Friday 11 September 2009 | By: Menaga Sathia

தூனாமீன்(Thon) பொடிமாஸ்

தே.பொருட்கள்:

தூனாமீன் - 1 டின்
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை -சிறிது
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பூண்டுப்பல் -5

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்

செய்முறை :

*வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூண்டு+வெங்காயம்+பச்சை மிளகாய் அனைத்தயும் போட்டு நன்றாக வதக்கவும்.

*டின்னை உடைத்து மீனை தண்ணிலிருந்து நன்கு பிழிந்து வைக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள்+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+மீன்+உப்பு அனைத்தையும் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு பொலபொலவென்று ஆனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

கவனிக்க:

டின் மீனில் உப்பு இருப்பதால் உப்பு பார்த்துப் போடவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

என்னமா சமைக்கிறியள்!?

அருமை!

Unknown said...

ரொம்ப நாள் ஆச்சு இந்த தூனா மீன் சாப்பிட்டு... உங்கள் செய்முறையும் நல்லாயிருக்கு..

Priya Suresh said...

Naan itha tuna meen puttu'nu peru vachi irruken.. podimas looks delicious Menaga...

ப்ரியமுடன் வசந்த் said...

ஹையா நான் விரும்பி சாப்பிடும் டின் ஃபிஷ் தூள்....

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜோதிபாரதி!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா,ப்ரியா,வசந்த்!!

UmapriyaSudhakar said...

மிகவும் எளிதான குறிப்பு மேனகா.கண்டிப்பாக செய்துப் பார்ப்பேன்.

Admin said...

ரொம்பவே சுவையாய் இருக்கும் போல இருக்கு.

Priya dharshini said...

naala eruku unga blog

சிங்கக்குட்டி said...

ஆகா என்ன சுவை(படிக்கும் போது) ஊருக்கு வந்தா ஒருநாள் விருந்து உறுதி :-))

S.A. நவாஸுதீன் said...

தூனா + குபூஸ் + பெப்சி(இப்ப பெப்சி சாப்பிட்ரதில்லை) ரொம்ப பிடிச்ச ஒன்னு

SUFFIX said...

டின்னில் வரும் தூனாவைப் பற்றி பலரும் பலதும் சொல்கிறார்களே, (அதில் மெர்க்குரி சேர்க்கிறார்கள் என பெரும்பாலும் சொல்வார்கள்)அதனால் நம்பி வாங்க பயமாக இருக்கு சகோதரி, முன்பு நாங்கள் உபயோகித்தோம், தூனா சான்ட்விச் நான் விரும்பி சாப்பிடுவேன். இப்போது வாங்குவதில்லை.

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்க உமா,நன்றாகயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

ஆமாம் சந்ரு சுவையாக இருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி சந்ரு!!

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரியா!!

விருந்துக்கு நிச்சயம் வாங்க.தங்கள் கருத்துக்கு நன்றி சிங்கக்குட்டி.

Menaga Sathia said...

நீங்க சொல்லும் காம்பினேஷனும் நல்லயிருக்கு.தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸூதீன் சகோதரரே!!

நீங்கள் சொல்வது சரியே.எப்பவாவது ஆசையாகயிருக்கும் போது வாங்கி செய்வோம்.இப்போழுது டின் புட்லாம் வாங்குவதில்லை.தங்கள் கருத்துக்கு நன்றி ஷஃபி ப்ரதர்!!

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு நன்றி மேனகா, என் பக்கத்தில் ஒரு பதிவை போட்டாச்சு.

Jaleela Kamal said...

மேனகா துனா புட்டு ரொம்ப அருமை, நான் என்றுமே டின் புட் வாங்குவதில்லை, எப்பவாவது தான்
இந்த குறிப்புக்காக வாங்கி செய்து பார்க்கலாம் போல் இருக்கு.

தேவன் மாயம் said...

ஏங்க! சாதாரண சாம்பாரெ சரியாக் கிடைக்க மாட்டெங்குது! நீங்க வேற ஆசையைக் கிளப்பி விடுகிறீர்கள்!!!!!!

Menaga Sathia said...

உடனே பதிவு போட்டதற்க்கு நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

ஆசைப்பட்டால் செய்து சாப்பிடவேண்டியதுதான்.தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

ஏன் மருத்துவரே சாம்பார் கிடைக்க மாட்டேங்குதா? ஆச்சர்யமா இருக்கு.நான் வேற உங்க ஆசையை தூண்டிவிட்டுட்டேன்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கும் மேனகா..
எனக்கும் இங்கு இந்த மீன் கிடைக்கும்...

எதோ எனக்கு தான் இந்த மீன் பிடிப்பதில்லை...ஆனால் இவருக்கு இது ரொம்ப பிடிக்கும்...ரெண்டு டின் இருக்கு...இந்த வாரம் செய்து கொடுக்கபோகின்றேன்.

குறிப்புக்கு நன்றி.

Menaga Sathia said...

செய்து குடுங்க நல்லாயிருக்கும்.நன்றி கீதா!!

Asiya Omar said...

டூனா மீன் பொடிமாஸ் அருமை.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

Angel said...

yummy recipe.tin fish tuna eppadi sappittalum tasty thaan.naan idhil sandwich seyveen .indha podimasodu konjam boiled potatoes serthu samosavum seydhu parthen .it came very nice .thanks for yummy recipe.

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி+நன்றி ஏஞ்சலின்..இதனுடன் உருளை சேர்த்து சமோசா செய்து பார்த்தீங்களா..ரொம்ப சந்தோஷம்...

01 09 10