Saturday 3 October 2009 | By: Menaga Sathia

புரட்டாசி சனிக்கிழமை


இன்று புரட்டாசி 3வது சனிக்கிழமை.அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவாங்க.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
இன்று நான் செய்த தளியல் படையல்கள் :

உப்பு போடாத சாதத்தில் வெல்லம்,தயிர் சேர்த்த சாதம்,பொங்கல்,எலுமிச்சை சாதம்,புளி சாதம்,தயிர் சாதம் (படம் மிஸ்ஸிங் கொஞ்சமா செய்த்தால் காலியாயிடுச்சு), தேங்காய் சாதம்,காராமணி சுண்டல்,உருளை வறுவல்,பாசிப்பருப்பு பாயாசம்,முருங்கைக் கீரை பிரட்டல்,கொள்ளு வடை,அப்பளம்,சாம்பார்.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

R.Gopi said...

புரட்டாசி சனிக்கிழமை...

பெருமாளுக்கு உகந்த தினம்...

//முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவாங்க.//

நாங்க எல்லாம், நீங்க போடறத பாக்கறதோட சரி...

உங்க தளியல் பார்த்து... எனக்கு பசி அதிகமாகி விட்டது மேனகா...

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

Unknown said...

Nice dishes!Perfect with rice.

Shobana senthilkumar said...

Nice spread of dishes...its so devine:)

Priya Suresh said...

Menaga, superaa dishes..arumaiyana thaliyal..

துளசி கோபால் said...

எங்க வீட்டிலும் பாட்டி இருந்தவரை தளிகை போடுவது ரொம்ப விசேஷம்.

முந்தாநாள் அத்தைவீட்டில் போட்டுப் பிரசாதம் அனுப்பி இருந்தாங்க.

படங்கள் கொசுவத்தியைக் கொளுத்திவச்சுருச்சு.

நாலுவீட்டில் போய் கோவிந்தா கோவிந்தான்னு சின்னச் சொம்பில் அரிசி பிக்ஷை வாங்கிவந்து தளிகையில் சேர்க்கணுமாம். நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தபோது.....
சித்தி, மாமாக்கள் எல்லாம் வெவ்வேறு அறைகளில் கையில் ஒருபிடி அரிசியோடு நிப்பாங்க. நாங்க அறைவாசலில் போய்நின்னு நாமம்(எங்க நெத்தியிலும், பிக்ஷைவாங்கும் சொம்பிலும்)போட்ட அலங்காரத்துடன் கோவிந்தா போட்டு அரிசி வாங்கி வருவோம்.

எல்லாம் ஒரு அட்ஜஸ்மெண்ட்தான்....

சாஸ்திரத்தை மீறமாட்டொம்லெ:-)))))

Jaleela Kamal said...

கலந்த சாதம் பார்க்கவே அருமையா இருக்கு

பித்தனின் வாக்கு said...

ஆகா ஆகா அருமையா சமைச்சு வச்சுருக்கிங்க, சும்மா ஒரு புடி புடிச்சுட்டு ஒரு இரண்டு மணி நேரம் தூங்கினா அது தனி சுகமுங்க.

நல்லா பொறுமையா சமைச்சு படைச்சு பதிவு போட்டு இருக்கீங்க, உங்கள பாத்துட்டு நானும் ஒரு புரட்டாசி விரத பதிவு போட்டு இருக்கன். சமயம் கிடைத்தால் படித்துப் பார்க்கவும்.

Menaga Sathia said...

வாங்க கோபி எங்க வீட்டுக்கு.தங்கள் வாழ்த்துக்கு நன்றி கோபி!!

Menaga Sathia said...

நன்றி திவ்யா தங்கள் கருத்துக்கு!!


தங்கள் கருத்துக்கு நன்றி ஷோபனா!!

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நானும் சின்ன வயசுல பார்த்திருக்கேன்.சிறு பிள்ளைகள் வந்து அரிசி வாங்கிட்டு போவாங்க.இப்ப அப்படி யாரும் செய்றதில்லைன்னு நினைக்கிறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி துளசி அக்கா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

ஆமாம் நீங்க சொல்வதுப்போல் இந்த சாப்பாட்டையெல்லாம் சாப்பிட்டு தூங்கற சுகமே தனிதான்.சின்ன வயசுல எங்கம்மா தளியல் போடும்போது நாங்க சாப்பிட சாயங்கலம் 3 அல்லது 4 மணியாகிடும்.தங்கள் கருத்துக்கு நன்றி பித்தன்!!

உங்கள் பதிவும் நன்றாகயிருக்கு அதன்மூலம் பலவிஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.நன்றி உங்களுக்கு!!

Thenammai Lakshmanan said...

i like thaiyir satham and paayasam

enna ippidi rendaiyum podama vititinga


plz enaku anuppi vainga i.e padam pa

Menaga Sathia said...

தயிர் சாதம் போட்டோ போடுகிறேன்.பாயாசம் போட்டோ முதல் படத்தில் சுண்டல் பக்கத்தில் இருக்கு அக்கா!!

01 09 10