Thursday, 3 November 2011 | By: Menaga Sathia

தக்காளி சாம்பார்/Tomato Sambhar

தே.பொருட்கள்
துவரம்பருப்பு+பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 *பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
*தக்காளியை உப்பு சேர்த்து  நன்கு மசிய வதக்கவும்.
*வெந்ததும் வேகவைத்த பருப்பை ஊற்றி 1 கொதி வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*இட்லி,தோசை,பூரி,சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

even i like this type of many tomatoes in sambar .. good one

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா போட்டோவைப்போட்டு வேற நாக்குல நீர் சுரக்க வச்சி கொடுமை பன்னுராங்களே அவ்வ்வ்வ்வ்....!!!

Priya Suresh said...

POngalkuda intha sambar superaa irrukum,delicious..

ஸாதிகா said...

புளியே சேர்க்காமல் தக்களியின் புளிப்பில் மட்ட்டும் செய்யக்கூடிய சாம்பார் சுவையாக இருக்கும்.நானும் இந்த முறையில்தான் சாம்பார் தயாரிப்பேன்.

Thenammai Lakshmanan said...

ரொம்ப சூப்பர் மேனகா..:)

Sangeetha M said...

my kind of sambar, love it with hot idlis...looks so inviting...

Sarah Naveen said...

looks so delicious dear!! perfect with some idli!

Asiya Omar said...

simply super..

ராமலக்ஷ்மி said...

புளியில்லா சாம்பார். நல்ல குறிப்பு மேனகா. நன்றி.

K.s.s.Rajh said...

சுவை சாப்பிடத்தோனுகின்றது....

Angel said...

பாக்கும்போது கலர்ஃபுல்லா இருக்கு .இன்னிக்கு செய்துட்டு சொல்றேன்

Priya dharshini said...

Blog open panninathun,nakku oruthu thanala...Sidebar dishes romba arumai,thakkali sambar yum than :-D

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஃபோட்டோ டாப்.. செம க்ளியரன்ஸ்..

அப்புறம் இந்த சாம்பார் மத்த 3க்கும் ஓக்கே.. பூரிக்கு? அதுக்கு பெஸ்ட் காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் தானே?

ஆயிஷா said...

சூப்பர் மேனகா.

Unknown said...

OMG. All your recipes are with homely touch like what amma prepares at home.Love them!!!

San said...

Tomato sambar is so delicious, i have had it with poori it makes a good combo.

Mahi said...

Idli-dosaikku super jodi!:)
Looks yumm!

Jayanthy Kumaran said...

wow...yum..yumm...love the flavor of it..;)
Tasty Appetite

01 09 10