Tuesday 19 November 2013 | By: Menaga Sathia

குதிரைவாலி உப்புமா | Kuthiraivalli upma | Barnyard Millet Upma | Horsetail Millet Upma | Millets Recipes | Diabetic Recipes


குதிரைவாலி - அனைவரும் மறந்து போன தானியங்களில் இதுவும் ஒன்று.இது ஒரு புன்செய் பயிர். இதில் அதிகளவு நார்ச்சத்து, மாவுசத்து,கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து,இரும்பு சத்து  மற்றும் பாஸ்பரஸ் இருக்கு.

பயன்கள் =  உடல் எடையைக் குறைக்கவும், இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கவும்,ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் வேலை செய்கிறது..

குதிரை வாலி


இதில் உப்புமா எப்படி செய்வதென்று பார்க்கலாம்...இதில் நான் ரைஸ் குக்கர் கப்பின் அளவை பயன்படுத்தியுள்ளேன்.

தே.பொருட்கள்

குதிரை வாலி - 1 கப்
தண்ணீர் -3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
உப்பு -1/2 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


*உப்பு + 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் குதிரைவாலியை சேர்த்து கிளறவும்.
*தண்ணீர் சுண்டியதும் அடுப்பை அனைத்து விட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் வைக்கவும்.
*15 நிமிடங்கள் கழித்து கிளறினால் சுவையான உப்புமா ரெடி!!

பி.கு

*விரும்பினால் இதனுடன் விரும்பிய காய்கள் சேர்த்து செய்யலாம்.

*இதனை அப்படியே சாப்பிடவும்  சுவையாக இருக்கும், சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shama Nagarajan said...

healthy upma dear..well prepared

திண்டுக்கல் தனபாலன் said...

மறந்து போனதை செய்து பார்ப்போம்... நன்றி...

ஸாதிகா said...

அட அசத்துறீங்க மேனகா.

உஷா அன்பரசு said...

இப்படி ரெசிப்பிக்களை போடும் போது அந்த உணவின் பயன்களையும் சொல்வது சிறப்பாக இருக்கும்..குதிரை வாலி பற்றியெல்லாம் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குதிரைவாலி என்ற தானியமே மறந்துபோய் விட்டது.

குதிரைவால் சம்பா என ஓர் பச்சரிசி வகை இருந்தது. அது நன்றாக நினைவில் உள்ளது.

ஒவ்வொரு அரிசியும் நல்ல் நீள நீளமாக சாஃப்ட் ஆக இருக்கும்.

பொன்னி வந்ததும் அது மறைந்து போய் விட்டது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Priya Anandakumar said...

Very healthy upma Menaga, very nicely made...

Hema said...

Very healthy upma, do u get these millets at your place or did you buy it from India Menaga..

Unknown said...

looks super good. Have seen kuthuraivali only in images. It also look like samai arisi.

'பரிவை' சே.குமார் said...

பேரே புதுசா இருக்கே...

divya said...

very healthy n delicious upma...

Sangeetha Priya said...

healthy upma, ungalukku engappa kidaikuthu feeling jealous dear :-)

Akila said...

Nvr heard of this millet.... thanks for sharing

Vijaya Kumar said...

Madam,

Please try 'Ven Pongal' in குதிரைவாலி Rice. It is more tastier and delicious than ordinary rice. I cook pongal in this rice only. குதிரைவாலி rice available in Parrys shops near Kandaswamy Temple and Rs.70/- per KG.

Unknown said...

this dish is new to me...very healthy upma......

Asiya Omar said...

மிக அருமை மேனகா. எனக்கு என் கல்லூரி நினைவு தான் வருகிறது, Millets, Minor Millets (தானியங்கள்,சிறு தானியங்கள்)அனைத்தையும் நீங்கள் மறக்காமல் சமையல் செய்து அசத்துவது குறித்து மகிழ்ச்சி.பாராட்டுக்கள்.என் கல்லூரி வாழ்க்கையில் எங்கள் பல்கலைக்கழகத்தில் பிடித்த இடமே இந்த சிறு தானியங்கள் பயிரிடும் பகுதி தான்.அத்தனை அழகு.

krish said...

Anybody around in madipakkam 'kuthiraivali' found in POORNA SUPERMARKETS at madipakkam kutt road

Unknown said...

thanks for ur post. nice to hear the goodness of these millets.

Unknown said...

thanks for ur post. nice to hear the goodness of these millets.

Unknown said...

Thanks for the recipe. nice to know the goodness of these millets.thanks again for sharing the same.

Unknown said...

இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான உணவு இது தான்.

Karthik said...

நன்றி.

01 09 10