Wednesday, 29 April 2009 | By: Menaga Sathia

மட்டன் பிரியாணி /Mutton Biryani


தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 4 மேஜைகரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
புதினா - 1 கட்டு
தயிர் - 250 கிராம்
எலுமிச்சைப் பழம் - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 3

மேலேதூவ:

ஏலக்காய் - 5 (பொடித்துக் கொள்ளவும்)
ஜாதிக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த வறுத்த வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீயை வடித்துக் கொள்ளவும்.

*வெங்காயம்+தக்காளி +கொத்தமல்லிதழை+புதினா இவற்றை அரிந்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயைக் கீறவும்.




*மட்டனை சுத்தம் செய்து 1 மேஜைக்கரண்டிஇஞ்சிபூண்டு விழுது+கரம் மசாலா+125 கிராம் தயிர்+1/2 டேபிள்ஸ்பூன் கலந்த மிளகாய்த்தூள் +1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும்.



*பாத்திரத்தில் பட்டர்+எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் செர்த்து வதக்கவும்.

*பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+தயிர்+மீதமிருக்கும் தூள் வகைகள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

*குக்கரைத் திறந்து கறியைத் தனியாக வைத்து,தண்ணீயை அளந்துக் கொள்ளவும்.

*மசாலா நன்கு வதங்கியதும்,1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் மொத்தம் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்[கறி வேக வைத்த தண்ணீர்+தண்ணீர்].

*நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு+உப்பு+கறி+அரிசி சேர்க்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

*தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் 10 நிமிடம் பிரியாணியை அவனில் வைக்கவும்.

*அரிசி நன்கு வெந்து பொலபொலவென இருக்கும் போது சமபடுத்தி மேலேதூவ சொன்ன பொருட்களை தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

பி.கு:அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்




Sunday, 26 April 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் வெள்ளைக் குருமா


தே.பொருட்கள்:

பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
தேங்காய்ப்பால் - 1 சின்ன டின்
புதினா - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்

அரைக்க:

இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 6

தாளிக்க:

பட்டை - 1துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - ௧

செய்முறை:

*பீன்ஸ்+வெங்காயம்+தக்காளி இவைகளை அரிந்துக் கொள்ளவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது+புதினா ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கி உப்பு+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்து காய் வெந்ததும் எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.
Friday, 24 April 2009 | By: Menaga Sathia

மீன் கட்லட்


தே.பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
வேகவைத்த உருளைக் கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு +எண்ணெய் = தேவையான அளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - பிரட்டுவதற்க்கு
சோம்புத்தூள் - 11/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்து வைக்கவும்,உருளைக்கிழங்கை மசித்து வைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்புத்தூள்+வெங்காயம்+மிளகாய்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் மீன்+உருளைக்கிழங்கு சேர்த்து
கலவை ஓன்றாகும் வரை நன்கு பிரட்டவும்.

*உப்பு பார்த்து போடவும், மீனில் ஏற்கனவே உப்பு இருக்கும்.கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு ஆறவிடவும்.

*முட்டையை நன்கு அடித்து வைக்கவும்.ஒரு தட்டில் ரஸ்க்தூள் வைக்கவும்.

*மீன் கலவையை நமக்கு விருப்பமான வடிவில் செய்து முட்டையில் நனைத்து ரஸ்க்தூளில் நன்கு பிரட்டி வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கட்லட்டை இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.

*கெட்சப்,மிளகாய் சாஸுடன் சூடாக பரிமாறலாம்.

பி.கு:
நான் உருண்டையாக உருட்டியதில் 12 கட்லட் வந்தது.தூனா மீனை பிரெஞ்சில் Thon poisson என்று சொல்வாங்க.


Thursday, 23 April 2009 | By: Menaga Sathia

புதினா துவையல்


தே.பொருட்கள்:

புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
கறிவேப்பில்லை - 3 இணுக்கு
இஞ்சி - சிறுதுண்டு
தாளிப்பு வடகம் - 2 டேபிள்ஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 கோலிக்குண்டளவு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 11/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை:

* புதினா,கொத்தமாலி,கறிவேப்பிலை அனைத்தும் சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.

*இஞ்சி,காய்ந்தமிளகாயை எண்ணெயில் வறுக்கவும்.

*வடகத்தை எண்ணெயில் பொரிக்கவும்,பின் புதினாவை லேசாக வதக்கவும்.

*ஆறியதும் வதக்கிய அனைத்து பொருட்கள்+உப்பு+புளி+கறிவெப்பிலை+கொத்தமல்லி சிறிது நீர் தெளித்து விழுதாக கெட்டியாக அரைக்கவும்.

*கறிவேப்பிலை,கொத்தமல்லியை வதக்ககூடாது.பச்சையாகதான் அரைக்கனும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்துக் கிளறவும்.

*எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி ஆறவைத்து உபயோக்கிக்கலாம்.

பி.கு:
அனைத்து வகை சாதம்,இட்லி,தோசைக்கு ஏற்றது.ஒரு வாரம் வரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
Wednesday, 22 April 2009 | By: Menaga Sathia

புடலங்காய் பொரியல்


தே.பொருட்கள்:

புடலங்காய் - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்தேங்காய்துருவல் - 1/4 கப்

தாளிக்க:

கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
உப்பு + எண்ணெய் = தேவைக்கேற்ப

செய்முறை:

*.புடலங்காயை பொடியாக கட்செய்து உப்பு+மஞ்சள்தூல் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

*அப்போழுது தான் அதில் இருக்கும் நீர்விடும்.15 நிமிடம் கழித்து நீரில் அலசி பிழிந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புடலங்காயை சேர்க்கவும்.

*1 கப் நீர்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

பி.கு:
விருப்பப்பட்டால் சிறிது வறுத்த வேர்கடலையை லேசாக பொடித்துப் போடலாம்.
Sunday, 19 April 2009 | By: Menaga Sathia

பொருளாங்கா உருண்டை



தே.பொருட்கள்:
பச்சரிசி[அ]பொன்னி அரிசி - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 1
தேங்காய் துறுவல் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

*அரிசியைக் கழுவி தண்ணீரை வடிக்கட்டவும்.அப்போழுது தான் சீக்கிரமாக பொரியும்.

*வடிகட்டிய அரிசியை வெறும் கடாயில் போட்டு அரிசி பொரியும் வரை பொரிக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஏலக்காய் சேர்த்தரைத்து மாவாக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசிக்கு 21/2 கப் தண்ணீரில் வெல்லம் போட்டு கரைந்ததும் வடிக்கட்டவும்.வடிகட்டிய வெல்லத்தை மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

*பிசுக்கு பதம் வந்ததும் உப்பு+மாவு சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

*மாவு நன்கு வந்ததும் இறக்கவும்.[மாவு வேகவில்லை எனில் வெந்நீர் சேர்த்துக் கிளறவும்].

*ஒரு தட்டில் தேங்காய் துறுவலைக் கொட்டவும்.

*நம் கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக உருட்டி தேங்காய்த் துறுவலில் சேர்த்து பிறட்டி எடுக்கவும்.

*இப்போழுது சுவையான உருண்டை ரெடி.

பி.கு:

இதில் தேங்காய் சேர்த்து இருப்பதால் அன்றே உபயோக்கிக்கனும்.எங்கம்மா செய்யும் இனிப்பில் இதுவும் ஒன்று எனக்கு ரொம்ப பிடிக்கும்.
.
Thursday, 16 April 2009 | By: Menaga Sathia

மீன் குழம்பு


தே.பொருட்கள்:

மீன் - 8 துண்டுகள்
புளி - 1எலுமிச்சை பழ அளவு
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
கத்திரிக்காய் - விருப்பதிற்கேற்ப
மாங்காய் - 4 துண்டுகள்
உப்பு + எண்ணெய் = தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

நசுக்கிக் கொள்ள:

சின்ன வெங்காயம் - 8
பூண்டு பல் - 5
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

தாளிக்க:

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* மீனை சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.

* புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+மிளகாய்தூள்+அரைத்த தக்களி விழுது சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

*நசுக்க வேண்டிய பொருட்களை நசுக்கிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து,நசுக்கிய பொருள்+கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.

*பின் வதங்கியதும் புளி கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* கொதித்ததும் மீன்+மாங்காய் துண்டுகளை
போட்டு நன்கு கொதித்த பின் மல்லித்தழை தூவி இறக்கவும்.






01 09 10