தே.பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
செய்முறை
*அரிசியை கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*துணியில் ஈரம் போக நிழலில் உலர்த்தவும்.
*கொஞ்ச கொஞ்சமாக அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*பொடித்த மாவை சல்லடையில் சலிக்கவும்.
*சல்லடையில் அரிசி ரவை இருக்கும்,அதனை முறுமுறை அரிசி அரைக்கும் போது சேர்த்து அரைக்கவும்.
*மாவு நைசாக சலிப்பது மிக முக்கியம்...*சலித்த மாவை கடாயில் கொஞ்சமாக போட்டு வறுக்கவும்.
*மாவு வறுபட்டதும் வாசனை வரும்,அதுவே சரியான பதம்...
*வறுபட்ட மாவை மீண்டும் சலித்தெடுக்கவும்.
*மாவு நன்கு சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
*இந்த மாவை முறுக்கு,புட்டு,கொழுக்கட்டை,இடியாப்பம் என அனைத்திற்க்கும் பயன்படுத்தலாம்.
பி.கு
*1 கப் அரிசியில் = 2 கப் அரிசிமாவு வரும்.
*மாவை வறுக்காமல் துணியில் மூட்டைக் கட்டி ஆவியிலும் வேகவைத்து எடுக்கலாம்.வேக கிட்டதக்க 1 மணிநேரத்திற்க்கும் மேல் ஆகும்.அடிக்கடி மாவை கிளறிவிடணும்.மாவு வெந்துவிட்டதா என பார்க்க அடியில் இருக்கும் மாவை பிடித்து பார்த்தால் பொலபொலவென கொட்டவேண்டும்.அது சரியான பதம்.ஆறியதும் மீண்டும் மாவை சலித்து ஆறவைத்து பயன்படுத்தவும்.இது கொஞ்சம் கடினமான வேலை அதனால் நான் மாவை வறுத்து விடுவேன்....
*சல்லடையில் 3 கம்பிவலை இருக்கும்,மிக பொடியாக இருக்கும் வலைதான் மாவு சலிக்கும் வலை....
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
படத்துடன் விளக்கம் அருமை... நன்றி சகோதரி...
அரிசி மாவு பற்றி அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள். நன்றாக சல்லடையில் சலித்த மாவுபோல, பக்குவமாகவும் பதமாகவுமே சொல்லி விட்டீர்கள். பகிர்வு நன்றி. பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றி மேனகா.தீபாவளி பலகாரம் இனி செய்ய ஆரம்பிக்க வேண்டியது தான் பாக்கி!தொடர்ந்து அசத்துங்க.
Useful tip
Today'sRecipe - Yellow Rice Recipe
http://www.asiyama.blogspot.com/2012/11/feast-of-sacrifice-event-recieved.html
Feast of Sacrifice Event - Received entries updates posted .Please check. Results Soon.
I do the same way too, next yenna murukka??
Post a Comment