 10
மிளகுத்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
ப்ரோசன் பட்டாணி - 1 கப் (விருப்பப்பட்டால்)
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு -2
பிரிஞ்சி இலை -2


செய்முறை :

*சிக்கனை சுத்தம் செய்யவும்.

*வெங்காயம்+தக்காளி+பூண்டு இவற்றை வெட்டிக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் தனியாத்தூள்+மிளகுத்தூள்+வினிகர்+சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.

*தேவையானளவு நீர்+உப்பு போட்டு வேகவிடவும்.

*கறி வெந்ததும் பட்டாணியை போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:

குளிர்காலத்தில் தொண்டை கரகரப்பாக இருக்கும் போது இந்த குழம்பு செய்து சாப்பிடலாம்.உடம்புக்கு நல்லது.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப ஈசியாத்தான் தெரியுது.

பிரிஞ்சி இலை - இது என்னதுன்னு தெரியலையே. வேரு ஏதேனும் பெயர் உண்டா?

Priya Suresh said...

Wow Menaga,udane unga veetuku virunthuku valarama, chicken pepper kuzhambu manakuthey...arumaiya nalla karama irruku..Superb!

SUFFIX said...

நல்லா இருக்குங்க!! ஒரு சின்ன சந்தேகம், எதற்க்கு வினிகர் சேர்க்க வேண்டும்? சுவைக்காகவா? அல்லது விரைவில் வேகுவதற்க்கா?

Menaga Sathia said...

பிரிஞ்சி இலை என்பது பிரியாணி இலை.இதற்க்கு அந்த பெயரும் உண்டு.தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே!!

Menaga Sathia said...

நன்றி உலவு.காம்!!

Menaga Sathia said...

வாங்க ப்ரியா எங்க வீட்டு உங்களுக்கு இல்லாமலா?ஆமாம்பா காரசாரமா நல்லாயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

வினிகர் சுவைக்காக சேர்ப்பது.அப்போழுதுதான் இந்த குழம்பின் டேஸ்ட் நல்லாயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி ஷஃபி ப்ரதர்!!

PriyaRaj said...

Wow looking Hot & Spicy menaga.....Pls collect ur awards from my blog dear...

Chitra said...

Hello mam, first time here.U have a very nice blog..Iam a vegetarian.But my hubby likes pepper based kuzhambu.So i'll try this with veggies..Thanks mam..do visit my blog @ur free time :)

Jaleela Kamal said...

மேனகா பார்த்தாலே காரசாரமா தெரியுது.
பெப்பர் சிக்கன்

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கும்,விருதுக்கும் நன்றி ப்ரியாராஜ்!!

Menaga Sathia said...

இதே மாதிரி வெஜ்லயும் செய்யலாம்,நன்றாகயிருக்கும்.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

நட்புடன் ஜமால் said...

யம்மீ ... ஸ்பைஸீ

Menaga Sathia said...

நன்றி ஜமால் தங்கள் கருத்துக்கு.

01 09 10