Thursday 31 December 2009 | By: Menaga Sathia

கல்கண்டு சாதம்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பால் - 1கப்
டைமண்ட் கல்கண்டு - 1 கப்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*அரிசி+பாசிப்பருப்பை குக்கரில் 1கப் பால்+1 1/4 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும்.(நீரில் கரைய நேரமாகும்).

*கல்கண்டு பவுடரை சிறிது நீர் விட்டு பாகுபதம் வரை காய்ச்சி வெந்த அரிசி பருப்பில் சேர்க்கவும்.

*நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை+ஏலக்காய்த்தூள்+மீதமிருக்கும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

*சுவையான கல்கண்டு சாதம் ரெடி.அம்மனுக்கு பிடித்த நைவேத்தியம் இது.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

my kitchen said...

Ennanu roomba pidikum,Nanraga errukirathu. Wishing you and your family a very happy and prosperous New Year dear:)

Jaleela Kamal said...

கல்கண்டு சாதம் ரொம்ப அருமை மேனகா,ஸ்பெஷலா போட்டுட்டீஙகளா?

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

புத்தாண்டு ஸ்பெஷலா..கல்கண்டு சாதம்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

நாக்குல ஊறுது... புத்தாண்டு அதுவுமா ஆசைய கெளப்பிட்டீங்க..

Thenammai Lakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மேனகா நலமே பொலிக

Anonymous said...

புதிய ஆரம்பம்..
2010 புதுவருட தினம் உத்தியோகபூர்வமாக தமிழ்ப்பெண்கள் திரட்டி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
http://tamilpenkal.co.cc/
உங்கள் நண்பிகளுக்கும் தமிழ்ப்பெண்கள் திரட்டியை அறிமுகப்படுத்துங்கள்.

Malini's Signature said...

மேனகா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

sivanes said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ச்கோதரி, தங்கள் அன்போடு அளித்த விருதுக்கு ஒரு பதிவு...! அன்பும் நன்றியும்

http://tamilpoongga.blogspot.com/2009/12/blog-post_31.html

malarvizhi said...

இனிய புத்தாண்டுக்கு இனிப்பான கல்கண்டு பொங்கல். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

கல்கண்டு பாத் பற்றி என் பதிவையும் பாருங்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

இனிப்பான விஷயம்.

இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.

SUFFIX said...

புத்தாண்டு இனிப்பா!! ரொம்ப நன்றி.

அண்ணாமலையான் said...

ஹாய் நம்ம பக்கம் உங்க ஓட்டும், கருத்தும் கானோமே?

Priya Suresh said...

Romba pidicha sadham..just love this..Happy new year wishes to u and ur family Menaga!

ஸாதிகா said...

பாசுமதியில் பண்ணினால் இன்னும் சுவை கூடுமே?

01 09 10