Tuesday 16 February 2010 | By: Menaga Sathia

முட்டை குழம்பு

தே.பொருட்கள்:

முட்டை - 4
புளி - 1 எலுமிச்சையளவு
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

* புளியை 1கோப்பையளவு கரைத்து அதனுடன் உப்பு+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*வெங்காய்ம்+பூண்டு+தக்காளியை நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளியை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்ததும் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.

*ஒரு முட்டை ஊற்றி வெந்து மேலே வரும்போது இன்னொரு முட்டையை ஊற்றவும்.

*முட்டைகள் வெந்ததும் குழம்பை இறக்கவும்.

35 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

மேனகா,குழம்பில் முட்டை உடைத்து குஞ்சே வந்தது போல் அழகு.ப்ரசெண்டேஷன் அருமை.

Priya Suresh said...

Mutta kuzhambu athuvum udachi vitta mutta kuzhambu yennaku romba pidichathu...udane samachi saapidanam'nu thonuthu..

சாருஸ்ரீராஜ் said...

nan muttai kulambu senchethe illai i will try this

Shama Nagarajan said...

delicious dear...nice one

Prathap Kumar S. said...

ஐ... இது எனக்கு செய்யத்தெரியுமே... சென்னைல இருந்தபோது இதை அடிக்கடிசெய்து சாப்பிடுவேன்...ஏன்னா இது மட்டும்தான் செய்யத் தெரியும்.

என்ன இருந்தாலும் நான் வைக்கிறமாதிரி ருசியா உங்களால வைக்க முடியாது... பெட் :)

புலவன் புலிகேசி said...

இந்த சன்டே செஞ்சிருவோம்...

Thenammai Lakshmanan said...

நான் இப்படி செய்தது இல்லை மேனகா
முழுசா அவித்து உரித்துப்போட்டுத்தான் செய்வேன் இப்படி செய்து பார்க்கிறேன்

Unknown said...

குழம்பு நன்றாக இருக்கு மேனகா நாங்க தேங்காய் பால் ஊற்றி செய்வோம்..

Menaga Sathia said...

உங்கள் பாராட்டு மேலும் ஊக்கத்தையளிக்கிறது.மிக்க நன்றி ஆசியாக்கா!!

எனக்கு உடைத்து ஊற்றி செய்வதுதான் பிடிக்கும்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள்.முட்டையை புளிப்பு சுவையோடு சாப்பிட நன்றாகயிருக்கும்.நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!


சில ஆண்கள் நன்றாக சமைப்பார்கள்.அதில் நீங்களும் ஒருத்தர்.உங்க அளவுக்கு வராதுன்னே ஒத்துக்கறேன்.நன்றி ப்ரதாப்!!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி புலவரே!!


முட்டையை உடைத்து ஊற்றி செய்து பாருங்கள் அக்கா.டேஸ்டாயிருக்கும்.நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

அடுத்த முறை செய்யும்போது தேங்காய் பால் ஊற்றி செய்து பார்க்கிறேன்.நன்றி சிநேகிதி!!

Pavithra Elangovan said...

Looks yumm and nice color to the gravy...

Trendsetters said...

I love muttai kozhumbu...
yours is too good to pass up

ஜெய்லானி said...

நல்லா இருக்கு..

Sanjai Gandhi said...

எங்கம்மா செய்ற முட்டைக் குழம்பு வேற மாதிரி இருக்கும்.. ரொம்ப நல்லாவும் இருக்கும்.. இது வேற மாதிரி இருக்குக்கா.. மைக்ரோவேவ்ல செய்ய முடியாதில்ல..

Priya said...

வாவ், எனக்கு பிடிச்சது!
ஆனா நான் புளி சேர்க்காமல் செய்வேன், இம்முறை உங்க குறிப்பைதான் ட்ரை பண்ணப்போறேன்!

Padma said...

Looks nice spicy and tangy. Perfect with rice. I love egg curry.

Jaleela Kamal said...

மேனகா என்ன இருந்தாலும் நாஞ்சிலார் போல முட்டை குழம்பு உங்களால் வைகக் முடியாதாம் எப்படி கோழிய அப்ப்டியே இறக்கிடுவார்போல.

வாஙக் எல்லாரும் குரூப்பா அஙக் போய்விடலாம் முட்டை குழம்பு சாப்பிட‌


(அருமையான முட்டை குழம்பு, மீன் கிடைக்காத நேரத்தில் முன்பு இது போல் முட்டையை தான் மீன் குழம்பு போல் செய்து சாப்பிடுவோம்.

டவுசர் பாண்டி said...

முட்ட கொயம்பு, பாக்க சொல்லவே தூளா கீது !! அப்போ உங்க ஊட்டுல இன்னிக்கி முட்ட கொயம்பா ? இருக்கட்டும், இருக்கட்டும் .

Perspectivemedley said...

Wow, kuzhambu paarka rombha nalla irruku!.. I like muttai kuzhambu soo much!.. But, I make it with whole boiled eggs :).. ungaludaiya recipe robha nalla iruku!

kavisiva said...

மேனகா இந்த ரெசிப்பியைத்தான் தேடிகொண்டிருந்தேன். என் தோழி வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். விரைவில் செய்து மீண்டும் சுவையோ சுவைன்னு பின்னூட்டம் இட வருவேன் :-)

ஸாதிகா said...

நாங்களும் இதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வோம்.இடியாப்பத்திற்கு செம காம்பினேஷன்.

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி Trendsetters!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி!!

உங்கம்மா செய்கிற முறாஇயும் அவங்கலிடம் கேட்டு ஒரு பதிவு போடுங்க.இதை மைக்ரோவ் அவனிலும் செய்யலாம்.ஆனால் நான் இதுவரை அதில் சமைத்ததில்லை.அதனால் எனக்கு எப்படி செய்றதுன்னு தெரியாது.அவனில் மட்டும் சமைத்திருக்கேன்.நன்றி சகோ!!

Menaga Sathia said...

நானும் இதௌ குருமாபோல் செய்வேன்.ஆனா எனக்கு புளி சேர்த்து செய்வதுதான் பிடிக்கும்.செய்து பாருங்கள்.நன்றி ப்ரியா!!


நன்றி பத்மா!!

Menaga Sathia said...

//மேனகா என்ன இருந்தாலும் நாஞ்சிலார் போல முட்டை குழம்பு உங்களால் வைகக் முடியாதாம் எப்படி கோழிய அப்ப்டியே இறக்கிடுவார்போல.

வாஙக் எல்லாரும் குரூப்பா அஙக் போய்விடலாம் முட்டை குழம்பு சாப்பிட‌// அப்போ நாஞ்சிலார் முட்டை குழம்பு செய்யும்போது நம்மை எல்லோரும் கூப்பிடுவார்ன்னு நினைக்கிறேன்.எனக்கும் மீன் குழம்பு சாப்பிட ஆசை வந்துவிட்டால் இந்த குழம்பை வைத்து சாப்பிடுவேன்.மீன் சுத்தம் செய்து சாப்பிட ஒரு சோம்பேறிதனம்தான்...

Menaga Sathia said...

ஆமா அண்ணாத்தே.எங்க வீட்ல முட்டை கொயம்புதான்.நீங்க வாங்க சாப்பிட.நன்றி அண்ணாத்தே!!


முட்டை அவித்து போடுவடஹி விட உடைத்துவிட்டு போட்டு சாப்பிடுவது ரொம்ப நல்லாயிருக்கும்.செய்து பாருங்கள்.நன்றி தேவி!!

Menaga Sathia said...

ஆஹா ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தீங்களா?அப்போ உடனே செய்து சாப்பிடுங்க.சாப்பிட்டு எப்படி இருந்துதுன்னு சொல்லுங்க.நன்றி கவி!!

உங்கள் முறையிலும் தேங்காய்ப்பால் ஊற்றி செய்து பார்க்கனும்.இடியாப்பத்திற்க்கு தொட்டு சாப்பிட்டதில்லை.நீங்க சொல்ற மாதிரி காம்பினேஷன் ரொம்ப சூப்பராயிருக்கும்.நன்றி ஸாதிகா அக்கா!!

mythoughts said...

ஒரு சந்தேகம்... கூமுட்டை போடலாமா

குலவுசனப்பிரியன் said...

நான் கேள்விப்படாத வித்தியாசமான குறிப்பு. அதுவும் தேங்காய் சேர்க்காததால் ஆரோக்கியமான உணவும் கூட. நான் பிரியாணிகூட தேங்காய்ப்பால் சேர்க்காமல்தான் செய்வேன். இந்த வாரம் எங்கள்வீட்டில் இந்த முட்டை குழம்புதான்.

தாளிக்க: வடகம் என்று கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் வடகம் நிச்சயம் நான் நினைக்கும் அப்பள வகை இல்லை. கடுகை சொல்கிறீர்களா?

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள் சகோ!! வடகம் என்பது என் லேபிளில் கடைசியாக குரிப்பு கொடுத்திருக்கேன் பாருங்கள்.பாண்டிச்சேரியில் இந்த வடகம் இல்லாத சமையல் குறைவு. அது இல்லையெனில் கடுகு+உளுத்தம்பருப்பு+வெந்தயம்+சீரகம்+கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கலாம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!!

குலவுசனப்பிரியன் said...

நன்றிங்க. பார்த்துக் கொண்டேன். தங்கமணி நீலகிரி அங்காடியில் வாங்கி வைத்திருக்கிறாள். பெயர் தெரியாது இருந்தது. உடைத்த முட்டையும் நிரைய வாங்கி வைத்திருக்கிறாள். இப்போதே செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள் சகோ.

//உடைத்த முட்டையும் நிரைய வாங்கி வைத்திருக்கிறாள்.// புரியலையே...

01 09 10