Tuesday 1 December 2009 | By: Menaga Sathia

பழக்கலவைத் தொக்கு

தே.பொருட்கள்:

பழக்கலவை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் - 1சிட்டிகை

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு


செய்முறை :

*பழங்களை சதுரதுண்டங்களாக நறுக்கி குக்கரில் நீர் விடாமல் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்த பழங்களை மசிக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

*உடனே மசித்த பழக்கலவையை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி எடுக்கவும்.

*மோர்,ரசம் சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.


பி.கு:

*பழங்கள் அதிகமாக இருந்தால் இப்படி செய்யலாம்.

*நான் சேர்த்திருக்கும் பழங்கள் க்ரீன் ஆப்பிள்+பைனாப்பிள்+மஞ்சள் மற்றும் வெள்ளை மெலன் பழங்கள்.

30 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

menaka ithu sweet and spicya irukkumaa illa full sweetta irukkumaa?

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்ஸ்....

எப்டி சகோ எங்க கத்துக்கிட்டீங்க இதெல்லாம்?

மாம்ஸ் கொடுத்துவைத்தவர்தான்

எப்டியிருக்கார் இப்போ கல்யாணத்திற்க்கு பிறகு ஒரு சுற்றென்ன ரெண்டு சுற்று பெருத்திருப்பார்தானே?

:)))

M.S.R. கோபிநாத் said...

ட்ரை பண்ணிடுவோம்.

Priya Suresh said...

Superb Menaga, ippadi oru arumaiyana kuripu koduthathuku romb nandri..

suvaiyaana suvai said...

hai Menaga how are you? naangka maangkaayil thaan intha maathiri pannuvom ithu puthusa irukke try panren!!!

Padma said...

Kalavai thokku looks super. Nice recipe with mixed fruits.

S.A. நவாஸுதீன் said...

படமே அதன் சுவை சொல்லுதே

ஸாதிகா said...

வித்தியாசமான தொக்குதான்.முந்திரி தாளித்துக்கொட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

பித்தனின் வாக்கு said...

ஆகா நாக்கில் எச்சில் ஊறுதுங்க, நல்ல மணமும், சுவையும் இருக்கும்ன்னு நினைக்கின்றேன். எங்க வீட்டில் மாம்பழத்தை மட்டும் இது மாதிரி கொஞ்சம் வெல்லம் போட்டு பண்ணுவார்கள். நல்லா இருக்கு. நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

ம்ம்ம் பார்கவே சூப்பர் மேனகா உங்கள் தொக்கு ... வாய் ஊறுது.

Menaga Sathia said...

இது இனிப்பு,புளிப்பு,காரம் கலந்த கலவையாக இருக்கும்.நன்றி அம்மு மது!!

Menaga Sathia said...

என் கணவரோட நண்பர் இந்தியாவுக்கு போகும்போது அவங்க வீட்ல இருந்த பழத்தை கொடுத்தாங்க.அது நிறைய இருந்ததால் என்ன செய்ய்லாம்னு யோசித்தபோது வந்த ஐடியா இது.

//எப்டியிருக்கார் இப்போ கல்யாணத்திற்க்கு பிறகு ஒரு சுற்றென்ன ரெண்டு சுற்று பெருத்திருப்பார்தானே?
//எப்படி பார்த்த மாதிரி சொல்றீங்க.சரியாதான் சொல்லிருக்கிங்க.நன்றி வசந்த்!!

Menaga Sathia said...

செய்து பாருங்க.நன்றி கோபி அண்ணா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

சுஸ்ரீ நான் நலம்.நீங்க எப்படியிருக்கிங்க?நானும் மாங்காயில்தான் பச்சடி செய்வேன்.பழம் நிறைய இருந்ததால் இப்படி செய்தேன்.நன்றி சுஸ்ரீ!!

Menaga Sathia said...

நன்றி பத்மா!!


நன்றி நவாஸ் அண்ணா!!

Menaga Sathia said...

நீங்க சொல்லும் போதுதான் முந்திரி ஞாபகமே வருது.நீங்க சொல்வது போல் முந்திரி போட்டிருந்தால் இன்னும் நன்றாகயிருந்திருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருந்தது.செய்து பாருங்கள்.நன்றி சகோ!!உங்கள் சபரிமலை பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!!

செய்து பாருங்க.ரொம்ப அசத்தலா இருக்கும்.நன்றி சாரு அக்கா!!

Shama Nagarajan said...

different one...nice

கற்போம் கற்பிப்போம் said...

வணக்கம் சகோதரி ம் மாங்காய் தொக்கு கேள்விப்பட்டிருக்கிறேன் ஆவக்காய் மற்றும் கோவக்காய்....இது என்ன பழத்தொக்கா?? அருமையான படைப்பு...நன்றி

நித்தியானந்தம்
புதுவை.காம்

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி சகோதரரே!!

Priya said...

எனக்கு தொக்கு வகைகள் ரொம்ப பிடிக்கும், நிச்சயமா ட்ரை பண்ணனும், இது வித்தியாசமா இருக்கு!

Malar Gandhi said...

Thats an interesting spicy version of fruits, I really like it...can't wait to try them...must be very tasteee:)

Nathanjagk said...

ம்ம்ம்!! காரமும் இனிப்பும் கலந்த ​தொக்கு!
ஸைட் டிஷ்ஷுக்கு நல்லதா ஐடியா கொடுத்த மாடர்ன்-கிச்சன்-மாஸ்ட்ரோ சஷிகாவுக்கு ஓ!

Menaga Sathia said...

செய்து பாருங்கள் நன்றாகயிருக்கு.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி மலர்!!

நன்றி ஜெகநாதன்!!

Kanchana Radhakrishnan said...

nice recipe

Thenammai Lakshmanan said...

தக்காளித் தொக்குதான் செய்து இருக்கிறேன்

இது என்ன வித்யாசமாக.... நல்லா இருக்கு...


எங்களுக்காக ட்ரையல் செய்து போடுவதுதான் சுப்பர்ப் மேனகா

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி அக்கா!!

Julaiha Nazir said...

புதுவிதமா இருக்கு நல்லா இருக்கும்னு நினைக்குறேன் செய்து பார்க்கிறேன் மேனகா
முடிந்தால் என் ப்ளாக் போய் பாருங்கள் இன்னும் முழுமையாக செய்யவில்லை
ஜீலைஹா

http://nahasi.blogspot.com/

Menaga Sathia said...

வாங்க ஜூலைஹா,உங்கள் பக்கம் வருகிறேன்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜூலைஹா!!

01 09 10