Wednesday 14 April 2010 | By: Menaga Sathia

மசாலா டீ

தே.பொருட்கள்:
பால் - 1 கப்
டீ பேக் - 1
சர்க்கரை - இனிப்புக்கேற்ப

பொடிக்க:
ஏலக்காய் -7
பட்டை - 1 சிறுதுண்டு
சுக்கு - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
மிளகு - 3
 
செய்முறை :
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.(எனக்கு ஏலக்காய் வாசனை ரொம்ப பிடிக்கும்.அதனால் நான் அதிகம் சேர்ப்பேன்.ஏலக்காய் டீ குடித்தால் டென்ஷன் குறையும்,மூளை சுறுசுறுப்பாகும்.புக்கில் படித்தது).

*பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து கொதித்ததும் டீ பேக் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பாலை சேர்த்து கொதிக்க வைத்து பொடித்த பொடியில் 1 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.

*கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.சுவையும் மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.
 
பி.கு:
ஊரிலிருந்து வரும் போது 3 ரோஸஸ் மசாலா டீ 2 பாக்கெட் வாங்கி வந்தேன்.அதில் ஒரு வாசனையும்,ருசியும் இல்லை.வீணாக்க கூடாதுன்னு அதைபோட்டு குடிக்கிறேன்.இனி வாங்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pavithra Srihari said...

I agree with u abt that 3 roses masala tea powder. Total waste.Yours is definitely a fragrant tea. I can smell it here and the taste of those spices

vanathy said...

Menaga, My husband loves masala tea. I will try this very soon.

Nithya said...

Aaha arumai :)

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...மசாலா டீ...மேனகா..ஒரு கப் பர்சல்...சீக்கிரம்...

Gita Jaishankar said...

Hi dear...I too love masala tea...especially homemade powders like these....looks good :)

Cool Lassi(e) said...

Masala tea looks fabulous! Love to have it for teatime.

Chitra said...

home-made masala tea....... mmmmm..... super!

வேலன். said...

மசாலா டீ அருமை சகோதரி..ஆனால் டீ கப்பில் ரொம்ப தூரத்தில் உள்ளதே...கொஞ்சம் அதிகம் கொடுத்தால்தான் என்னவாம்..வாழ்க வளமுடன்,வேலன்.

சசிகுமார் said...

சமையலில் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவரே, நீங்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்க

'பரிவை' சே.குமார் said...

ithu naangal atikkati poduvathakilum pattai, milagu puthithu. try panni parkirom. nanri

ஸாதிகா said...

பட்டை'கிராம்பு.மிளகு டிரை பண்ணுவோம்.சாதாரணமாக டீயில் ஏலம்,இஞ்சிதான் சேர்ப்போம்.

Kanchana Radhakrishnan said...

சூப்பர்..மசாலா டீ..மேனகா.

Priya Suresh said...

Haha Menaga, nandri naan 3roses masala tea vangi anupivida sollalam'nu irrunthen, thanks for letting me know athu total waste'nu...Masala tea pakkava yeduthu kudika solluthu..superb tea.

சாருஸ்ரீராஜ் said...

மேனகா நானும் 3 roses masala tea வாங்கி நொந்து போய்ட்டோம் , அதனால் இஞ்சி , ஏலம் தட்டி தான் போடுறது , இந்த மெத்தட் டிரை பண்ணி பார்க்கிறேன்.

Menaga Sathia said...

இப்போ அடிக்கடி இந்த டீ தான் போட்டு குடிக்கிறேன்.நன்றி பவித்ரா!!

நன்றி வானதி!!

நன்றி நித்யா!!

பார்சல் அனுப்பினா வேஸ்ட் ஆகிடும்.வீட்டுக்கு வாங்க போட்டு தரேன்.நன்றி கீதா

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி தமிழினி.காம்!!

நன்றி கூல் லஸ்ஸி!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

உங்களுக்காக கப் நிறைய டீ,குடியுங்கள்...நான் முக்கால் கப் தான் குடிப்பேன் அதான் அப்படியே படத்தை சுட்டுட்டேன்.நன்றி சகோ!!

நன்றி சகோ!!

நன்றி சசி!! இன்னும் கத்துக்க நிறைய இருக்கு சசி...

நன்றி சகோ!! செய்து பாருங்கள்.செரிமாணம் இல்லாதபோதும் இந்த டீ குடித்தால் சீக்கிரம் செரித்துவிடும்..

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,வாசனை கமகமன்னு இருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ப்ரியா!! ஐயோ ப்ரியா தப்பித்தவறி வாங்கிடாதீங்க.டேஸ்ட் நல்லாயில்லை..

செய்து பாருங்கள்,அனைவருக்கும் பிடிக்கும்.நன்றி சாரு அக்கா!!

பனித்துளி சங்கர் said...

நமக்கு ஒரு டீ பார்சல் .

மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

நித்தி said...

வணக்கம் சகோதரி Brooke bond 3 roses எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பிடிக்காது தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் என்னோட favorite Lipton Topstar தான் ஆனால் இப்போ lipton+brookebond ஒண்ணா ஆகிடாங்கனு நினைகிறேன். ஏலகாய் தேனீர் அருமையான பானம் ...என் அம்மா தேனீரோடு ஏலகாய்,அதிமதுரம் கலந்து தருவார்கள் ஒருநாளைக்கு சுக்கு சேர்த்து தருவார்கள் .

ஆக நான் ஒரு tea addict ..
படைப்பிற்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

உடனே செய்து பார்த்துட வேண்டியதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

Menaga Sathia said...

வீட்டுக்கு வாங்க போட்டு தருகிறேன்.நன்றி சங்கர்!!

நீங்க சொல்வது உண்மைதான் டாப்ஸ்டார் டீ தான் ரொம்ப நல்லாயிருக்கும்.அதிமதுரம் போட்டு டீ குடித்ததில்லை ஆனால் 3 ரோசஸ் மாசாலா டீயில் ஆட் செய்திருக்காங்க ஆனால் அதில் ஒரு வாசனையும் இல்லை.நன்றி சகோ!!

செய்து பாருங்கள்,நன்றி சகோ!!

Jaleela Kamal said...

மசாலா டீ ஒரு நாளும் எங்க வீட்டில் இந்த மசாலா டீ இல்லாத நாளா கிடையாது.

பல உபாதைக்கு நல்லது.

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

geetha said...

மேனு!
டீயில் சுக்கு, ஏலக்காய் போட்டு குடிச்சிருக்கேன். ஆனா, மிளகு பட்டையெல்லாம் போட்டதில்லை.
பார்க்கும்போதே சுறுசுறுப்பு வந்திடுச்சு. போட்டும் குடிச்சாச்சு,
சூப்பராய் இருக்கு!
நன்றி!

Menaga Sathia said...

போட்டு குடித்தீங்களா? சுவை பிடித்ததில் சந்தோஷம்.செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததில் மிக்க நன்றி கீதா!!

Unknown said...

நான் ஒரு diabetic இன் ஆரம்பத்தில் இருக்கிறேன், இதற்கு ஏற்றாற்போல் ஏதேனும் சொல்லுங்களேன்.

Menaga Sathia said...

ஆரம்ப நிலையிலிருந்தால் சீக்கிரம் குறைத்துவிடலாம்.அரிசி உணவைக்குறைத்து காய்கறிகள்,ஒட்ஸ்,பார்லி, முருங்கைகீரை,முள்ளங்கி இவைகளை சாப்பிடலாம்.கோதுமைரவையில் உப்புமா,கஞ்சி,கிச்சடி இப்படினு செய்து சாப்பிடலாம்.என் குறிப்பில் டயட் ரெசிபி,ஒட்ஸ்,பார்லின்னு நிறைய கொடுத்துள்ளேன்.அதன்படி செய்து சாப்பிட்டால் குறைத்து விடலாம்.உங்கள் வயதுக்கேற்ப டாக்டரின் ஆலோசனைப்படி நடக்கவும்.டெய்லி வாக்கிங் போவது முக்கியம்.விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கியாஸ்!!.இதையெல்லாம் கடைப்பிடித்த பிறகு எப்படி இருக்குன்னு மறக்காமல் சொல்லுங்கள்...

01 09 10