Thursday 29 September 2011 | By: Menaga Sathia

வெங்காய பச்சடி & களகோஸ் குருமா /Onion Raita& Brussel Sprouts Kurma(Side Dish For Chappathi)

வெங்காய பச்சடி செய்ய தே.பொருட்கள்
வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு லேசாக வதக்கி ஆறவைக்கவும்.
*ஆறியதும் உப்பு+தயிர் சேர்த்து கலக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

களகோஸ் க்ரேவி செய்ய தே.பொருட்கள்

களகோஸ் - 5
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*களகோஸை நான்காக வெட்டி மூழ்குமளவு நீர் விட்டு உப்பு சேர்த்து 3/4 பதமாக வேகவைக்கவும்.களகோஸ் சீக்கிரம் வெந்துவிடும்..
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது+களகோஸ் மற்றும் வேகவைத்த நீருடன் சேர்க்கவும்.

*நன்கு கொதித்ததும் இறக்கவும் .

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

களகோஸினால் சமையல் செய்து அசத்தறீங்க மேனகா.

Jayanthy Kumaran said...

Mmmm...sounds flavorful n absolutely yummmy..;)
Tasty Appetite

சி.பி.செந்தில்குமார் said...

மொத ஓ சி சப்பாடு

சி.பி.செந்தில்குமார் said...

அட போங்க, ஒரு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கூட இல்லை..!

?>>>>>அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

ஆமா, ஒரு டவுட், நம்ம வீட்ல நாம சாப்பிடத்தானே அரைக்கறோம், அதை ஏன் நைஸா, யாருக்கும் தெரியாம அரைக்கனும்? பப்ளிக்காவே அரைக்கலாமே?ஹி ஹி

Gayathri Kumar said...

Delicious gravy for chapathi..

Reva said...

Attakasamaana kurma akka..:) Supera irukku..:)
Reva

MyKitchen Flavors-BonAppetit!. said...

yummmmy pachadi and brussels sprouts Korma dear.Luks so creamy too.Luvly recipe.Thanks for dropping in.

Priya Suresh said...

Kurma with brussel sprouts super o super..delicious pachadi Menaga..

aotspr said...

சூப்பர் சமையல்......


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Unknown said...

My mom makes only soup using this. This looks interesting and delicious.

Cheers,
Uma

Asiya Omar said...

super...with chappathi.

'பரிவை' சே.குமார் said...

சூப்பர் சமையல்.

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. நன்றி மேனகா.

01 09 10