Wednesday 24 February 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் மஞ்சூரியன்/ Oats Manchurian


தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
புட் கலர் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 3
பொடியாக அரிந்த குடமிளகாய் - 1 சிறியது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*அதனுடன் சிறிது+நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதாமவு+உப்பு+கார்ன் மாவு+மிளகுத்தூள்+புட் கலர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவைத்து ஒட்ஸ் உருண்டையை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

*பின் சோயாசாஸ் சேர்த்து சிறிது நீர் தெளித்து கொதித்த பின் பொரித்த ஒட்ஸ் உருண்டைகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

*அசத்தல் சுவையில் இருக்கும் இந்த மஞ்சூரியன்...

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

புதுசாக பார்க்க கலர்ஃபுல்லா இருக்கே.டேஸ்ட் பண்ணி பார்க்கனும் போல இருக்கு.innovative.

சாருஸ்ரீராஜ் said...

wov .very nice menaga oats manjooriyan , no words to say about your recepies superb...

நட்புடன் ஜமால் said...

நாளை மாலை செஞ்சி தாறேன்னு சொல்லிட்டாங்க வீட்ல

ஹையா ஜாலி!

Menaga Sathia said...

டேஸ்ட் செய்து பாருங்க.ரொம்ப நல்லாயிருக்கும் சிக்கன் மஞ்சூரியன் போல்...நன்றி ஆசியாக்கா!!

உங்கள் பின்னூட்டம் இன்னும் உற்சாகம் தருது.நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நாளை மாலை சாப்பிட்டு சொல்லுங்க.நான் சொல்வதை விட நீங்களே டேஸ்ட் செய்து பார்த்தால்தான் புரியும்.நன்றி அண்ணா!!

Kanchana Radhakrishnan said...

புதுசாக இருக்கே.

Gomathy S said...

Pera paathutu enada pudhusa irukku nu paathen..soopper a irukku...try panni paakanum...Oats saapida vaika oru nala idea..

Trendsetters said...

oats is defintely healthy

Vijiskitchencreations said...

வாவ் என்னோட பேபரிட் ஆச்சே. ஆனால் எனக்கு ஒட்ஸ்ஸில் சாப்பிடதே கிடையாது. நான் கூட போன வாரம் வெஜ் மஞ்சூரியன் செய்தேன் கூடிய விரைவில் போடுகிறேன்.
ஆமாம் மேனகா உங்களுக்கு ஒட்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும் போல + கல்க்கறிங்க.
அடுத்த தடவை செய்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

என் மனைவி அருகில் நின்று கொண்டு வியப்பாக இவைகளை,உங்கள் ரெசிப்பிகளை பார்ப்பது சுகமாக உள்ளது தங்கச்சி .

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
என் மனைவி அருகில் நின்று கொண்டு வியப்பாக இவைகளை,உங்கள் ரெசிப்பிகளை பார்ப்பது சுகமாக உள்ளது தங்கச்சி .//
கக்கு மாணிக்கம் சார்...உங்கள் துணைவியார் பார்ப்பதோடு சரியா...செய்து உங்களுக்கு சோதனைக்கு தரமாட்டார்களா..?//
அருமையான கட்டுரை சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

Priya dharshini said...

Migavum nandraga seyithuvulleergal

Priya Suresh said...

Unga creativityku oru alave illaya Menaga, ippadi oatsla yenna ellam seiya poringa,, kalakuringaa pa..

Nithu Bala said...

Never thought that we could make manjurian with oats..your are so innovative..very colorful manjurian..it is too tempting..

Thenammai Lakshmanan said...

ம்ம்ம் ஓட்ஸில் மஞ்சூரியனுமா கலக்குறே மேனகா

Mrs.Mano Saminathan said...

ஓட்ஸ் மஞ்சூரியன் ரொம்பவே வித்தியாசமாக இருக்கு மேனகா!

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

01 09 10