Sunday 20 December 2009 | By: Menaga Sathia

பிடி கொழுக்கட்டை/Pidi Kozhukattai

தே.பொருட்கள்:

அரிசிமாவு - 2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
வறுத்த எள் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
உப்பு- 1 சிட்டிகை


செய்முறை :

*வெல்லத்தை சிறிது நீர் விட்டுக் காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*அரிசிமாவு+உப்பு+தேங்காய்த்துறுவல்+எள்+பாசிப்பருப்பு+வடிகட்டிய வெல்லம் அனித்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*அதை உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

அண்ணாமலையான் said...

கொழுக்கட்டை மாதிரியே சின்னதா இருக்கு குறிப்பு. பட் டேஸ்ட்டா இருக்கு..

Chitra said...

படமும் செய்முறையும் - அருமை.

நட்புடன் ஜமால் said...

இனிப்பு விரும்புவதில்லை

அம்மா எனக்காக உப்பு போட்டு செய்து தருவாங்க.

ஹூம் --- அது ஒரு கனா(க்)காலம்.

R.Gopi said...

கொழுக்கட்டைகள் பலே...

பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு...

உங்கள் பயணம் இனிதாக இருக்க வாழ்த்துக்கள்....

(அடையார் ஆனந்த பவன்ல கொழுக்கட்டை நன்றாக இருப்பதாக ஒரு தகவல்...)

பித்தனின் வாக்கு said...

ஆகா அருமை. பார்சல் பிளிஸ். நல்லா இருக்குங்க.வாசனைக்கு ஏலம் சேர்க்கவில்லையா.

Priya said...

ம்ம்... இப்பவே செய்து சாப்பிடனும் போலிருக்கு!

சாருஸ்ரீராஜ் said...

மேனகா ரொம்ப நல்லா இருக்கு நான் வெல்லம் போட்டு செய்யமாட்டேன் , சாய்ந்திரம் செய்து விட்டு சொல்கிறேன்

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான கொழுக்கட்டை.
நானும் இந்த வாரம் இதே கொழுக்கட்டை தான் தான் எள் சேர்க்காமல் செய்தேன். நாஙக்ள் இது முஹரம் மாதம் செய்வோம்

Shama Nagarajan said...

nice one...my mom's fav..

S.A. நவாஸுதீன் said...

இந்த மாசம் ஊருல நிறைய கொழுக்கட்டை கிடைக்கும் (அரபியில் முதல் மாதம்). ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடதான் முடியும் இப்போ.

suvaiyaana suvai said...

ஆகா அருமை. பார்சல் பிளிஸ்!!

Priya Suresh said...

Kozhukattai saapite naal achu..superb..

SUFFIX said...

எனக்கு மிகவும் பிடித்த பதார்த்த்ங்களில் கொழுக்கட்டையும் ஒன்று:)

01 09 10