Monday 23 June 2014 | By: Menaga Sathia

கனவா மீன் வறுவல் /Squid (Calamar) Fry

தே.பொருட்கள்

கனவா மீன் - 1 கிலோ
நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கனவா மீனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள்தூள்+நீர் சேர்த்து வேகவைத்து நிரை வடிகட்டவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம்+தக்காளி +உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த மீனை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு

*மீனை வேகவைத்து வறுப்பதால் வறுக்கும் போது வெடிக்காது.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ... கனவா மீனுக்கு எங்கே போவேன்...?

கனவாக போய் விடுமோ...? ஹா... ஹா...

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப சிம்பிளா இருக்கே....
செய்து பார்க்கணும்...

01 09 10