Sunday 15 November 2009 | By: Menaga Sathia

தக்காளி புலாவ்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
தக்காளி விழுது - 1 1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 1 1/2 கப்
புதினா - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2


செய்முறை :

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+புதினா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் தக்காளி விழுது+மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வதக்கி தேங்காய்ப்பால்+1 கப் நீர்+உப்பு +அரிசி சேர்த்து வேகவிடவும்.

*3 விசில் அல்லது வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஈஸியான தக்காளி புலாவ் ரெடி.

*இதற்க்கு ராய்த்தா,உருளை வறுவல்,எண்ணெய் கத்திரிக்காய் நன்றாகயிருக்கும்.31 பேர் ருசி பார்த்தவர்கள்:

நாளும் நலமே விளையட்டும் said...

அரிசி எதுக்கு?

தக்காளி குழம்பு தான் வரும்போல?

இராகவன் நைஜிரியா said...

ஹை.. தக்காளி புலாவ்...

சூப்பருங்க...

தங்கமணி நாளைக்கு இதுதான் அப்படின்னு சொல்லிட்டாங்க

Anonymous said...

simple but delicious.

Malar Gandhi said...

THat looks super yum, thakkali pulav is one of the usuals for me during boring sundays...even today I made the same, same pinch:)

பித்தனின் வாக்கு said...

ஆகா சூப்பருங்க படம் நல்லா இருக்கு, அந்த தட்டேட பார்சல் அனுப்பி வையுங்க. நன்றி.

S.A. நவாஸுதீன் said...

தக்காளி புலாவ் - Nice Recipe.

GEETHA ACHAL said...

மேனகா...சூப்பராக இருக்கின்றது தக்காளி புலாவ்..

எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவிருப்பம்..

என் கணவருக்கு தக்காளி சாதம், தக்காளி பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும்..அதற்கு கூட உருளைகிழங்கு வறுவல் + பச்சடி இருந்தால் ஒரு பிடிபிடித்து விடுவோம்...

Vijiskitchencreations said...

என்ன மேனஹா எப்படி இருக்கிங்க? ம். எனக்கு ரொம்ப பிடிக்கும் தக்காளி புலவு,பிரியாணி, தக்காளி சாதம். எல்லாமே நல்லா இருக்கும். இதற்க்கு உருளை வறுவல் நல்ல காம்பினேஷன்.

Anonymous said...

i think no one has read how to make this dish.

None of them said when one has to add rice if at all needed

Menaga Sathia said...

அரிசியை குறிப்பில் சேர்க்க மறந்துட்டேன்.
நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நாளும் நலமே விளையட்டும்...

Menaga Sathia said...

இன்னிக்கு செய்து சாப்பிட்டீங்களா?நன்றி அண்ணா!!

Menaga Sathia said...

நன்றி அம்மு!!

நீங்களும் இதே தான் செய்தீங்களா?நன்றி மலர்!!

Menaga Sathia said...

பார்சல் அனுப்பியாச்சு,வந்ததா?நன்றி சுதா அண்ணா...

நன்றி நவாஸ் ப்ரதர்!!

Menaga Sathia said...

எனக்குத் தக்காளியில் எது செய்தாலும் பிடிக்கும்ப்பா.நன்றி கீதா!!

Menaga Sathia said...

நான் நலம்,நீங்களும் உங்க குட்டீஸ்களும் நலமா விஜி?
ஆமாம் இதற்க்கு உருளை வறுவல் பெஸ்ட் காம்பினேஷன்.நன்றி விஜி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...

Thenammai Lakshmanan said...

THAKKALI PULAO SUPERB MENAKA

parthale sapida thoonuthu

Menaga Sathia said...

தவறை சுட்டிக்காட்டியதற்க்கு மிக்க நன்றி.இப்போழுது திருத்திவிட்டேன்.நன்றி அனானி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்...

Menaga Sathia said...

நன்றி தேனம்மை அக்கா!!

suvaiyaana suvai said...

super Menaga!!!!1

urpadmapriya said...

very mice recepie.

geetha said...

ஹாய் மேனு!
எப்பிடியிருக்கீங்க? தக்காளி புலாவ் பார்க்கும்போதே நாவில் நீருற்று.
எனக்குதான் தக்காளியில் செய்த எந்த உணவும் பிடிக்குமே!
மேனு இப்ப கொஞ்சம் நாளா உங்க அண்ணன் டயட்டில் இருக்கார். நானும் சேர்ந்து நாக்கு செத்துப்போய் கிடக்கேன். நாளைக்கு இதுதான் என் லன்ச்.
தூங்கிக்கொண்டிருந்த என் நாவின் சுவை மொட்டுக்களை தட்டி எழுப்பிட்டீங்க!

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!

நன்றி பத்மப்ரியா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்..

Menaga Sathia said...

ஹாய் கீதா நான் நலம்.நீங்க எப்படியிருக்கிங்க.முதல்முறையா என் ப்ளாக் வந்தீருக்கிங்க.ரொம்ப சந்தோஷம்.எனக்கும் தக்காளி சமையல் ரொம்ப பிடிக்கும்.
செய்து பார்த்து சொல்லுங்க.வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!!

Priya Suresh said...

Tomato pulao superaa irruku Menaga..yennaku pidicha dishla ithuvum onnu..

Jaleela Kamal said...

மேனகா ரொம்ப அருமையான தக்காளி புலாவ் ஒரு வித்தியத்துக்கு அரைத்து ஊற்றி விட்டீர்களா.இந்த ஐடியாவும் சூப்பர்.

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!எனக்கு புலாவ் வகைகள் ரொம்ப் பிடிக்கும்.

Menaga Sathia said...

//தக்காளி புலாவ் ஒரு வித்தியத்துக்கு அரைத்து ஊற்றி விட்டீர்களா.இந்த ஐடியாவும் சூப்பர்.// இந்த குறிப்பு அண்ணிக்கிட்டயிருந்து சுட்டது.நன்றி ஜலிலாக்கா!!

Kanchana Radhakrishnan said...

very nice receipe

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

my kitchen said...

சூப்பராக இருக்கின்றது.எனக்கு ரொம்ப பிடிக்கும்

Menaga Sathia said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்,நன்றி செல்வி!!

01 09 10