Monday, 13 August 2012 | By: Menaga Sathia

நெல்லிக்காய் ரசம் /Gooseberry Rasam

காராசாரமான நெல்லிக்காய் ரசம் உடலுக்கு மிகவும் நல்லது.நன்றி ஏஞ்சலின்!!

தே.பொருட்கள்

நெல்லிக்காய் - 5
தக்காளி - 1
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்
நசிக்கிய பூண்டுப்பல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - சிறிது

செய்முறை

*நெல்லிக்காயை துருவிக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து தக்காளி+உப்பு+பூண்டுப்பல்+சுக்குத்தூள்+மஞ்சள்த்தூள்+தூவிய நெல்லிக்காய்  சேர்த்து வதக்கி 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் ரசப்பொடி+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Tuesday, 7 August 2012 | By: Menaga Sathia

கை முறுக்கு /Kai Murukku

 இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.அதற்காக ஸ்பெஷலா செய்யனும்னு நினைத்த போது கை முறுக்கு செய்ய ஆசை வந்துடுச்சு.முதன்முதலாக முயற்சி செய்தது.பல யூடியூப் வீடியோகளை பார்த்து முயற்சி செய்தது.ஷேப் சரியாக வரவில்லை ஆனாலும் இனி அடிக்கடி செய்யும்போது சரியா வந்துடும்னு நினைக்கிறேன்...

முதல் முறையாக செய்ததால் 1/2 கப் அரிசியில் மட்டும் செய்து பார்த்தேன்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1/2 கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை

*அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*துணியில் ஈரம் போக உலர்த்தி,மிக்ஸியில் மாவாக நைசாக அரைக்கவும்.

*அதனுடன்  மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக தேவையான நீர் சேர்த்து பிசையவும். 
 *சிறு உருண்டை அளவில் மாவை எடுத்து பேப்பரில், பாட்டில் மேல்மூடி வைத்து மாவை முறுக்கி வட்டமாக சுற்றி விடவும்.

 *சிறிது நேரம் உலரவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பி.கு

*இந்த முறுக்கிற்கு அரிசிமாவை ஈரபதமாகதான் பயன்படுத்த வேண்டும்.மாவை வறுக்ககூடாது.

*1/2 கப் அரிசியில் 1 கப் அளவிற்க்கு அரிசிமாவு வரும்.

*நெய் பயன்படுத்தினால் முறுக்கு சிவந்துவிடும்,அதனால் முறுக்கிற்கு எப்போழுதும் வெண்ணெயை பயன்படுத்தவும்.

*தேங்காய் எண்ணெய் சிறிது சேர்ப்பதால் நன்கு வாசனையுடன் இருக்கும்.

*மாவை சுற்றும்போது கையில் எண்ணெய் தடவி சுற்றினால் ஈசியாக சுற்ற வரும்.

*நான் ரெடிமேட் உளுத்தமாவு பயன்படுத்தியிருக்கிறேன்.உளுத்தமாவு இல்லையெனில் உளுந்தை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுத்து நைசாக பொடிக்கவும்.
Monday, 30 July 2012 | By: Menaga Sathia

வாழைத்தண்டு சூப் /Banana Stem Soup


தே.பொருட்கள்

வாழைத்தண்டு - நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன் குறைவாக
ஆலிவ் எண்ணெய் - 1/2  டீஸ்பூன்
பொடியாக அரிந்த பூண்டுப்பல் -1
மிளகுத்தூள் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*வாழைத்தண்டை நார் நீக்கி அரிந்து 4 கப் நீர் ஊற்றி அரைத்து சாறெடுத்து வடிக்கட்டவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி மஞ்சள்தூள்+பூண்டுப்பல்லை சேர்த்து வதக்கி உப்பு+வாழைத்தண்டு சாறை ஊற்றி 1 கொதி வரும் போது இறக்கவும்.

*மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

பி.கு

கிட்னியில் கல் இருப்பவர்களுக்கும்,உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் வாழைத்தண்டு மிக நல்லது.
Monday, 16 July 2012 | By: Menaga Sathia

பலாப்பழ பாயாசம் /Jackfruit Payasam | Onam Sadya Recipes


தே.பொருட்கள்

பலாச்சுளைகள் - 10
வெல்லம் - 1/2 கப் (அ) இனிப்பிற்கேற்ப
பால் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
பொடியாக அரிந்த தேங்காய்ப்பல் - 1 டேபிள்ஸ்பூ்ன்
நெய் -1/4 கப்

செய்முறை
*சிறிது நெய்யில் தேங்காய்ப்பல்லை முறுகலாக வதக்கவும்.

*பலாச்சுளைகளை பொடியாக அரிந்து ,கடாயில் நெய் விட்டு நன்கு  வதக்கவும்.

*வதங்கியதும் பால் சேர்த்து வேகவிடவும்.வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து மண்ணில்லாமல் வடிகட்டவும்.

* பலாச்சுளைகள் நன்கு வெந்ததும் வெல்லக்கரைசல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கும்போது முந்திரி,திராட்சை சேர்க்கவும்.

பி.கு

*பாலிற்கு பதில் 1 கப் 2ஆம் தேங்காய்பாலில் பலாச்சுளைகளை வேகவைத்து வெல்லகரைசல் சேர்த்து இறக்கும் போது 1/2 கப் 1ஆம் தேங்காய்ப்பாலை சேர்த்து இறக்கவும்.1ஆம் தேங்காய்ப்பாலை சேர்த்ததும் கொதிக்கவிடக்கூடாது.
Monday, 18 June 2012 | By: Menaga Sathia

மிளகு குழம்பு /Pepper Khuzhampu

தே.பொருட்கள்

புளிகரைசல் - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க

பெருங்காயம் - 1 சிறுகட்டி
கறிவேப்பிலை- 1 கொத்து
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்தரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையை லேசாக வதக்கி உப்பு+புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
Thursday, 14 June 2012 | By: Menaga Sathia

துவரம்பருப்பு இட்லி & தக்காளி சட்னி -6 /Toor Dhal Idli & Tomato Chutney

இந்த சாதாரண இட்லியை விட மிக மென்மையாக இருக்கும்.தோசையும் நன்றாக வரும்.நன்றி வர்தினி!!

துவரம்பருப்பு இட்லி

தே.பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
உளுந்து - 1/4 கப்
உப்பு - சுவைக்கு

செய்முறை

*அரிசியை தனியாகவும் , துவரம்பருப்பு+உளுந்து இவைகளை ஒன்றாகவும் கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் பருப்புகளை நன்கு மைய அரைக்கவும்.அரிசியை ரவை பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும்.

*அனைத்தையும் ஒன்றாக உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

 தக்காளி சட்னி -6

இந்த ரெசிபி அண்ணியிடம் கற்றுக்கொண்டது.

தே.பொருட்கள்
பழுத்த தக்காளி - 2 நன்கு மசிக்கவும்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/4 கப் நீர்+உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் கரண்டியால் நன்கு மசித்து விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.


Monday, 4 June 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத சாக்லேட் கேக் /Eggless Chocolate Cake With Flax Seeds

 தே.பொருட்கள்
டார்க் சாக்லேட் பார்(Dark Chocolate) -100 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
ப்லாக்ஸ் ஸூட் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்நீர் - 6 டேபிள்ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*ப்லாக்ஸ் ஸுடை நன்கு நைசாக பொடி செய்து அதனை 6 டேபிள்ஸ்பூன் வெந்நீர் ஊற்றி 10 நிமிடம் கரைத்து வைக்கவும்.

*மாவுடன் பேக்கிங் பவுடரை சலிக்கவும்.மைக்ரோவேவ் பவுலில் சாக்லேட்களை உடைத்து 2 டேபிள்ஸ்பூன் நீர் ஊற்றி உருக வைக்கவும்.

*உருகிய சாக்லேட்டுடன் பொடித்த சர்க்கரை+வெஜிடேபிள் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும்.

*அதனுடன் ப்லாக்ஸ் ஸூட்+மைதா கலவையை கலந்து பேக்கிங் டிரேயில் ஊற்றவும்.

*180 முற்சூடு  செய்த அவனில் 30-35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போடவும்.

பி.கு

1 முட்டை = 1 டேபிள்ஸ்பூன் ப்லாக்ஸ் ஸூட் (பவுடராக பொடிக்கவும்)+3 டேபிள்ஸ்பூன் வெந்நீர் என பயன்படுத்தவும்.
01 09 10