Tuesday 13 October 2009 | By: Menaga Sathia

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தே.பொருட்கள்:

குட்டி கத்திரிக்காய் - 8
புளி தண்ணீர் - 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 5
கறிவேப்பிலை -சிறிது
தக்காளி - 1 சிறியது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 3 கீறிய பத்தை
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை -சிறிது

செய்முறை :

*புளிதண்ணீரில் உப்பு+தக்காளி கரைத்து வைக்கவும்.

*எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ளவையுடன் தேங்காய் சேர்த்து விழுதாக ரைக்கவும்.

*வெங்காயம்+பூண்டுப்பல் நறுக்கவும்.கத்திரிக்காயை நான்காக கீறவும்(முழுவதும் வெட்டக்கூடாது).
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்+பூண்டு+கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த விழுதை சேர்த்து புளிகரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

R.Gopi said...

2 மணிக்கு மத்தியான சாப்பாடு முடித்து விட்டு தேனீர்க்காக காத்திருக்கும் இடைவெளியில், "எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு" பதிவு பார்த்தேன்... மறுபடியும் பசி வந்துடிச்சி...

பலே... போட்டோ பார்த்தாலே இதோட ருசி தெரியுது... லைட்டா கெடைச்சா, ஒரு பிடி சாதம் போட்டு டேஸ்ட் பண்ணி பார்க்கலாம்...

Menaga Sathia said...

அப்போ மறுபடியும் பசி வந்து இந்த குழம்பு செய்து சாப்பிட்டீங்களா கோபி!!.வாங்க வாங்க சூடா செய்து தரேன் சாப்பிடுங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!

நட்புடன் ஜமால் said...

நல்லாருக்கே மேட்டரு - சரி லிஸ்ட்டில் வச்சிப்போம் - தங்ஸ் வரட்டும் ...

S.A. நவாஸுதீன் said...

செய்முறை விளக்கமும், போட்டோவும் பார்த்தாலே உமிழ்நீர் சுரக்கிறது.

M.S.R. கோபிநாத் said...

வாவ்..என்னுடைய Favourite குழம்பு. ரெசிப்பிக்கு நன்றி

Menaga Sathia said...

ம்ம் அண்ணி வந்ததும் செய்து சாப்பிடுங்க.நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

நன்றி நவாஸ்!! இந்த குழம்பை மறுநாள் சாப்பிட சுவையோ சுவை...

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கோபிநாத்!! என்னுடைய பேவரிட் கூட...

UmapriyaSudhakar said...

எனக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு இது. நான் வேற மாதிரி செய்வேன். நீங்க செய்த மாதிரி பண்ணிப் பார்க்கப்போறேன்.

Priya Suresh said...

Yennaku pidicha kuzhambu...mouthwatering tangy kuzhambu Menaga...

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க இது மாதிரி செய்து சாப்பிடனும், முயச்சிக்கின்றேன். எங்க மன்னி இது மாதிரி கத்திரிக்காய் பொறியல் செய்வார்கள் அதை பின்னால் பதிவாக போடவுள்ளேன். நல்லா இருக்கு. நன்றி.

Jaleela Kamal said...

மேனகா உங்கள் எண்ணை கத்திரிக்காய் சூப்பர்,

இஸ்லாமிய இல்ல கல்யாணங்களில் பிரியாணிக்கு எண்ணை கத்திரிக்காய் இல்லாத பிரியாணியே கிடையாது. ஆனால் எங்கள் செய்முறை வேறு.


இந்த முறையிலும் செய்து பார்க்கனும்.

SUFFIX said...

கத்தரிக்காய் குழம்பு பசிக்கு தீணி போடுறது மாதிரி, சாதம் அது பாட்டுக்கு உள்ளே போகும்!! Yummy yummy!!

Menaga Sathia said...

இந்த முறையில் செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்.நன்றி உமா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி பித்தன்!!

நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஷஃபிக்ஸ்!!

01 09 10