Thursday, 11 December 2014 | By: Menaga Sathia

உடுப்பி சாம்பார் / UDUPI SAMBAR | SIDE DISH FOR IDLI & DOSA

உடுப்பி  சாம்பாரில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது தான் இதன் சிறப்பு.

இதில் கத்திரிக்காய்,கேரட்,முருங்கைக்காய்,வெள்ளை பூசணி சேர்த்து செய்துள்ளேன்.காய்கள் இல்லாமலும் செய்யலாம்.

இந்த சாம்பார் இட்லி,தோசை,சாதம் ,பொங்கல் என அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.

மசாலவை ப்ரெஷ்ஷாக பொடித்து செய்வதும்,கடைசியாக வெல்லம் சேர்ப்பதும்  சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்

புளிகரைசல் - 1 கப்
வெல்லம் -சிறுதுண்டு
உப்பு +எண்ணெய் -தேவைக்கு

பருப்புடன் சேர்த்து வேகவைக்க

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்
காய்கள் -1/2 கப்

எண்ணெயில் வறுத்து பொடிக்க

தேங்காய்த்துறுவல் -1/4 கப்
காய்ந்த மிளகாய் -4
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
தனியா- 2 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்

 தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*பருப்புடன் கொடுக்கபட்ட பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.
*பொடிக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயை மட்டும் பொன்னிறமாக வருத்தும் மற்றவைகலை மிதமான சூட்டில் வருத்தும் பொடிக்கவும்.
 *பாத்திரத்தில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.





*பச்சை  வாசனை அடங்கியதும் பொடித்த  பொடி மற்றும் வேகவைத்த பருப்பு கலவை மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


* கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும்.

பி.கு

*வெல்லம் சேர்ப்பதே இந்த சாம்பாரின் ஸ்பெஷல்.
*மசாலா பொடிக்கும் போது சோம்பு சேர்ப்பது இதர்கு தனி சுவையும் மணமும் கொடுக்கும்.
*இது சாதத்திற்கும் மிக நன்றாக இருக்கும்.



Thursday, 4 December 2014 | By: Menaga Sathia

பழனி பஞ்சாமிர்தம் / PALANI PANCHAMIRTHAM | PALANI KOIL SPL



print this page PRINT IT
இந்த ரெசிபியை பழனி கோயிலின் வெப்சைடில் பார்த்து செய்தது.

இந்த பஞ்சாமிர்ததில் விருப்பாச்சி என்னும் சிறிய வாழைப்பழைத்தை பயன்படுத்தி செய்வாங்க.விருப்பாச்சி என்பது பழனி அருகே இருக்கும் சிறிய ஊர்.

பெரிய வாழைப்பழத்திலும் செய்யலாம்,ஆனால் அந்தளவுக்கு சுவையும் நிறமும் வராது.

அதே போல் இதில் Kandasani sugar பயன்படுத்தி செய்துருந்தாங்க.நான் அதற்கு பதில் வெல்லம் சேர்த்து செய்துள்ளேன்.

அனைத்தையும் கையால் பிசைந்து செய்வது ஒரு சுவை.அப்படி செய்யும் ப்ரிட்ஜில் 3-4 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

கரண்டியால் மசித்தால் அறைவெப்பநிலையிலேயே வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் நேரம் - 10 நிமிடங்கள்

தே.பொருட்கள்

சிறிய வாழைப்பழம் - 2
பேரிச்சம்பழம் - 12
கற்கண்டு - 10
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
தேன் - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்

செய்முறை

*பேரிச்சம்பழத்தின் விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் வாழைப்பழம்+பேரிச்சம்பழம்+வெல்லம்+ஏலக்காய்த்தூள்+கற்கண்டு  சேர்க்கவும்.

*இவற்றை தேன் சேர்த்து கையால் பிசையவும்.

*கடைசியாக நெய் சேர்த்து கிளறவும்.




Wednesday, 3 December 2014 | By: Menaga Sathia

கூட்டாஞ்சோறு / Kootanchoru | Lunch Box Recipe



print this page PRINT IT
 Recipe Source:சமைத்து அசத்தலாம்

சமைக்கும் நேரம் - 30  நிமிடங்கள்
பரிமாறும் அளவு - 2 நபர்கள்

தே.பொருட்கள்

புழுங்கலரிசி -1/2 கப்
துவரம்பருப்பு -1/8 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் - 1 கப்
முருங்கைக்கீரை - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சையளவு
உப்பு -தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
சின்ன வெங்காயம் -5

தாளிக்க

எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வடகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்+கேரட்+கத்திரிக்காய்+மாங்காய்+அவரைக்காய்+காராமணிக்காய்

செய்முறை

*அரிசி+பருப்பை கழுவி 2 கப் நீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.குக்கரில் ஊறிய அரிசி பருப்பை ஊறவைத்து நீருடன் அடுப்பில் வைத்து மூடி மட்டும் போட்டு சிறு தீயில் வேகவிடவும்.பாதி அளவு வெந்து நீர் வற்றியிருக்கும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  நைசாக அரைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்களை சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள்தூள் +உப்பு+கீரை சேர்த்து பிரட்டி அரைத்த மசால் சேர்த்து கொதிக்க விடவும்.

*காய்கள் பாதி வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
*வெந்த அரிசி பருப்பில் வேகவைத்த காய்கலவை சேர்த்து மாங்காய்துண்டுகள்+தேவைக்கு உப்பு+மேலும் 1 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
*வெயிட் போட்டு  சிறுதீயில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
*பின் மீதமுள்ள‌ எண்ணெய்+நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சேர்க்கவும்.


Tuesday, 2 December 2014 | By: Menaga Sathia

கண்டத்திப்பிலி ரசம் /Kandathippilli Rasam | Rasam Recipes


print this page PRINT IT

இந்த மாதம் Friendship 5 Series ல் நாம் பார்க்க போவது கிராமத்து சமையல்

*கண்டத்திப்பிலி இது  மிளகு குடும்பத்தை சேர்ந்தது.

* சளி,இருமலுக்கு இந்த திப்பிலி ரசம் மிக நல்லது.

*உடல்வலி மற்றும் சோர்வு நீங்கவும் கண்டத்திப்பிலி மிக நல்லது.

தே.பொருட்கள்

புளிகரைசல் -2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயதூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

எண்ணெயில் வறுத்து பொடிக்க

 எண்ணெய் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கண்டத்திப்பிலி - 4 குச்சிகள்
துவரம் பருப்பு -1 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்


செய்முறை

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.
*புளிகரைசலில் உப்பு+மஞ்சள்தூள்+பொடித்த பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

Saturday, 29 November 2014 | By: Menaga Sathia

மதுரை ஸ்டைல் மீன் குழம்பு /Madurai Style Meen Kuzhambu | Fish Recipes

print this page  PRINT IT  
 இந்த மீன் குழம்பில் மசாலாவை அரைத்து செய்வதும்,காரசாரமாக இருப்பதும்,நல்லெண்ணெயில் தாளிப்பதும்  தான் இதன் ஸ்பெஷல்.

Recipe Source - Pachai Milagai

தே.பொருட்கள்

மீன் துண்டுகள் -8
புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் -10
தக்காளி - 1
பூண்டுப்பல் -6
தனியாத்தூள் - 1.5 டீஸ்பூன்
வரமிள்காய்த்தூல் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க

மிளகு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் -3
தனியாத்தூள்+வரமிளகாய்த்தூள்  - தலா 1/2 டீஸ்பூன்

தாளிக்க
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  நீர் விட்டு மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில்  எண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வடகம்+கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
*பின் நறுக்கிய வெங்காயம்+தக்காளி+பூண்டு சேர்த்து வதக்கவும்.
*அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்க்கவும்.
*5 நிமிடங்களுக்கு மீதமுள்ள கறிவேப்பிலை செர்த்து இறக்கவும்.

பி.கு
*மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பினை தட்டு போட்டு  மூடவேண்டாம்.

*மீன் சேர்த்த பிறகு தட்டு போட்டு மூடினால் மீன் உடைந்து விடும்.

*இதில் குழம்பு கொதிக்கும் போது கத்திரிக்காய்,மாங்காய் சேர்த்து செய்துள்ளேன்.
Thursday, 27 November 2014 | By: Menaga Sathia

முட்டையில்லாத டூட்டி ப்ரூட்டி கேக்/Eggless Tutti Frutti Cake | Cake Recipes

தே.பொருட்கள்

மைதா - 1 1/2 கப் +2 டீஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
உப்பு -1/4 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
சமையல் எண்ணெய் -1/2 கப்
பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
பேக்கிங்  பவுடர் -1 டீஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி -1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை

* அவனை 200 10 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்.பேக்கிங் பானில் எண்ணெய் தடவி சிறிது 1 டீஸ்பூன் மைதா தூவி விடவும்.டூட்டி ப்ரூட்டியில் 1 டீஸ்பூன் மைதா கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் தயிர்+ சர்க்கரை சேர்த்து கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.

*பின் பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா+உப்பு  சேர்த்து கலந்தல் தயிர் கலவை பொங்கி வரும்.

*மாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.வெனிலா எசன்ஸ்+டூட்டி ப்ருட்டி சேர்க்கவும்.

*பேக்கிங் பானில் ஊற்றி 180°C  40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.



Thursday, 20 November 2014 | By: Menaga Sathia

கறிவேப்பிலை துவையல் / Karuveppillai Thuvaiyal | Curry Leaves Thuvaiyal

print this page PRINT IT 
கறிவேப்பிலையின் மருத்துவபயன்கள் அனைவரும் அறிந்ததே.இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

இதனை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் - கண்பார்வை அதிகரிக்கும், கெட்ட கொழுப்பினைக் குறைக்கும்,நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்,கூந்தல் நன்கு வளரும்,கேன்சரை தடுக்கும்.

தே.பொருட்கள்

கறிவேப்பிலை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
புளி - நெல்லிக்காயளவு
சின்ன வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி கா.மிளகாய் மற்றும் தேங்காய் துறுவலை மட்டும் லேசாக வதக்கி ஆறவைக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் வெங்காயம் தவிர அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.

*கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பி.கு

*இந்த துவையல் கொரகொரப்பாக அரைத்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.

*1 நாள்வரை ப்ரிட்ஜில்வைத்திருந்து பயன்படுத்தலாம்.
01 09 10