Wednesday, 10 June 2009 | By: Menaga Sathia

மிளகு சீரக இட்லி

தே.பொருட்கள்:
இட்லி - 5
வெங்காயம் - 1 சிறியது
பூண்டுப்பல் - 3
கெட்டியான புளிச்சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 3

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

செய்முறை:
*இட்லியை நடுத்தரமாக கட் செய்யவும்,வெங்காயம்+பூண்டு பொடியாக நறுக்கவும்.

*மிளகு சீரகத்தை அரைக்கவும்,எடுக்கும் போது உரித்த பூண்டை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி புளிசாறு+தேவையான உப்பு சேர்க்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் இட்லிகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பி.கு:
புளிப்பு+காரம் சேர்த்து சாப்பிட இந்த இட்லி சூப்பரா இருக்கும்.மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.15 நிமிடம் கழித்து சாப்பிட்டால் புளிசாறு நன்கு ஊறி சாப்பிட நன்றாகயிருக்கும்.
Monday, 8 June 2009 | By: Menaga Sathia

சிக்கன் லாலிபாப்


நாம் சாதரணமாக சிக்கனை மாசாலா தடவி,ஊறவைத்து பின் எண்ணெயில் பொரிப்போம்.மேலே மட்டும் வெந்து,உள்ளே வேகாமல் இருக்கும்.நானும் அப்படித்தான் செய்வேன்.வேகாமல் இருக்கும் அதனால் பொரிக்காமல் அவனில் செய்து சாப்பிடுவேன்.என் ப்ரெண்ட் திருமதி.ஜலிலா அவர்களின் குறிப்பை பார்த்து வேகவைத்து பொரித்து செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.நன்றி ஜலிலா அக்கா!!.

தே.பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் - 6
ரெட்கலர் -1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
புதினா,கொத்தமல்லி -சிறிது
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழௌது - 3/4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு -1

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து நடுவில் அங்கங்கே கீறிக்கொள்ளவும்.
*பின் அதில் புதினா+கொத்தமல்லி+மிளகாய்த்தூள்+ரெட்கலர்+இஞ்சி பூண்டு விழுது+தயிர்+ சிறிது உப்பு அனைத்தையும் கலந்து வைக்கவும்.

*குக்கரில் சிக்கனை தண்ணீர் ஊற்றாமல் 3 விசில் வரை வேகவிடவும்.சிக்கனில் தண்ணீர் விடும்,அதனால் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*ப்ரெஷ்ர் அடங்கியதும் திறந்துப் பார்த்தால் கறி வெந்து தண்ணீர் விட்டிருக்கும்.

*சிக்கனை மட்டும் தனியா எடுத்து அதில் மைதாமாவு+சோளமாவு+முட்டை வெள்ளைகரு+ தேவைப்பட்டால் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பிசையும் போது தண்ணீர் தேவையெனில் சிக்கன் வெந்த தண்ணீர் ஊற்றி பிசையவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி.
Friday, 5 June 2009 | By: Menaga Sathia

அவரை - சோள உசிலி

தே.பொருட்கள்:

அவரைக்காய் -100 கிராம்
சோளமுத்துக்கள் - 1 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*அவரைக்காயை பொடியாக நறுக்கி வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.

*சோளகுத்துக்களையும் சிறிது உப்பு போட்டு வைக்கவும்.

*துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+காய்ந்த மிளகாய் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

*ஊறவைத்த பருப்புடன்+பெருங்காயப்பொடி+வேகவைத்த சோளத்துடன் சேர்த்து அரைக்கவும்.

*கடாயில் எண்ணேய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக உதிரியாக வரும் வரை எண்ணெய் விட்டு கிளறவும்.

*பின் இதனுடன் வேக வைத்த அவரைக்காய்+ தேவையான உப்பு சேர்த்து மேலும் நன்கு கிளறி இறக்கவும்.

*இந்த உசிலி சுவையும்,மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.
Thursday, 4 June 2009 | By: Menaga Sathia

தர்பூசணி சாம்பார்


தர்பூசணி பழத்தினை நாம் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கிப் போடுவோம் அப்படி தூக்கி போடாமல் தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் நடுவில் உள்ள வெள்ளைப் பகுதியை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.!!

தே.பொருட்கள்:

த்ர்பூசணி வெள்ளைப் பகுதி - 1/2 கப்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
புளி - 1 கோலிகுண்டளவு
பூண்டுப் பல் - 5
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை -சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம் +தக்காளி அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.தர்பூசணி வெள்ளை பகுதியை நார்மல் துண்டுகளாக நறுக்கவும்.

*குக்கரில் ஊறிய பருப்பு+வெங்காயம்+பூண்டு+தக்காளி+மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+தர்பூசணி வெள்ளை பகுதி இவை அனைத்தும் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

*புளியை 1/4 கப் அளவில் கரைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாம்பார் பொடி+உப்பு+புளி கரைசல் அனைத்தும் சேர்க்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து பருப்பை ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பாரின் சுவை தூக்கலாக இருக்கும்.

Wednesday, 3 June 2009 | By: Menaga Sathia

உருளை+பட்டாணி வறுவல்

தே.பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
பச்சைப் பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது


நசுக்க வேண்டியவை:

இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 7
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:

*வெங்காயம்,தக்காளியை அரியவும்,உருளையை பெரியதுண்டுகளாக கட் செய்யவும்.

*நசுக்க வேண்டிய பொருட்களை நன்கு நசுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கி மிளகாய்த்தூளைப் போட்டு எண்ணெயிலேயே வதக்கவும்.

*தூள் வாசனை போனதும் உப்பு+உருளைக்கிழங்கு+பட்டாணியைப் போட்டு நன்கு வதக்கவும்.

*எண்ணெய் லேசாக பிரிந்து வரும் போது கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

பி.கு:ப்ரெஷ் பட்டாணி இல்லையெனில் காய்ந்த பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேக வைத்து செய்யலாம்.குக்கரில் வேக வைக்ககூடாது குழைந்து விடும்.

Tuesday, 2 June 2009 | By: Menaga Sathia

சிக்கன் பிரியாணி/Chicken Biryani

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 4

செய்முறை:

*சிக்கனை சுத்தம் செய்து பாதி தயிர்,பிரியாணி மசாலா பொடி,கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஊறவிடவும்.

*வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*புதினா,கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும்.

*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்

*தேங்காயை துருவி அதனுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா,கொத்தமல்லி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+தயிர்+சிக்கன் இவைகளைப் போட்டு வதக்கவும்.

*. 1 கப் அரிசிக்கு =1 1/2 கப் தண்ணீர் அளவு,ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் அளவு.

*சிக்கன் பாதி வதங்கியதும் 3 கப் தேங்காய்ப்பால்+3 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு+அரிசி(தண்ணீயை வடிக்கட்டவும்)+ உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.

*குக்கரை மூடி,ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறி பரிமாறவும்.



Monday, 1 June 2009 | By: Menaga Sathia

இட்லி மஞ்சூரியன்/ Idly Manchurian

தே.பொருட்கள்:

இட்லி - 5
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
செய்முறை:

*இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.

*எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளை பொரித்தெடுக்கவும்.

*சுவையான் இட்லி மஞ்சூரியன் ரெடி.

பி.கு:குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்பதால் விரும்பி சாப்பிடுவாங்க,மீந்து போன இட்லிகளை இதுபோல செய்து குடுக்கலாம்.


01 09 10