Thursday 15 July 2010 | By: Menaga Sathia

ரசமலாய்

தே.பொருட்கள்:

பால் - 8 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க


செய்முறை :

*4 கப் பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சை சாறு ஊற்றினால் பால் திரிந்து பனீர் கிடைக்கும்.அதை மெல்லிய துணியில் ஊற்றி வடிகட்டி நன்கு அலசி 6 மணிநேரம் தொங்க விடவும்.

*பனீரை மைதாமாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து ,உருண்டைகளாகி கையால் லேசாக அழுத்தி தட்டையாக்கி கொள்ளவும்.

*குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை + 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை கரைந்ததும் பனீர் உருண்டைகளை அதில் போட்டு 5-7 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவைக்கவும்.

*பனீர் 2 மடங்காக உப்பி வெந்து இருக்கும்.

*வேறொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் பாலை நன்கு காய்ச்சி,மீதமுள்ள சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*சர்க்கரை பாகில் இருக்கும் உருண்டைகளை மட்டும் எடுத்தும் கொதிக்கும் பாலில் 5 நிமிடம் போட்டு இறக்கவும்.

*ஏலக்காய்த்தூள் சேர்த்து சில்லென்று பரிமாறும் போது பிஸ்தா பருப்புகளைப் போடவும்.

33 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

ஆஹா..சம்மருக்கேத்த ஜில்ஜில் ரசமலாய்! சூப்பரா இருக்கு மேனகா!

Krishnaveni said...

lovely rasamalai, my fav...great

Umm Mymoonah said...

Wow! Menaga rasmalai rombha super

vanathy said...

Menaga, super!

Padhu Sankar said...

My favourite but do not know how to prepare it ,thanks for sharing

GEETHA ACHAL said...

ஆஹா...எனக்கு மிகவும் பிடித்த ரசமலாய்...அப்படியே சாப்பிடுவேன்...நன்றி...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Superaaa irukkunga.. Enakku pidicha milk sweetum kooda.. ;)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.htm

எல் கே said...

i luv thiss sss thanksss

Priya Suresh said...

Woww Menaga, naan udane unga veetuku varalam'nu irruken, yennaku romba pidicha sweet..

பொன் மாலை பொழுது said...

Gone with your "RASA MALAAI " recipe.
Great & Wonderful .

http://rkguru.blogspot.com/ said...

Good taste.......congrats

சாருஸ்ரீராஜ் said...

wov menaga very nice one

Shama Nagarajan said...

arumai arumai...we love this

Prema said...

Rasamalai luks wounderfull,inviting recipe...

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி உம்மைமூனா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி கீதா!!

நன்றி ஆனந்தி!! விருதுக்கும் மிக்க நன்றி ரொம்ப சந்தோஷமா இருக்கு...

நன்றி எல்கே!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!! எப்பவேணும்னாலும் தாராளமாக வீட்டுக்கு வரலாம் ப்ரியா...

நன்றி சகோ!!

வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி குரு!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி பிரேமலதா!!

Shama Nagarajan said...

aappam maavu araitha odanae use pannalam...dont need to ferment it

PS said...

rasmali romba arumai, nanum try seithu parkiren..

மனோ சாமிநாதன் said...

ரஸமலாய் பார்க்கும்போதே செய்து பார்க்கத்தூண்டுகிறது மேனகா! நான் இதை எப்போதும் மில்க் பெளடரில்தான் செய்வேன். இந்த செய்முறையும் பிரமாதம்.

RV said...

Fantastic recipe and droolworthy rasamalai

'பரிவை' சே.குமார் said...

Rasamalai looks wounderful.

மாதேவி said...

சூப்பர் மேனகா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...super summer recipe

Menaga Sathia said...

பதில் கொடுத்தமைக்கு நன்றி ஷாமா!!

நன்றி பிஎஸ்!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி மனோ அம்மா!! உங்கள் செய்முறையிலும் செய்து பார்க்கிறேன்..

நன்றி ராதிகா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி மாதேவி!!

நன்றி அப்பாவி அக்கா!!

ராஜ நடராஜன் said...

இப்படியெல்லாம் இனிப்பு ரகசியங்களை சொன்னாத்தானே தெரியும்!நன்றி.

R.Gopi said...

மேனகா...

இப்போ ரீசன்டா ஊருக்கு போயிருந்தப்போ சாப்பிட்டேன்...

அதனோட சுவை இன்னமும் என் கிட்ட இருக்கு...

இங்கயும் போட்டு அசத்திட்டீங்க...

Prasanna Rajan said...

அருமை. இதையே ரெடிமேட் பனீர் கொண்டும் செய்யலாம் தானே?

துளசி கோபால் said...

நல்லா இருக்குப்பா.


மைதாவுக்குப் பதிலா ஒரு டீஸ்பூன் ரவை சேர்த்து கையால் பிசையாமல் மிக்ஸியில் போட்டு ஒரு 10 வினாடி சுத்தவச்சால், மிருதுவானதா இருக்கும்.

மகளுடைய ஃபேவ்ரிட். அடிக்கடி செய்வேன்.

ரிக்கோட்டா சீஸ் இருக்கு பாருங்க அதுலேயும் செய்யலாம்.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி கோபி!!

நன்றி பிரசன்னா ராஜன்!!ரெடிமேட் பனீரில் செய்ததில்லை.ப்ரெஷ் பனீரில் செய்வது தான் ரொம்ப நல்லாயிருக்கும்..

நன்றி டீச்சர்!! அடுத்தமுறை நீங்க சொன்ன மாதிரி ரவை போட்டு செய்து பார்க்கிறேன்..ரிக்கோட்டா சீஸில் ஒருமுறை செய்து பார்த்தேன் ஆனா எனக்கு அந்த சுவை பிடிக்கவில்லை..

01 09 10