Monday 1 June 2009 | By: Menaga Sathia

இட்லி மஞ்சூரியன்/ Idly Manchurian

தே.பொருட்கள்:

இட்லி - 5
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
செய்முறை:

*இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.

*எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளை பொரித்தெடுக்கவும்.

*சுவையான் இட்லி மஞ்சூரியன் ரெடி.

பி.கு:குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்பதால் விரும்பி சாப்பிடுவாங்க,மீந்து போன இட்லிகளை இதுபோல செய்து குடுக்கலாம்.


11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

ரொம்ப சூப்பராக இருக்கு மேனகா.. நானும் செய்துயிருக்கேன். ஆனால் வாணலியில் ஓட்டும். ஓட்டாமல் வர ஏதாவது டிப்ஸ் தாங்க

Menaga Sathia said...

எண்ணெய் நல்லா காய வைக்கனும்,இல்லைன்னா சதசதன்னு எண்ணெய் குடித்த மாதிரியும்,வாணலிலும் ஒட்டும் பாயிசா.நான் சொன்ன இதே அளவில் செய்து பாருங்க,நன்றாக வரும்.

Jaleela Kamal said...

மேனகா நலமா?
கலக்கலா ரெசிபி கொடுத்து கொண்டு இருக்கீங்க.
இட்லி மஞ்சூரியன் பார்க்கவே நல்ல இருக்கு.

Menaga Sathia said...

ஜலிலாக்கா நான் நலம்,நீங்க எப்படி இருக்கிங்க?
//கலக்கலா ரெசிபி கொடுத்து கொண்டு இருக்கீங்க.
இட்லி மஞ்சூரியன் பார்க்கவே நல்ல இருக்கு//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

வாங்க பொன்மலர் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!!
உங்க ப்ளாக்கில் பதிவுகள் ரொம்ப உபயோகமானதா இருக்கு.நன்றி!!

பனித்துளி சங்கர் said...

அஹா அனைத்தும் அருமை . இதில் முதலில் எனக்கு இட்லி வேண்டும் . பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

ஆஹா. இதை எப்படி இட்லி மாமி பதிவில போட மறந்தேன். இருங்க இப்ப சேத்திடுறேன்.

Anonymous said...

இனிமே இந்த தட்ல போட்டு படம் எடுங்கக்கா. நல்ல பளீர்னு இருக்கு.

Menaga Sathia said...

//அனாமிகா துவாரகன் has left a new comment on your post "இட்லி மஞ்சூரியன்":

ஆஹா. இதை எப்படி இட்லி மாமி பதிவில போட மறந்தேன். இருங்க இப்ப சேத்திடுறேன்.

அனாமிகா துவாரகன் has left a new comment on your post "இட்லி மஞ்சூரியன்":


இனிமே இந்த தட்ல போட்டு படம் எடுங்கக்கா. நல்ல பளீர்னு இருக்கு.//நன்றி அனாமிகா!! பதிவில் சேர்த்தாச்சா..அனாமிகா சொன்னா சரியாகதான் இருக்கும்.அது சின்ன தட்டுப்பா..கொஞ்சமா பொருள் என்றால் அதில் வைத்து படம் எடுப்பேன்..

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

Anonymous said...

Yea, I did add to the post acca. But named it as Idli 65 as it sounded funky. :)

01 09 10